- Wednesday
- August 12th, 2026
பொலனறுவை மாவட்டத்தின் தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை கருத்தில் கொண்டு வட மத்திய மாகாண கல்வி திணைக்களம் பட்டதாரி ஆசிரியர்களை சேர்த்துக் கொள்வதற்கு இதற்கு முன் எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை என, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார். நிலையில் கட்டளை 23/2இன் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்த, பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு...
வல்லை-அராலி வீதியில் கட்டுவன் சந்திவரை விடுவிக்க சாதகமான முடிவை வழங்கியுள்ளதாக யாழ்.மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவித்தன. அதிகாரிகளுக்கும் இராணுவத் தரப்பிற்கும் இடையிலான பேச்சுக்களின் ஊடாக இவ்வாறு இணக்கம் காணப்பட்டது. வலி.வடக்கில் 201 எக்கர் கடந்த மாதம் 25 ஆம் திகதி விடுவிக்கப்பட்டது. வல்லை-அராலி வீதியில் கட்டுவன் சந்திப் பகுதி இந்த விடுவிப்பில் உள்ளடக்கவில்லை. இதற்குப் பதிலாக...
சிவபூமியான ஈழமணித் திருநாட்டின் யாழ்ப்பாண இராசதானியின் இணுவையம்பதியில் சிவஞான சித்தர் பீடத்தின் அருளாசியுடன், சைவ மகா சபையின் ஆதரவுடன் சைவநெறிக் கூடத்தினரால் ஞானலிங்கேசுவரர் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஐந்து தளக் கோபுரத்துடன் இராவணேசுவரன் தாங்குகின்ற உள்ளங்கவர் ஞான லிங்கத்தைக் கொண்ட வகையில் அமைக்கப்பட்டுள்ள இவ்வாலயத்தின் கருவறையில் இலங்கையிலேயே விசேடமாக செந்தமிழால் தினமும் வழிபாடு ஆற்றப்படவுள்ளது. சிவ விரதங்களில்...
நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்வடைந்து வரவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக அரிசி, சீனி, மரக்கறிவகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் துரிதகதியில் உயர்வடைந்துள்ளதனால் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர். தற்போது வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோ 75 ரூபா, சாதாரண சம்பா அரிசி ஒரு கிலோ...
போக்குவரத்து ஒழுங்குகளை மீறும் சாரதிகளுக்கு தண்டப்பணத்தை செலுத்தும் காலம் நீடிக்கப்படவுள்ளது. இதுவரைக்காலமும் தண்டப்பணம் செலுத்துவதற்கான காலம் 14 நாட்களாக இருந்தன. புதிய முறையின்படி அது 30 நாட்களாக நீடிக்கப்படவுள்ளது. இதேவேளை விபத்துக்களின்போது காயங்களை ஏற்படுத்தும் அல்லது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் சாரதி ஒருவர், தமது தண்டப்பணத்தை தாம் விரும்பிய நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் பிரசன்னமாகாது,...
யாழ்.திருநெல்வேலி சந்தை இறைச்சிக்கடை தொகுதி பெரும் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியில் இயங்குவதாகவும், அதனால் அப்பகுதிக்கு செல்ல முடியாத தூர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்களால் குற்றம் சாட்டப்படுகின்றது. திருநெல்வேலி சந்தையில் ஒரு பகுதி இறைச்சிக்கடை கட்டட தொகுதியாக காணப்படுகின்றது. அந்த கட்டட தொகுதியின் கீழ் பகுதியில் மீன் சந்தையும் மேல் மாடியில் இறைச்சிக் கடை தொகுதிகளும் காணப்படுகின்றது. குறித்த...
ஒரு சாதாரண விடயத்தில் கூட ஒருமித்த முடிவு எடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களால் முடியவில்லை
பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு கருத்துக் கணிப்பு நடத்த முடிவு செய்திருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கையாலாகாத தனத்தையே எடுத்துக் காட்டுகின்றது. முக்கிய தலைவர்கள் அதுவும் எதிர்க்கட்சித் தலைவர், வடமாகாண முதலமைச்சர் என இரண்டு தலைவர்கள. கலந்து கொண்ட கூட்டத்தில் இரு வேறுபட்ட முடிவுகளை மேற்கொள்வதென்பது வேடிக்கையாகத் தோன்றுகின்றது. ஒரு மாவட்டத்தில் பொருளாதார மத்திய நிலையம்...
ஆசிய நாடுகளில் பரவலாக நடைபெற்றுவரும் தீவிரவாத தாக்குதல்களையடுத்து இலங்கையின் முப்படைகளும், புலனாய்வுப் பிரிவினரும் சர்வதேச புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து தொடர்ச்சியான கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக இலங்கை இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். தற்போது, ஆசிய நாடுகளில் பரவலான தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெற்றுவரும்நிலையில் இலங்கையின் பாதுகாப்புத் தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு...
திடீர் சுகயீனம் காரணமாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வந்த அவர் திடீர் சுகயீனம் அடைந்தார். தற்போது அவர் நலமாக இருக்கிறார் எனத் தெரிவித்த வைத்தியர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அவசியம் தேவை என்றும் தெரிவித்தனர். இதனால் அவர் சில நாள்கள் போதனா வைத்தியசாலையில்...
வலிகாமம் வடக்கு வயாவிளான் ஒட்டகப்புலம் பகுதியில் நிரந்தரமாக கட்டப்பட்டு வரும் இராணுவ முகாமால் அப்பகுதிகள் வாழ் பூர்வீக மக்கள் மத்தியில் அச்சமான நிலைமை தோன்றியுள்ளது. 105 குடும்பங்களுக்கு சொந்தமான 169 ஏக்கர் காணியினை படையினர் சுவீகரிக்கும் நோக்கில் நிரந்தரமாக முட்கம்பி வேலிகளை அமைத்தும், பாரிய வாயிற் துண்களை நிறுவியும் வருகின்றனர். கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு...
தேசிய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள 1,000 குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் செலவில் வீடுகள் அமைத்து கொடுக்கும் திட்டத்துக்கமைய, பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கை பிரதேச செயலக ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இலங்கையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்ற நிலையில் இந்நோயினால்...
இறுதி யுத்தத்தின் போது கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது, காணாமல் போனவர்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகமவின் கருத்தின் மூலம் உறுதியாகியிருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறிப்பிட்டார். 'கொத்தணிக் குண்டுகள் வீசப்பட்டமைக்கு ஆதார பூர்வமான சாட்சிகள் எதுவும் இல்லை. மக்கள் வழங்கிய முறைப்பாடுகளில்...
சமாதானம், நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை, தாராளத்தன்மை என்பவற்றினூடாக மனிதகுலம் மேம்பாடடைய இஸ்லாம் காட்டும் பாதையே இன்றைய உலகுக்கு மிக அவசியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருக்கும் ஈதுல் பித்ர் நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் எடுத்துக்காட்டியுள்ளார். ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஒரு உன்னத சமயக் கோட்பாட்டைப் பின்பற்றும் இஸ்லாமியர்களினால் மனித சமூகத்திற்கு...
முஸ்லிம்களின் ஆன்மீக கட்டுப்பாடு, அர்ப்பணிப்பு போன்றே சமத்துவத்துக்கு வழிகாட்டும் அவர்களது தாராளத்தன்மை தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்திருக்கும் ஈகைத்திருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார். பிரதமரின் இந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, இஸ்லாமியர்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, தலைப்பிறையினைக் கண்ட பின்பு கொண்டாடும்...
இவ் வருடத்துக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் தற்போது தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, பாடசாலைகள் மூலம் தோற்றுபவர்களுக்கு அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அவரவர் முகவரிக்கும் இவ்வாறு அனுமதிப் பத்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, உரிய தினத்துக்கு முன்னர் அனுமதிப் பத்திரம் கிடைக்காத தனிப்பட்ட பரீட்சார்த்திகள்...
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள், அனைத்து வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்துடன் இணைந்து எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை யாழ்.மாவட்டச் செயலக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தத் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் வடமாகாண பட்டதாரிகள் சங்கம் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'பட்டதாரிகள் நாடளாவிய ரீதியில் வேலைவாய்ப்பை கோரி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தொடர் போராட்டங்களை நடத்தி...
தமிழகத்தின் தாரமங்கலம் அகதிகள் முகாமைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து தமிழக ஊடகமான தினமணி தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகேயுள்ள பவளத்தானூரில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை வாழ் மக்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்....
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவத்தின் பின்னர் அவரது தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியலை ஊர்காவற்றுறை நீதிமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மேலும் நீடித்துள்ளது. மாணவி வித்தியா கொலை வழக்குச் சந்தேக நபர்களான சுவிஸ்குமாரின் தாயார் மகாலிங்கம் தவராணி, உசாந்தனின் தாயார் சிவதேவன் செல்வராணி ஆகியோரது விளக்கமறியலே...
குருநகர் பகுதியில் 60 இலட்சம் பெறுமதியான 40 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருகநர் பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்ன வின்...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று தமிழீழ விடுதலை புலிகளின் கரும்புலிகள் நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றுகூடும் இடத்தில் இன்று யூலை ஐந்தாம் திகதி செவ்வாய்க் கிழமை முற்பகல் 10.30 அளவில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு மிகவும் உணர்வுபூர்வமாக கரும்புலிகள் நாள் நினைவு கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இடம்பெற்ற இடத்திலுள்ள சுவரில் கரும்புலிகள் நாள் – 2016...
Loading posts...
All posts loaded
No more posts
