யாழ். பல்கலைக்கழக விடுதியில் கரும்புலிகள் தின சுவரொட்டி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் வாயில் கதவில் கரும்புலிகள் தினமான இன்று செவ்வாய்க்கிழமை (July 05) நினைவுபடுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ‘தமிழீழ மக்களுக்கு ஓர் அறிவித்தல்’ எனத் தலையங்கமிடப்பட்டு, ஒட்டப்பட்டுள்ள இந்தச் சுவரொட்டியை, தமிழீழ மக்கள் படை ஒட்டியதாகக் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித் திணைக்களத்திற்கு ஓதுக்கப்பட்ட காணியை தனியாருக்கு வழங்கும் முயற்சிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு

கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட காணியை தனியாருக்கு வழங்கும் வகையில் நேற்று திங்கள் கிழமை நில அளவை மேற்கொள்ளும் முயற்சி பொது மக்களின் கடும் எதிர்ப்பினால் கைவிடப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கிளிநொச்சி உதயநகர் மேற்கில் கடந்த சில வருடங்களுக்கு முன் சுமார் நான்கு ஏக்கர் பொதுக் காணி கிளிநொச்சி வலயக் கல்வித்திணைக்களத்திற்கு...
Ad Widget

என்னையும் எனது குடும்பத்தையும் சிறையில் அடையுங்கள்

என்னுடன் குரோதம் இருந்தால் என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடையுங்கள். அதைவிடுத்து எனது பிரதேச கிராம மக்களை பழிவாங்க வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ஆட்சிக் காலத்தில் குடிசைகள் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கு மாறாக வசதியான வீடுகள் அமைத்துக்கொடுக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹுங்கம அத்புடுவ விஹாரையில் இடம்பெற்ற மத வைபவத்தில்...

கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியிருந்தால் தவறில்லை! மக்ஸ்வல் பரணகம

2010ம் ஆண்டுக்கு முன்னதாக படையினர் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியிருந்தால் அது சட்டவிரோதமானதல்ல என காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். 2010ம் ஆண்டுக்கு முன்னதாக கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தும் பிரகடனம் அமுலில் இருக்கவில்லை. 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே இந்த பிரகடனம் அமுல்படுத்தப்பட்டது. எனவே இராணுவ தேவைகளுக்காக படையினர் 2010ம்...

இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகு மீன்பிடிக்கு அனுமதி!

இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லையென இந்திய இலங்கை மீனவர்களின் நலன் பேணல் மன்றத்தின் இலங்கை ஆலோசகர் எஸ்.பி. அந்தோனிமுத்து தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக இந்திய...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடாத்திய போராட்டம் வெற்றியாம்!

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடாத்திய போராட்டம் வெற்றியளித்துள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது. நேற்று காலை 08.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களை அரச சேவையில் உள்ளீர்க்க கூடாது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச மருத்துவ அதிகாரிகள் இன்றையதினம் அரை நாள் பணி பகிஸ்கரிப்பை...

விண்ணப்பங்கள் கோரல்

இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபைக்குட்பட்ட காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், வீட்டு மின்னிணைப்பு, தையல், மோட்டார் சைக்கிள் திருத்துனர், முச்சக்கர வண்டி திருத்துநர், மரவேலை, காய்ச்சி இணைப்பவர், கட்டடவினைஞர், அலுமினியம் பொருத்துனர், சமையலாளர், வெதுப்பாளர், அறை பராமரிப்பாளர், குடிபானம், பரிமாறுவோர் ஆகிய தொழிற்பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளன. இப்பயிற்சி...

இந்தியாவுக்குள் நுழைய முற்பட்ட வடமராட்சி மீனவர்கள் கைது

சட்டவிரோதமான முறையில் இந்திய கடல் எல்லைக்குள் நுழைய முற்பட்ட வடமராட்சி பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்களை, ஞாயிற்றுக்கிழமை (03) இரவு கைது செய்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி, திங்கட்கிழமை (04) தெரிவித்தார். தொண்டைமானாறு, அக்கரை பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரு மீனவர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இவர்கள்...

யாழில் மீள்குடியேறும் மக்களுக்கான உதவித்திட்டங்கள்!

யாழ் பலாலி மற்றும் வறுத்தலைவிளான் பகுதிகளில் மீள்குடியேற்ற அமைச்சின் நிதியில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வலி வடக்கில் முப்படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மீளக் குடியமரும் மக்களின் குடிநீர்த் தேவையினை பூர்த்தி செய்யும் முகமாக வறுத்தலைவிளான் உள்ளிட்ட 07 இடங்களில் குடிநீர்த் தொட்டி அமைத்தல் திட்டத்தின் கீழ் முதலாவது நீர்த்தொட்டி வறுத்தலைவிளானில் அமைக்கப்பட்டது....

யாழில் தொழில்சங்க மத்திய நிலையம்!

யாழ் மாவட்டத்தில் காணப்படும் வேலைவாய்ப்பின்மையை குறைக்கும் நோக்கில் யாழ் மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையம் அண்மையில் (01) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. தொழில் மற்றும் தொழில்சங்க உறவுகள் அமைச்சின் கீழ் உள்ள மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினல் இந்த மத்திய நிலையம் யாழ் மாவட்டத்தில் முதற்தடவையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்...

கதிர்காமம் உற்சவ கொடியேற்றம் இன்று

மூவின மக்களும் பக்தியுடன் தரிசிக்கும் புனித பூமியான கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் இன்று 05 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 21 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது. கதிர்காமம் உற்சவத்தினை ஒட்டியதாக யால காட்டினூடாக சராசரி 50 ஆயிரம் முதல் 90 ஆயிரம் அடியார்கள் வரை பக்தி பூர்வமாக கதிர்காமத்திற்கு பாதயாத்திரை செல்கின்றனர்....

மத்திய வங்கியின் நம்பகத் தன்மையினை நிலைநிறுத்துதலே முதன்மையான பொறுப்பாகும்

மத்திய வங்கியின் நம்பகத் தன்மை மற்றும் நற்பெயரினை நிலைநிறுத்துவதனையே எனது முதன்மையான பொறுப்பாக கருதுகின்றேன் என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, அதற்கான நியமனக் கடிதத்தினை நேற்று (04) காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்....

வல்லை கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு!

உடுப்பிட்டி- வல்லை வீதியிலுள்ள நெசவுசாலைக்கு பின்பகுதியிலுள்ள தோட்ட கிணற்றிலிருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. தோட்ட கிணற்றினை துப்பரவு செய்த போது வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. 11 மோட்டார் எறிகணைகள், 25 பரா குண்டுகள், மற்றும் 69 கைக்குண்டுகள் என்பனவே மீட்கப்பட்டவையாகும்.

அமைச்சர்களை சிறை வைத்த ஜனாதிபதி

மாத்தறை புதிய மது வரி அத்தியட்சகர் அலுவலகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று திறந்து வைக்கப்பட்டது.இச்சந்தர்ப்பத்தில் மாத்தறை மாவட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். கலால் சட்டத்தை மீறும் நபர்களை தடுத்து வைப்பதற்காக மதுவரி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு அறை ஜனாதிபதியால் இதன் போது திறந்துவைக்கப்பட்டது.மேலும் இச்சந்தர்ப்பத்தின் போது சில அமைச்சர்கள்...

குசல் பெரேராவுக்கு 10 கோடி ரூபா நட்டஈடு!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு நட்டஈடு வழங்க சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஊக்கமருந்து பாவித்த குற்றச்சாட்டின் பேரில் குசல் ஜனித் பெரேராவுக்கு சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட்டதன் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....

காதல் முறிவால் முன்னாள் போராளி தற்கொலை!

யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பிரதேசத்தில் முன்னாள் போராளியான இளைஞர் ஒருவர் காதல் முறிவினால் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் அச்சுவேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த பகுதியைச் சேர்ந்த விஜயநாத் (27) என்ற இளைஞரே தற்கொலை செய்துகொண்டார். குறித்த சம்பவம் தெரியவருவதாவது, குறித்த இளைஞர் ஒரு முன்னாள் போராளியாவார். இவர் கடந்த 8 வருடங்களாக ஒரு...

வடக்கு நோயாளிகள் அவதி

அரசாங்க வைத்தியசாலைகளின் வைத்தியர்களால் இன்று திங்கட்கிழமை (04) முன்னெடுக்கப்பட்ட அரைநாள் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் காரணமாக, வடமாகாண நோயாளிகளும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வருதல், இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல் என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும், நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்கள் அரைநாள் பணிப் பகிஷ்கரிப்புப்...

ஜோர்ஜ் மாஸ்டர் விடுதலை: தயா மாஸ்டரின் வழக்கு ஒத்திவைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில், மொழிப்பெயர்பாளராகவிருந்த ஜோர்ஜ் மாஸ்டரை விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ள கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, அவ்வமைப்பின் ஊடகச்செயலாளர் தயா மாஸ்டர் தொடர்பிலான வழக்கை டிசெம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

யாழில் கையெழுத்து வேட்டை

யுத்த இழப்பீடுகளை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னிலை சோசலிச கட்சியினர் யாழில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். யாழ். பஸ் நிலையத்தின் முன்பாக இன்று திங்கட்கிழமை காலை 10.30 அளவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, இராணுவ முகாம்களை மட்டுப்படுத்து, மக்களின் குடியிருப்பு பகுதிகளில் இருந்து இராணுவத்தினை வெளியேற்று, அபகரித்த காணிகளை திருப்பிக்கொடு, போன்ற...

யாழில் 4 ஆசிரியர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

யாழ். நகருக்கு அண்மித்த பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து கைதுசெய்யப்பட்ட, நான்கு ஆசிரியர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 18ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சசிதரன் உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் குறித்த பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம்...
Loading posts...

All posts loaded

No more posts