- Wednesday
- August 12th, 2026
பொருளாதார மத்திய நிலையம் அமைக்கும் இடம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கிடையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 21 பேரின் ஆதரவுடன் ஓமந்தை தெரிவு செய்யப்பட்டுள்ளது. 2,000 மில்லியன் ரூபாய் நிதியில் அமைக்கவுள்ள இந்த பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியா மாவட்டத்தில் அமைக்குமாறு மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில், வவுனியாவில் எந்த இடத்தில் அமைப்பது என்பது தொடர்பில்...
பெறுமதி சேர் வரி விகிதத்தை அதிகரித்து தேசிய வருமான வரி ஆணையாளர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நூற்றுக்கு 11 வீதமாக இருந்த பெறுமதி சேர் வரியை 15 வீதமாக அதிகரிக்க அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் வாக்குமூலம் அளிக்க அவர் இன்று முன்னிலையான போதே கைது செய்யப்பட்டுள்ளார்.சுமார் 70 மில்லியன் ரூபா பணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
971ஆம் ஆண்டு அரசியல் கைதியாக மட்டக்களப்பில் தான் சிறைவைக்கப்பட்ட சிறைச்சாலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று பார்வையிட்டார். அது தொடர்பான வீடியோவை, ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
யாழ்ப்பாணத்துச் சித்தர் பரம்பரையில் முக்கிய மானவராகக் கருதப்படுபவர் கடையிற் சுவாமிகள். இந்தியாவில் இவர் நீதிபதியாக இருந்த போது சட்டத்திற்கிணங்க குற்றவாளி யொருவருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கி விட்டாராம். இதனால் இவருடைய மனசாட்சியில் ஏற்பட்ட ஒரு வித உறுத்தல் தான் அவரது துறவு வாழ்க்கைக்குக் காரணமாம். இலங்கையின் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசரொருவர், தான் வழங்கிய ஒரு...
அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை இலங்கை வரவுள்ளார். இவருடன் அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான பிரதி உதவிச் செயலாளர் மன்பிரீட் சிங்கும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார். இவர்கள் இந்த விஜயத்தின்போது அரசியல் தலைவர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், சிவில் சமூகத் தலைவர்கள்...
வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைப்பதற்கு 2010ஆம் ஆண்டு காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார். வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படவிருக்கும் காணிகளை நேற்று முன்தினம்(சனிக்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர்...
மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு வரமறுத்த இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் பொறித்த நினைவுக்கல்லை, அவர் மீது கொண்ட ஆத்திரத்தினால் அடித்து நொக்கினார் விகாராதிபதி. ஜனாதிபதி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்புக்கு பயணம் செய்து மட்டக்களப்பு விமானநிலையத்தைத் திறந்துவைத்தார். மட்டக்களப்புக்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேனவை மட்டக்களப்பு விகாரைக்கு வருமாறு மங்களராமய விகாரையின் விகாராதிபதி வண.அம்பிட்டியே சுமணரத்ன தேரர்...
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்வதற்கு யாழ் மேல் நீதிமன்றத்தில் மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகளை அமைத்து விசாரணை நடாத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற வித்தியாவின் கூட்டு வன்புனர்வு நாட்டை பெரும் அதிர்ச்சிக்கும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகளை முடித்துள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர்...
புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு விமானப்படை முகாம் விமான ஓடுபாதை மற்றும் பயணிகள் இறங்குதுறை ஆகியன நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்துவைக்கப்பட்டது. நவீனமயப்படுத்தப்பட்ட விமான ஓடுபாதையில் வந்திறங்கிய முதலாவது விமானத்தில் ஜனாதிபதி பிரயாணம் செய்தமை விசேட நிகழ்வாகும். இதன்போது ஜனாதிபதிக்கு விமானப்படை அணிவகுப்பு மரியாதை கிடைக்கப்பெற்றதுடன் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ககன புலத்சிங்களவினால்...
தனியார் பஸ் கட்டணங்களை 6 தொடக்கம் 7 சதவிகிதம் அதிகரிப்பதற்கான அனுமதியை வழங்க அரசு தீர்மானித்திருக்கின்றது என போக்குவரத்து அமைச்சின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. அதன்பிரகாரம் தற்போது 8 ரூபாவாகவுள்ள ஆகக்குறைந்த கட்டணம் 9 ரூபாவாகவும், 12 ரூபா கட்டணம் 13 ரூபாவாகவும் உயரலாம் எனவும், பஸ் உரிமையாளர்களையும் பயணிகளையும் பாதுகாக்கும் நோக்கத்திலேயே இந்த உயர்வு...
தமிழ் ஊடகவியலாளர்களுக்கான முழுநாள் செயலமர்வு ஒன்றை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருக்கின்றது. இம்மாத இறுதியில் கொழும்பில் நடைபெறவிருக்கும் இந்த செயலமர்வில் தகவல் அறியும் சுதந்திரம் முதல் ஊடகவியலாளர்களின் உரிமைகள் வரையில் பல்வேறு விடயங்களும் உள்ளடக்கப்படுகின்றன. இதில் பங்கு கொள்ள விரும்பும் ஊடகவியலாளர்கள் tmailmedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகத் தம்முடன் தொடர்புகொண்டு தங்களுடைய விபரங்களுடன்...
இந்திய மீனவர்கள் வடபகுதி கடற்பரப்பில் இரண்டு நாட்கள் மீன்பிடித்தொழிலை செய்வதற்கான கோரிக்கையினை நிராகரிக்க வலியுறுத்தி வடபகுதி மீனவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, வடமாகாண கடற்றொழிலாளர் கூட்டுறவு இணையத்தின் தலைவர் எம்.என்.ஆலம் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 12ம் திகதி (நாளை) செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர்கள்...
இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை நகர்ப்புறத்திலா அல்லது நகருக்கு வெளியிலா அமைப்பது என்பதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள இழுபறி நிலை இறுதி முடிவின்றி தொடர்கின்றது. வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அரசினால் வழங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தை வவுனியா நகரில் இருந்து 2 கிலோ மீட்டர்...
இன்று நாடு பூராகவுமுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றர் தொடக்கம் 70 கிலோ மீற்றர் வரை வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமெனவும் குறித்த திணைக்களத்தின் வானிலை ஆய்வாளரான மலிந்த...
வட மாகாண சபையின் புதிய உறுப்பினராக செ. மயூரன், நேற்று சனிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின், சுழற்சி முறை ஆசனத்துக்கான உறுப்பினராக இதுவரை பதவி வகித்து வந்த எம். பி. நடராசா, கடந்த மாதம் முதலாம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்திருந்த நிலையில் அடுத்த சுழற்சி முறை ஆசனத்துக்காக செ.மயூரன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்....
இருநாட்டு மீனவர்களது, 4ஆம் கட்ட பேச்சுவார்த்தையை நடாத்துவதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தாங்கள் சந்திக்க வேண்டும் என்று வடபகுதி மீனவர்கள் கோரிக்ககையை விடுத்துள்ளனர். தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரம் வழங்குவது உள்ளிட்ட வடபகுதி மீனவர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாகவே இவ்விருவருடன் பேச்சுவார்த்தை...
ஊடகங்களின் பொறுப்பு, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை செய்வதே தவிர அவர்களை வழிகெடுப்பது அல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பேராதனை ஸ்ரீ சுபோதிராம விகாரையில், நேற்று (09) பிற்பகல் இடம்பெற்ற புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'இன்னும் இரு வாரங்களுள்...
எதிர்வரும் பத்து வருடங்களுக்குள் நாட்டின் தென்னை உற்பத்தியை இரண்டு மடங்கு அதிகரிக்க வேலைத் திட்டங்களை தாம் ஆரம்பித்துள்ளதாக, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் இரண்டாவது முக்கோண தென்னை பயிர்ச் செய்கை வலயத்தை யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தென்னை அபிவிருத்தி விரிவாக்கல் செயற்திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட கைத்தொழில்...
இலங்கையில் காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்களான பெண்களிடம் கையூட்டு மற்றும் பாலியல் கையூட்டு கோரப்பட்டுள்ளதாக பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பைச் சேர்ந்த ஸ்ரீன் ஸரூர் என்ற பெண்மணி தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பு கூறும் விடயத்தில் காணமால் போயுள்ளவர்கள் பற்றி நம்பகமான விசாரணை நடத்துவதற்காக, அரசாங்கத்தினால் புதிதாக அமைக்கப்படவுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகம் குறித்து பொது...
Loading posts...
All posts loaded
No more posts
