- Wednesday
- August 12th, 2026
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு இருந்த மக்கள் காணிகளின் சில பிரிவுகள், அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் எஞ்சியுள்ள மக்களின் வீடுகள், தளபாடங்கள் இடித்து அழிக்கப்பட்டு களவாடப்படுகின்றது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்த, மீள்குடியேற்ற பகுதிகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்...
இணைந்த வடக்குக் கிழக்கில் சமஸ்டி முறையிலான அரசியலமைப்பு மாற்றத்தினையே வட மாகாண மக்கள் கோரி நிற்கின்றனர், என அம் மாகாண கல்வி அமைச்சர் த. குருகுலராஜா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா ஆகியோரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சார்பில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசியலமைப்பு பேரவையின் வழிநடத்தற் குழுவின் முன்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் தனக்கு இனம்புரியாத கவலையை ஏற்படுத்தியதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்குப் பயணம்மேற்கொண்ட சுகாதார அமைச்சர் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமைக்காகச் செயற்பட்ட பல்வேறு...
முச்சக்கர வண்டி விபத்தின்போது உயிரிழக்கும் முச்சக்கரவண்டிச் சாரதியின் குடும்பத்தினருக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடும் அதில் பயணிக்கும் பயணிகளின் குடும்பத்திற்கு தலா 1 இலட்சம் ரூபாவும் இழப்பீடாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து பிரதி காவல்துறை மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார். இவ்வருடத்தின் ஆரம்பத்திலிருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் முச்சக்கர வண்டி விபத்தின்போது 67பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
கதிர்காமம் ஆலயததுக்குச் செல்ல, இலங்கை போக்குவரத்துச் சபையினால், விசேட பஸ் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என யாழ். சாலை முகாமையாளர் எஸ்.குலபாலசெல்வம் தெவித்தார். கதிர்காமக் கந்தன் தீர்த்தத் திருவிழாவை முன்னிட்டு, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 18, 19, 20ஆம் திகதிகளில், யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து, கதிர்காமம் நோக்கிப் பயணிகளின் வருகைக்கு ஏற்ப விசேட...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, வியாழக்கிழமை (07) சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்ற வடக்கு முதலமைச்சருக்கு தொடர்ந்து சிகிச்சை அவசியம் என்ற வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைவாக வைத்தியசாலையில் தங்கி...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நீண்ட காலமாக சுகாதார தொண்டர்களாக கடமையாற்றிய 127 பேருக்கும் சுகாதார ஊழியர்களாக நிரந்தர நியமனம் வழங்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்து சுகாதார அமைச்சருக்கு, நியமனம் பெற்றவர்கள் நேற்று வியாழக்கிழமை (07) பாராட்டு விழா நடத்தினர். யாழுக்கு விஜயம் செய்த சுகாதார, சுதேச மற்றும் தேசிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, யாழ். போதனா...
அருந்ததியில் அதிரடியான ரோலில் நடித்த அனுஷ்கா, ராணி ருத்ரம்மா தேவியில் சண்டை காட்சிகளிலும் நடித்து கலக்கினார். பாகுபலியில் அவருக்கு ஆக்சன் காட்சிகளில் இல்லை என்றபோதும, பாகுபலி-2வில் ஆக்சன் காட்சிகள் உள்ள தாம். இந்தநிலையில், சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 57-வது படத்தில் நாயகியாக நடிக்கும் அனுஷ்காவுக்கு இந்த படத்தில் ஆக்சன் ஹீரோயினி வேடமாம். வெளிநாட்டில் அவருக்கான...
யாழ்ப்பாணத்தில் படையினர் வசமுள்ள காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாத நிலையிலும் எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதிக்கு முன்னர் மீள்குடியமர்வை முழுமையாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ்.மாவட்ட அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் உறுதியாக தெரிவித்தன. எந்தெந்தெக் காணிகள் விடுவிக்கப்படும் என்று தெரியாத நிலையில் இன்னும் ஒரு மாத காலத்துக்குள் மீள்குடியமர்வை எப்படிச்செல்வது எனத் தெரியாது...
இராணுவத்தினர் வசமிருந்த கட்டுவன் சந்தி 26 வருடங்களின் பின்பு மக்கள் பாவணைக்காக நேற்று முதல் மக்களுடைய திறந்து விடப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து கட்டுவன் சந்திவரை செல்லும் சுமார் 600 மீற்றர் வரையான வீதியே இதன்போது விடுவிக்கப்பட்டுள்ளது. வல்லை அராலி வீதியில் 600 மீற்றரும் வல்லை-கட்டுவன் –மல்லாகம் வீதியில் 300 மீற்றரும் இராணுவத்தின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டன....
மிரட்டல்கள் அச்சுறுத்தல்களுக்கு தாம் அடிபணியப் போவதில்லை புளொட் அமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். "பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமைய வேண்டும். அதுவே பொருத்தமான இடமாகவும் விளங்குகின்றது. எமது மக்களின் விருப்பமாகவும் அது இருப்பதுடன் அதனாலேயே மக்களுக்கு பல்வேறு நன்மைகளும் ஏற்படும். இதனை விடுத்து சிலர் எங்கள் மக்கள் மீது...
MOL Benefactor’ என்னும் 10,000 TEUS (20 அடி கொள்கலன்கள் 10,000) கொள்ளளவு உடைய ஜப்பானின் பிரபல கப்பல் நிறுவனமான Mitsui O.S.K lines னுடைய கொள்கலன் கப்பல் (Neopanamax Container ship) விஸ்தரிக்கப்பட்டு அண்மையில் திறக்கப்பட்ட பனாமாக் கால்வாய் (Expanded Panama Canal) வழி முதலாவதாக வர்த்தக ரீதியான பயணத்தை கடந்த 1 ஆம்...
யாழ். மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளரை இன்று லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆயிரம் சைக்கிள்கள் விநியோகம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பொருள்கள் கொள்வனவுகளுக்குரிய விவரங்களுடன் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சைக்கிள்கள் விநியோகிக்கப்பட்டமை, மற்றும் பொருட்கள்...
வடக்கில் உள்ள மக்கள் யுத்தத்தின் வலிகளை சுமந்தவர்களாக உள்ளனர் என்று சுகாதார, போசாக்கு மற்றும் தேசிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். நச்சுத்தன்மையற்ற மருந்துக்கள் குறித்த அரச பொறிமுறையை அறிவூட்டும் மாவட்ட வேலைத்திட்ட கூட்டம், நேற்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலத்தில் இடம்பெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்....
ஸ்ரீலங்காவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு வழங்கிவரும் கூட்டு எதிர்கட்சியினர் முதல்முறையாக நிழல் அமைச்சவையொன்றை உருவாக்கியுள்ளனர். இதன்பிரகாரம் மஹிந்த ராஜபக்ச நிழல் பிரதமராகவும் தேசிய பாதுகாப்பு சிறப்புரிமைகள் மற்றும் மத விவகார அமைச்சராகவும் பெயரிடப்பட்டுள்ளார். பந்துல குணவர்தன நிழல் நிதி அமைச்சராகவும் நாமல் ராஜபக்ச நிழல் வெளிவிவகார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விமல் வீரவங்ச, வீடமைப்பு...
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஒமந்தையில் அமைக்கப்பட வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை தீர்மானம் மேற்கொண்டுள்ளது. வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து தமிழ் மக்கள் பேரவையின் சமூக, பொருளாதார வலுவூட்டலிற்கான உபகுழுவின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் வடமாகாணத்திற்கான பொருளாதார...
புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் போராளிகள் 103 பேர் புற்றுநோயினால் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தேசிய ஆராய்ச்சிப் பேரவை சட்ட மூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...
கடந்த வியாழக்கிழமை ஒட்டுசுட்டான் சிவநகர் பகுதியில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளித் தம்பதிகளுக்கு வவுனியா நீதிமன்றம் பிணை அனுமதி வழங்கியுள்ளது. வவுனியா நீதிமன்றத்தின் நீதிபதி லெனின்குமார் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே நீதிபதியால் பிணை அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், கடந்த புதன்கிழமை இவர்கள் இருவரையும் வவுனியா காவல்துறையினர் கைதுசெய்யவில்லையென ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்த போதிலும் நேற்றயதினம் அவர்களே இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில்...
வடக்குக் கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் காணாமல்போன அல்லது கொல்லப்பட்ட 41 ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளுமாறு வடபகுதி ஊடகவியலாளர்கள் சிறீலங்கா அதிபர் மற்றும் பிரதமரிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர். வடக்குத் தெற்கு ஊடகவியலாளர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் வடபகுதி ஊடகவியலாளர்கள் குழுவொன்று கடந்த வியாழக்கிழமை தென்பகுதிக்கு பயணமொன்றை மேற்கொண்டுள்ளனர். இந்தக் குழுவினர் நேற்று (வியாழக்கிழமை) சிறீலங்கா அதிபர்...
எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் 'ஆறிப்போன காயங்களின் வலி' நூல் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் ச.ராதேயன் தலைமையில் எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இந்த நூல் அறிமுக நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் எஸ்.ஜீவசுதன் மற்றும் உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோகரன் ஆகியோர்...
Loading posts...
All posts loaded
No more posts
