- Wednesday
- August 12th, 2026
வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கும் மத்திய விவசாய அமைச்சர் துமிந்த திசநாயாக்காவுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை (09.07.2016) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. வடக்கு விவசாய அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது மத்திய விவசாய அமைச்சர் துமிந்த திசநாயாக்கா வடக்கின் விவசாயத்தேவைகள் குறித்து அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கேட்டறிந்து கொண்டார். இச்சந்திப்பு பற்றி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கருத்துத் தெரிவிக்கையில்,...
வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுவதற்கான காணிகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பார்வையிட்டுள்ளனர். இதற்கமைய தாண்டிக்குளம் மற்றும் ஒமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணியை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் பார்வையிட்டுள்ளனர். இது தொடர்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழ்...
புத்தூர் வாதரவத்தை வீதியில் தனிமையில் சென்ற பெண்ணுடன் பாலியல் சேட்டை புரிந்த இருவரை அச்சுவேலி பொலிசார் கைது செய்துள்ளனர். ஆவரங்கால் கிழக்கு, புத்தூர் கிழக்கை சேர்ந்த 35, 39 வயதான ஆசாமிகள் என்பதும், கைது செய்யப்படும் போது அவர்கள் போதைப்பொருள் உட்கொண்ட நிலையில் காணப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று மதியம் இந்த சம்பவம் நடந்துள்ளது. மதுபோதையில்...
வடமராட்சி பருத்தித்துறை ஏழாம் கட்டைச் சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு 7.15 மணியளவில் இ.போ.ச பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் சிங்கைநகர் புலோலி தெற்கைச் சேர்ந்த மினிஸ்வரன் விஜிதரன் (வயது 26) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். சிங்கை நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து பருத்தித்துறை...
இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட விநாடி நீளம் அதிகமாக இருக்கும். நிலையான நேரத்தை கணக்கிடும் வகையில் கூடுதலாக ஒரு விநாடியை சேர்க்க சர்வதேச நேரத்தைக் கணக்கிட்டு வரும் அமெரிக்கக் கடற்படை வானாய்வு அமைப்பு முடிவு செய்துள்ளது. பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர 24 மணி...
இணுவிலில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நாளை செந்தமிழால் திருக்குடமுழுக்கு நடைபெற்று பிரதிஷ்டை செய்யப்படவுள்ள சிவலிங்கத்தை படத்தில் காணலாம். இராவணேஸ்வரன் தாங்கியுள்ள இச்சிவலிங்கத்தை அடியவர்கள் நேரில் தரிசித்து மலர் தூவி வழிபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்புடைய செய்தி யாழில் இராவணனுக்கு ஆலயம்!! செந்தமிழில் பூஜை வழிபாடுகள்!!
இறுதி யுத்தத்தின்போது சிறீலங்கா இராணுவத்தினர் கொத்துக்குண்டுகளை வீசவில்லையென போரை வழிநடத்திய இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்துடன் கொத்துக் குண்டுகளை வாங்குவதற்கான பணபலம் தம்மிடம் இருக்கவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தில் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தவில்லை. அதனை வாங்குவதற்கான பணபலமும் எம்மிடமிருக்கவில்லை. இது தொடர்பாக நான் சாட்சியமளிக்கவும் தயாராக...
அரியாலை நாயன்மார்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்துறையில் வசித்து வந்த இளைஞரே அரியாலை நாயன்மார்கட்டுப் பகுதியில் மரக்கொப்பில் இன்று தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைவதே பொருத்தமானது என்று ஈழக் கவிஞரும் நடிகருமான வ.ஐ.ச. ஜெயபாலன் கூறுகிறார். வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் பற்றிய சர்ச்சை குறித்து தனது முகநூலில் பதிவிட்ட கருத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது குறிப்பு. 1977 இனக்கலவரம் வரைக்கும் யாழ்பாணம் மாவட்ட சந்தைகளுக்கு நேரடியாகவே சிங்களப் பகுதிகளில் இருந்து...
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தை பிரதேசத்தில் அமைப்பதற்கு உகந்ததாக அமையுமா என்பது தொடர்பில் ஆராய்வு செய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுவொன்று குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான குழுவினரே இன்று சனிக்கிழமை ஓமந்தை பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளனர். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்...
இலங்கைத் தீவு இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை விரைவில் செயற்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கையினை வெகு விரைவில் மேற்கொள்ள வேண்டும் என சிறிலங்கா பொறியியலாளர் நிறுவனத்தின் மின் சக்தி குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்சார செலவுகள் உயர்வடைந்துள்ளமையினால் மீண்டும் மின்சாரம் தடையேற்படுவதற்கான ஆபத்துக்கள் காணப்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கை...
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்த பின்னர் சிறீலங்கா இராணுவத்தினரால் விடுதலைசெய்யப்பட்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய முன்னாள் போராளிகள் பலர் அண்மைக்காலமாக பல வகைப்பட்ட நோய்களினால் இறந்து வருகின்றனர். இதுவரையிலும் ஏறத்தாள 100 இற்கு மேற்பட்ட போராளிகள் இறந்துள்ளதாக தாயகத்து தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயினால் பாதிப்படைந்தே இறந்துள்ளனர். இவர்களில் விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் பிரிவு...
கல்குடா காவல்துறைப் பிரிவில் தமிழர் ஒருவர் சிங்கள இனத்தவர்களால் தலையில் பலமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதையடுத்து கல்குடா பகுதியில் பதற்ற நிலை நிலவுவதாகத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலை நடைபெற்றுள்ளது. கல்குடா பிரதான வீதியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தங்கராசா வயது (51) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த...
யாழ்ப்பாணம் தொழில் அலுவலகத்தின் புதிய அலுவலக அங்குரார்பண நிகழ்வு, நேற்று வெள்ளிக்கிழமை (08), யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் விருந்தினர்களாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்ன, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர, சிறுவர் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர்...
'யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் கஞ்சா மீட்புக்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிடுவதனூடாக, யாழ். மாவட்டத்தின் மீதான வெளிச்சமூகத்தின் பார்வை மாற்றமடைந்து எமது சமூக கலாசாரம் மழுங்கடிக்கப்படுகிறது' என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தெரிவித்தார். யாழ். மாவட்ட சிவில் சமூக பாதுகாப்பு குழுக்கூட்டம், நேற்று வெள்ளிக்கிழமை (08), யாழ். மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது....
"இலங்கையின் உள்நாட்டு நிர்வாகத்திலோ அல்லது நீதித்துறையின் செயற்பாடுகளிலோ வெளிநாட்டு நீதிபதிகளோ அல்லது சர்வதேச நீதித்துறை சார்ந்தவர்களோ தலையிடுவதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை." இவ்வாறு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. பாணந்துறை நகரசபை விளையாட்டரங்கில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற ஸ்ரீ ராமான்ய மகா நிக்காயாவின் முக்கிய சமய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு...
கூட்டு எதிர்க்கட்சி நேற்றுமுன்தினம் நிறுவிய நிழல் அமைச்சரவை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நிழல் அமைச்சரவையில் வழங்கப்பட்டுள்ள பிரதமர் மற்றும் ஏனைய அமைசுக்களிலிருந்து தன்னை நீக்குமாறும் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார் என்று அரசியல் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. நிழல் அமைச்சரவை ஒன்றை...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர் சங்கத்தினர் வெள்ளிக்கிழமையன்று மேற்கொள்ளவிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு யாழ் மேல் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் சிவநாதன் ஜமுனானந்தாவை மனுதாரராகக் கொண்டு, சட்டத்தரணி திருக்குமரனால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற...
நாட்டின் பொருளாதாரத்தைத் தாங்கும் பிரதான தூண்களாக அரசதுறையும் தனியார்துறையும் விளங்குகின்றன. அத்தோடு, நாட்டின், குறிப்பாக வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தைத் தாங்கும் மூன்றாவது தூணாகக் கூட்டுறவுத்துறையைப் பலப்படுத்துங்கள் என்று வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கேட்டுக்கொண்டுள்ளார். வலிகிழக்கு வடபகுதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினால் சர்வதேச கூட்டுறவு தினவிழா நேற்று வெள்ளிக்கிழமை (08.07.2016) கொண்டாடப்பட்டது. புத்தூரில் அமைந்துள்ள சங்க...
போலி விசா அனுமதிப்பத்திரத்தைக் கொண்டு, கனடாவுக்கு பயணிக்க முயற்சித்த இலங்கையர்கள் நால்வரை, குற்றப்புலனாய்புப் பிரிவினர், இன்று வெள்ளிக்கிழமை (08), கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். இவர்கள், யாழ்ப்பாணத்தின் முள்ளிபுரம் மற்றும் இளவாலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 முதல் 33 வயதுக்கிடைப்பட்ட இளைஞர் யுவதிகளே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் சகோதர...
Loading posts...
All posts loaded
No more posts
