தனியார் பஸ் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டதாக அறிவிப்பு

தனியார் பஸ் ஒன்றியத்தினர் நாடளாவிய ரீதியில் இன்று மேற்கொள்ளவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தனியார் பஸ் உரிமையார்கள் சங்கத்தினருடன் இடம்பெற்றது. பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பாக உரிய...

யாழ்ப்பாணத்தில் பணியாளர்களை தாக்கி இலஞ்சம் பெற பொலிஸார் முயற்சி

யாழ்ப்பாணத்தில் விற்பனை நிலையமொன்றில், பொலிஸார் இலஞ்சம் பெற முற்பட்டதாக தெரிவித்து, யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் நேற்று அதிகாலை 12.30 அளவில் பொலிஸார் பணியாளர்களை தாக்கியதுடன், இலஞ்சம் பெற முற்பட்டுள்ளார். யாழ். நகரப் பகுதியிலுள்ள இரவு நேர விற்பனை நிலையமொன்றிலே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. விற்பனை நிலையமொன்றிற்கு...
Ad Widget

கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக சந்தை திறக்கப்படாதது ஏன்?

வடக்கிற்கான பொருளாதார நிலையத்தை வவுனியாவில் அமைப்பதற்கு முயற்சிக்கும் அரசியல்வாதிகள் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு இதுவரை திறக்கப்படாதுள்ள பொருளாதார சந்தை தொடர்பில் இதுவரை கவனம் செலுத்தாதது ஏன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கிற்கான பொருளாதார வர்த்தக மையத்தை வவுனியா – தாண்டிக்குளத்தில் அமைப்பதென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் குறித்த...

ஆணின் சடலம் மீட்பு

அச்சுவேலி வடக்கு, வல்லை பகுதியிலுள்ள வளவு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (03) காலை மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியினை சேர்ந்த அச்சுவேலி தனியார் பஸ் ஒன்றில் நடத்துனராக கடமையாற்றும் குடும்பிநாதன் விஜயநாதன் (வயது 27) என பொலிஸார் கூறினர். பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைக்பெற்ற...

ஓமந்தையில் ஆலய விக்கிரகங்கள் சேதம்

வவுனியா, ஓமந்தை வேலர்சின்னக்குளத்தில் அமைந்துள்ள புராதன வீரபத்திரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் மற்றும் கட்டடங்கள் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) முறைப்பாடு கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். புராதன ஆலயமான இவ் ஆலயத்தில் மிக அண்மைக்காலத்தில் தான் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு பரிவார மூர்த்திகள் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த நிலையில் அச்சிலை உடைக்கப்பட்டுள்ளதுடன், அருகிலிருந்த வேல்களும் அகற்றி எறியப்பட்டுள்ளன....

மிருகங்களை வேட்டையாடியோர் சரணடைந்தனர்

நக்கிள்ஸ் வனப்பகுதியில், பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளை வேட்டையாடியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (03), தமது சட்டத்தரணியுடன் பன்விலை பொலிஸில் சரணடைந்துள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் தொடர்பில் ஏற்கெனவே இருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர். கடந்த சில தினங்களாக வன விலங்குகளை வேட்டையாடிய சிலர் அவற்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், சமூக...

யாழில் 800 பேருக்கு வீடமைக்க உதவி

வீடமைப்பு கடன் திட்டத்தின் கீழ், யாழ் மாவட்டத்தில் 800 பயனாளிகளுக்கான காசோலைகளை தேசிய வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், மாவட்ட முகாமையாளர் ரவீந்திரனின் தலைமையில் இன்று காலை இந்த நிகழ்வு நடைபெற்றது. ´2025ம் ஆண்டு அனைவருக்கும் வீடு´ என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் தேசிய...

ஐநா யோசனை குறித்த வதந்திகளை மறுத்தது ததேகூ

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட யோசனை, குறிப்பாக பொறுப்புக் கூறல் செயற்படுகள் தொடர்பில், தமக்கும், இலங்கை அரசாங்கம் மற்றும் அமெரிக்க அரசாங்கம் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, வெளியாகியுள்ள செய்திகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுத்துள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறான...

நியமனக் கடிதத்தைப் பெற்றார் இந்திரஜித்

மத்திய வங்கி ஆளுனராக தெரிவு செய்யப்பட்டுள்ள டொக்டர் இந்திரஜித் குமாரசுவாமி தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வலி. வடக்கிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் தொடர்ந்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்

யாழ். குடாநாட்டின் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். காங்சேசன்துறை பகுதி மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை இராணுவத்தினர் விடுவிக்காது, தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ பாதுகாப்பு வேலிகளை அடைத்து பாதுகாப்பு...

எரிபொருள் விலை அதிகரிக்காது!

எந்தவகையான எரிபொருள் விலையும் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபன தலைவர் ஜி.வீ. ஜயசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் பலவற்றினதும் விலையை அதிகரிக்குமாறு தெரிவித்து இலங்கை ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல் கிடைக்கப் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

திருநெல்வேலி அருள்மிகு தலங்காவற் பிள்ளையார் கோவில் பரிசளிப்பு விழா

திருநெல்வேலி அருள்மிகு தலங்காவற் பிள்ளையார் கோவில் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சமய அறிவுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா தீர்த்தத் திருவிழாவின்போது நடைபெற்றது. விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேகன் தலைமையில் நடைபெற்ற இப்பரிசளிப்பு நிகழ்ச்சியில் கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் உப அதிபர் ச.லலீசன், யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர் தி.வேல்நம்பி, ஆனைப்பந்தி மெதடிஸ்ற் மிஷன் வித்தியாலய அதிபர்...

ஜனாதிபதிக்கும் மத்திய வங்கி புதிய ஆளுநருக்குமிடையில் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பரிந்துரைக்கப்பட்டுள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னர் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் திங்கட்கிழமை மத்திய...

கணித, விஞ்ஞானத்தில் 40 சதவீத சித்தியை எட்டவேண்டும்

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித, விஞ்ஞான பாடத்துறையில் வடமாகாணத்தில் 18 சதவீதமான மாணவர்கள் மாத்திரம் தற்போது சித்தியடைந்துள்ளனர். இனிவரும் காலங்களில் இதனை 40 சதவீதமாக மாற்றுவதற்குரிய செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்பப்பட்டு கொண்டிருக்கின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாணப் பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் நிகழ்வு யாழ்ப்பாணம்...

ஊடகங்கள் மீது சட்டத்தரணிகள் பாய்ச்சல்

ஊடகங்கள் நீதித்துறையில் தலையீடுகள் செய்கின்ற போக்கு காணப்படுகின்றது. நீதிமன்றத்துக்கு சமூகமளிக்காது, எவராவது சொல்வதைக் கேட்டு நீதிமன்ற செய்திகளை சில ஊடகங்கள் வெளியிடுகின்ற என வரணி மாணவி துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணிகள் கூறினர். வரணிப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் 12 வயது மாணவியை ஆசிரியர் ஒருவர் பாலியல்...

பங்களாதேஷ் தாக்குதல்: இரண்டு இலங்கையர்களும் மீட்கப்பட்டனர்

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் கபே ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில், பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் எந்தவித பாதிப்புமின்றி மீட்கப்பட்டுள்ளதாக, டாக்காவிலுள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

வாடகை வீடுகளில் இருப்பவர்களும் வாக்காளர் இடாப்பில் பதிய முடியும்- தேர்தல் ஆணையாளர்

வாடகை விடுகளில் இருப்பவர்களும் வாக்காளர் இடாப்பில் பதிய முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கொழும்பின் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் வீடுகளில் தங்கியிருப்பவர்களும் குறித்த முகவரிகளின் கீழ் வாக்காளர் இடாப்பில் தங்களை பதிவு செய்துகொள்ள முடியும்....

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக மீண்டும் தமிழர் ஒருவர் நியமனம்!

இலங்கை மத்திய வங்கி ஆளுநராக புதியவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.புதிய ஆளுநராக டாக்டர் இந்திரஜித் குமாரசுவாமி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சற்று முன்னர் நியமிக்கப்பட்டுள்ளார். அனைத்து கட்சிகளினதும் ஆலோசனைகளைப் பெற்றதன் பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இவர் பதவியை ஏற்றுக்கொள்ள உள்ளர். இலங்கையைச் சேர்ந்த...

வடமாகாண பட்டதாரிகளுக்கான அவரச ஒன்றுகூடல் நாளை நல்லூரில்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தினால் வருகின்ற நாளை ஞாயிற்றுக்கிழமை(03.07.2016) அன்று காலை 10.30 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலில் பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கும் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ் ஒன்றுகூடல் நிகழ்வின்போது வடமாகாணக் கல்வியமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்பட்ட 1000 பட்டதாரிகளை வடமாகாணப் பாடசாலைகளிலுள்ள ஆசிரிய வெற்றிடங்களுக்கு நியமிப்பது தொடர்பான அறிவிப்பு, நாடளாவியரீதியில்...

பாலியல் துஸ்பிரயோகம்; வரணி ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு

வரணிப் பகுதி பாடசாலையொன்றில் மாணவியொருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் மற்றும் சம்பவத்தை மறைப்பதற்காக செயற்பட்ட பழைய மாணவர்களது பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இவர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை...
Loading posts...

All posts loaded

No more posts