ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் யாழ்.மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முக்கிய இடம்

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் நடந்து முடிந்துள்ள 32ஆவது கூட்டத் தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைன் வெளியிட்ட வாய்மொழி மூல அறிக்கையில் யாழ்.மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றுக்கு முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டம் விசுவமடு மீள் குடியேற்றப் பிரதேசத்தில்...

நீதிமன்றத் தீர்ப்புகள் மக்களைப் பாதுகாக்கும் கேடயங்களாக மாற வேண்டும்!

போதைப் பொருட்கள் தொடர்பான குற்றங்களை இழைத்தோரின் கருணை மனு நிராகரிக்கப்படும் என, யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். சட்ட விளைவுகள் தெரியாமல் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றச் செயல்களைப் புரிவோரின் கருணை மனுக்கள் கவனத்தில் எடுக்கப்பட மாட்டாது, பிணை கோரி செய்யப்படும் அத்தகைய மனுக்கள் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்படும்...
Ad Widget

யாழில் ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளை

இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளை விற்பனை அலுவகத் தொகுதி ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் லால் விக்கிரமரட்ண தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில், பிரதம அதிதியாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கலந்து கொண்டதோடு, பிரதி அமைச்சர் பைசல் கசீம், சிறுவர் மற்றும் மகளிர் விவகார...

அரசாங்க ஊழியர்களுக்கு காணி வழங்கும் வேலைத் திட்டம் விரைவில்

காணியற்ற அரசாங்க ஊழியர்களுக்கு காணி வழங்கும் வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரு நாட்களுக்குள் இந்த வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக, அவர் கூறியுள்ளார். அம்பலாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

பிள்ளையார் ஆலயத்தை உடைத்து பௌத்த விகாரை கட்டிய இராணுவம் :சர்வதேச இந்துமத குருபீடம் கண்டனம்

இந்துக்களின் புனித பூமியாக விளங்கும் வடக்கில் இந்து ஆலயத்தை உடைத்து அழித்து பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளமையை சர்வதேச இந்து மத குருபீடத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம் என சர்வதேச இந்து மத குரு பீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஒவ்வொரு மனிதனும்...

எங்களை நிம்மதியாக படிக்க விடுங்கள்! கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பிடம் கோரிக்கை

தாம் நிம்மதியாக கல்வி கற்க உதவுமாறு வவுனியா விவசாய கல்லூரி பழைய மாணவர்களும், புதிய மாணவர்களும் இணைந்து கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, பல மாணவர்கள் பல்வேறு இலட்சியங்களுடனும், எதிர்பார்ப்புகளுடனுமே கல்வி கற்கின்றனர். எமது குடும்பங்கள் கூட பல்வேறு கஸ்ட நிலைகளுக்கு மத்தியிலேயே எம்மை படிக்க வைத்துள்ளார்கள். இன்று தென்னிலங்கையில் உள்ள...

தாய்ப்பால் புரையேறி சிசு பரிதாபமாகப் பலி

பிறந்து 35 நாட்களேயான ஆண் சிசுவொன்று, நேற்று புதன்கிழமை (06) தாய்ப்பால் புரையேறியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது என வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவத்தில் கல்விளான் சுழிபுரம் பகுதியினைச் சேர்ந்த கிருபாகரன் லேசாக் என்ற சிசுவே உயிரிழந்துள்ளது. நேற்று அதிகாலை, சிசு அழுத போது அரவணைத்துப் பால் கொடுத்த தாய் நித்திரைத் தூக்கத்தில் அயர்ந்து போயுள்ளதாகக்...

சுற்றுலா மையங்களை இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர்

“வடமாகாண சபைக்கு சொந்தமான பல சுற்றுலா மையங்களை இரானுவத்தினர் கையகப்படுத்தியுள்ளனர்” என வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் குருகுலராஜா தெரிவித்தார். வடமாகாண சுற்றுலா மையம் நேற்று மாங்குளத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “2010ஆம் ஆண்டு போர் முடிந்துவிட்ட...

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை

பாலியல் வதை, போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனை குற்றம் சாட்டப்படுகின்ற தனியார் நிறுவனங்கள் உடனடியாக இழுத்து மூடப்படும். அந்த நிறுவனங்களின் பொறுப்பாளர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை செய்துள்ளார். இத்தகைய வழக்கு விசாரணைகள் முடியும் வரையில் சம்பந்தப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்கள் செயற்படுவதற்கு...

கொத்தணிக் குண்டுகள் தொடர்பான நான் வெளியிட்ட கருத்து சட்டரீதியான நிலைப்பாடே

கொத்தணிக் குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து, சட்டரீதியான நிலைப்பாடே என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். சிறிலங்கா படையினர் போரில் கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட, அது சட்டவிரோதமானது அல்ல என்றும், 2010ஆம் ஆண்டே, கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்யும் அனைத்துலக பிரகடனம் நடைமுறைக்கு...

புலியுடன் உறவாடியவரின் நண்பனை நம்புகின்றோம்

'தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்பினை பேணிவந்த மற்றும் சர்வதேச நிதி மோசடி குற்றச்சாட்டில் சிறைவாசம் அனுபவித்துவருகின்ற ராஜ் ராஜரட்ணத்தின் நண்பனான மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியை, நாங்கள் நம்புகின்றோம்' என்று, முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 'ராஜ் ராஜரட்ணத்தின் நிறுவனத்தில் பணியாற்றினார் என்றொரு விடயத்துக்காக மட்டுமே, மத்திய...

133 பொருட்களுக்கும் 21 சேவைகளுக்கும் ‘வற்’ இல்லை

அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட 133 பொருட்கள் மற்றும் 21 சேவைகளுக்கு, வற் (பெறுமதி சேர் வரி) உள்ளடக்கப்படமாட்டாது என்று தெரிவித்த அரசாங்கம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், அசாதாரண முறையில் அதிகரிக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு, விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...

குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கிளிநொச்சி இளைஞன் கைது

போலியான விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்வதற்கு முயன்ற வடக்கைச் சேர்ந்த இளைஞனை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். 36 வயதான சந்தேகநபர், கிளிநொச்சி பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்று அறியமுடிகின்றது. சந்தேகநபர், ஓமான் விமான சேவைக்கு உரிய விமானத்தில், மஸ்கட் ஊடாக இத்தாலிக்கு செல்லும் நோக்கிலேயே விமான...

11 வயது மாணவி மாயம்; பெற்றோர் பரிதவிப்பு

இரத்தினபுரி, நிவித்திகலை சிதுறுபிட்டியவில், 50 வயதுடைய நபரினால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 11 வயது மாணவியான எஸ்.சரோஜினியைக் கண்டறிய, துரித நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் என, தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், இரத்தினபுரி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இ/நிவி/தேலை தமிழ் ஆரம்ப பாடசாலையில், தரம்...

21,663 சிங்கள, முஸ்லிம் குடும்பங்களை வடக்கில் குடியமர்த்தும் பணி தீவிரம்!

போரின்போது வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் அரசு ஆரம்பித்துள்ளது. இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கைத்தொழில் அமைச்சு, மாகாண அமைச்சு ஆகியவற்றின் இணைத்தலைமையில் செயலணியொன்று அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. "வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களில் 21 ஆயிரத்து 663 குடும்பங்களுக்கு வீடுகள் தேவைப்படுகின்றன. அதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும்...

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்த செயலணி!

உள்நாட்டில் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் வசித்து வரும் மக்களை மீண்டும் அவர்களது இடத்தில் குடியமர்த்துவதற்காக விசேட செயலணியொன்றினை அமைப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவ்வகையில் வடக்கில் இடம்பெயர்ந்த சிங்கள முஸ்லிம் மக்களுக்காக 21,663 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதோடு அரசியல் உரிமைகளுடன் அவர்கள் தமது இடங்களில் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். அதேவேளை மீள்குடியேற்றம் தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும்...

குற்றம் இழைத்திருப்பின் தண்டிக்கப்பட வேண்டும்!

இராணுவத்தைச் சேர்ந்த சிலரோ, அரசாங்கத்திலுள்ள சிலரோ நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால், தண்டிக்கப்பட வேண்டும் என, வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிரேமவதி மனம்பேரி சம்பவம் தொடர்பில் இவ்வாறாக குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு...

யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில், பெருநாள் தொழுகை (படங்கள்)

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் நாடெங்கும் முஸ்லிம் பெருமக்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வேளையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியாக் கல்லூரி அருகே உள்ள ஜின்னா மைதானத்தில் இன்று காலை 7 மணியளவில் சிறப்பு தொழுகை ஒன்று இடம்பெற்றது. இதன் போது பொம்மைவெளி அபூபக்கர் பிரதான இமாம் எம்.பரூஸ் தொழுகையை மேற்கொண்டார். இதன்போது பெருந்திரளான...

முன்னாள் போராளிகளான தம்பதியினர் கைது

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் சிவநகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளான தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு 7.30 அளவில் இடம்பெற்றுள்ளது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிசாரினால் இவர்கள் இருவரும் கைதுசெய்து அழைத்துச் சென்றதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து இந்தக் கைது தொடர்பில் ஒட்டுசுட்டான் மற்றும் வவுனியா...

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை ஆய்வு செய்ய குழு

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. இதற்காக ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்று உருவாக்கப்படவுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவிலாளர் சந்திப்பின்போது, அவர் இன்று இதனைக் கூறியுள்ளார். பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி விளக்கமளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க குறித்த...
Loading posts...

All posts loaded

No more posts