அரச வைத்தியர்கள் சங்கம் திங்களன்று பணிப்பகிஷ்கரிப்பு

மாலபே தனியார் மருத்துவக்கல்லூரி சட்டரீதியான அந்தஸ்தை வழங்குவதற்காக சுகாதார அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்தியர்கள் சங்கம் நாளை மறுதினம் திங்கட்கிழமை அடையாள பணிப்பகிஷ்கரிப்பு ஒன்றில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் திங்கட்கிழமை காலை 8 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை நாட்டிலுள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் பணிபுரியும்...

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் நாளை முதல் வேலைநிறுத்தம்

தனியார் பேருந்து கட்டண உயர்வு தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்திற்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தனியார் பேருந்து நிறுவனங்களின் சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது. தனியார் பேருந்து கட்டண மறுசீரமைப்பு தொடர்பான தேசிய கொள்கை படி தனியார்...
Ad Widget

காணி இல்லாதோருக்கு கீரிமலையில் காணி!

வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் கடந்த 28 வருடத்திற்கு முன்னர் இடம்பெயர்ந்து முகாமில் வாழ்ந்து வந்த மக்களுக்கு முதற்கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) கீரிமலைப் பிரதேசத்தில் காணிகள் வழங்கப்பட்டுள்ளது. 28 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து தற்போது குடும்பப் பெருக்கத்தினால் பலர் காணியின்றி முகாம்களிலே வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்தகைய மக்களுக்கே கீரிமலைப் பிரதேசத்தில் காணிகள் வழங்கப்பட்டுள்ளன....

யாழ்ப்பாணத்தில் காணிகளை விடும் அரசு முல்லைத்தீவில் அபகரிக்கின்றது

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் காணிகளை விடுவித்துக்கொண்டிருக்கும் அரசாங்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் வேகமாக காணிகளை அபகரித்துவருவதாக வடக்குமாகாண மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி டி.பாலமுரளி குற்றம்சாட்டியுள்ளார். ஜெனீவா மனித உரிமைப்பேரவையில் நடைபெற்ற உபகுழுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில், வடக்கில் இராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்துச் செல்கின்றது. புதிய அரசாங்கம் பதவியேற்று 18...

போராளிகளின் மர்ம மரணம் தொடர்பாக கூறுவதற்கு நான் வைத்தியனல்ல: டி.எம்.சுவாமிநாதன்!

இலங்கை இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்படும் முன்னாள் போராளிகள் பலர் மர்மமாக மரணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனிடம் வினவியபோது ‘இது பற்றிக் கூற நான் வைத்தியனல்ல’ எனவும் தன்னிடம் இதுபற்றிக் கேட்பதில் எந்தவித பயனுமில்லை எனவும் எனத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வுக்குப் பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்ட பல...

ஐ.நாவின் புதிய நிலைப்பாட்டை வரவேற்கிறது கூட்டமைப்பு!

மனித உரிமைகள் கவுன்ஸிலின் 32ஆவது அமர்வின் போது, தீர்மானம் 30/1 இன் பிரகாரம் அளிக்கப்பட்ட முக்கியமான உறுதிப்பாடுகளை அமுல்படுத்துவது தொடர்பாக காணப்படுகின்ற புதிய நிலை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் உயர் ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட வாய்மூல அறிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது. எம்மைப் பொறுத்தமட்டில் அவரது வாய்மூல அறிக்கையிலே இலங்கையின் நல்லிணக்கம் மற்றும்...

போதைப் பாவனையால் யாழ். நகர பாடசாலை மாணவர்கள் வாழ்வு சீரழிகிறது! நீதிபதி இளஞ்செழியன்

யாழ். நகர்ப் புறத்தில் உள்ள பிரபல பாடசாலைகளில் போதைப் பொருள் பாவனை சில மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது எனக் கவலை வெளியிட்டுள்ளார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன். பாடசாலை நேரத்தில் போதைப்பொருள் பாவிக்கும் மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் அத்தகையவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் வியாழனன்று எச்சரிக்கை செய்துள்ளது. நூறு...

ஐ.நா மனித உரிமை ஆணையர், நீதியமைச்சர் சந்திப்பு!

ஜெனிவாவுக்கான விஜயத்தினை மேற்கொண்ட நீதியமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஷ நேற்று முன்தினம்(30) ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் செய்த் ராத் அல் ஹுசைனை சந்தித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்பின் 32 ஆவது மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டு ஜெனிவாவுக்கு சென்றுள்ள அமைச்சர் ஆணையாளருடன் நடைபெற்ற சந்திப்பில் நாட்டில் நிலவும் மனித உரிமை...

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தி இன்று ஆரம்பிக்கப்படும்

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் சக்தியை கட்டியெழுப்பும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார். பதுளை பிரதேசத்தில் இன்று ஆரம்பிக்கப்படும் என்று அவர் கூறினார். அத்துடன் இம்மாத இறுதிப் பகுதியில் பாத யாத்திரை ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அரசியல் கட்சியல்லாமல் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தியாக பலம் பெறுவதாக...

பங்களாதேஷ் தாக்குதலில் பணயக்கைதிகளா இரு இலங்கையர்களும் சிறைபிடிப்பு

பங்களதேஷ் தலைநகர் டாக்காவில் ஒரு கஃபேயில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வெளிநாட்டவர் உள்ளிட்ட பலர் பணயக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களில் இரண்டு இலங்கையர்களும் அடங்குகின்றனர். இலங்கையர் இருவர் உள்ளிட்ட பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டில் இருக்கும் இலங்கை தூதரகம் கூறுகிறது. அந்த இருவருடைய குடும்பத்திற்கும்...

வடக்கில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு

வட மாகாணத்தில் உற்பத்தியாகும் தரமான உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றிற்கு சந்தைவாய்ப்பை பெற்றுக் கொடுத்து புலம்பெயர் மக்களின் தேவைகளை பூர்த்தியாக்கும் வகையில் ஏற்றுமதி செய்யவும், அவற்றுக்கான வசதிகளைப் பெற்றுக் கொடுக்கவும் யாழ் வணிகர் கழகம் முன்வந்துள்ளது. இவ்வாறான பொருட்களின் தேவைகள் பற்றிய கேள்வி கோரல்கள் யாழ் வணிகர் கழகத்திற்கு ஏற்கெனவே கிடைத்துள்ளது. இவ்வாறான...

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் தமிழக மீனவர்களின் 7 படகுகள் சேதம்

இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் ஏழு படகுகள் சேதமடைந்துள்ளதாக தமிழக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 2 ஆயிரத்து 148 மீனவர்கள் புதன்கிழமை இரவு மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகுகள் மீதே இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் மீனவர்களின்...

யாழ்ப்பாணத்தில் களிமண் சிற்பப் பயிற்சி நெறி

திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள களிமண் சிற்ப பயிற்சிநெறி, இனிவரும் காலங்களில் தொடர்ந்து சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் நடைபெறுமனெ அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது அழகியல் கல்லூரியில் இப்பயிற்சி நெறி ஆரம்பிகப்பட்டுள்ளது. திருமறைக் கலாமன்றத்தின் ஓவியக்கூடம் வடமாகாணத்தின் முதலாவது ஓவியக்கூடமாக யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டு மூன்றாவது ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதன்...

மனித உரிமைகள் ஆணையாளரின பற்றுறுதியை வரவேற்கின்றோம்

இலங்கை அரசாங்கத்தின் நீதித்துறையானது, நம்பகத்தன்மையற்றது என்பதால், சுயாதீனமானதும் பக்கச் சார்பற்றதுமான பொறுப்புக்கூறல் செயன்முறைக்கு சர்வதேச பங்களிப்பு அத்தியாவசியமான ஒரு கடப்பாடு என்பதில், மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் தொடர்ந்தும் பற்றுறுதியுடன் இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்' என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத் தொடரில், இலங்கை தொடர்பான ஐக்கிய...

இன்று முதல் பஸ் கட்டணங்களை அதிகரிக்க கோரிக்கை

வருடாந்த பஸ் கட்டண அதிகரிப்பு இன்று (01) முதல் மேற்கொள்ளப்படாவிட்டால் எதிர்வரும் 03ம் திகதி முதல் போராட்டத்தில் இறங்குவதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு கூறியுள்ளது. நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அந்த சங்கத்தின் செயலாளர் அன்ஞன பிரியன்ஜித் கூறினார். எவ்வாறாயினும் தாம் போராட்டங்களில் ஈடுபடப்போவதில்லை என இலங்கை தனியார் பஸ்...

பாவனையாளர் முறைப்பாட்டு பிரிவு ஆரம்பம். முறைப்பாட்டு எண்களும் அறிவிப்பு

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையானது தனது சேவையினை மேம்படுத்தும் முகமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பாவனையாளர் முறைப்பாட்டுப் பிரிவு ஒன்றினை நிர்மாணிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டு அதனடிப்படையில் யாழ் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையானது அரச அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் முறைப்பாட்டுப் பிரிவொன்றை உருவாக்கியுள்ளது. மேற்படி முறைப்பாட்டு பிரிவிற்கு பொறுப்பாக புலனாய்வு அதிகாரி மு.றம்ஸீன் அவர்களுடன் புலனாய்வு அதிகாரியான...

கிளிநொச்சி மாவட்டத்தில் 20 ஆயிரம் இளைஞா் யுவதிகள் வேலையின்றி உள்ளனா்

கிளிநொச்சியில் இருபதாயிரம் இளைஞர் ,யுவதிகள் வேலைவாய்ப்பு அற்ற நிலையில் இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் சு.அருமைநாயகம் தெரிவித்துள்ளார் மனிதவலு மற்றும் வேலைவாயப்பு திணைக்களத்தின் பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலையம் 30-06-2016 (வியாழக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் திறந்து வைக்கப்பட்டது. தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீரவினால் குறித்த நிலையம்...

வடமாகாணசபையுடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் சி.வி. கோரிக்கை

சில அரச அலுவலர்களின் தன்னிச்சையான தன்னலம் கருதிய நடவடிக்கைகள் எமக்கு வருத்தத்தைத் தருகின்றது. எம்மக்களை உதாசீனஞ் செய்து மாற்றாருக்கு மனமகிழ்வை ஊட்டப் பாடுபடும் அவர்களின் மனோநிலை மாற வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரின் நடவடிக்கைகளையும் நாம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றோம். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா சிதம்பரபுரம் குடியேற்ற கிராம மக்களுக்கான காணி அனுமதிப்பத்திரம்...

மோசடி கும்பலில் இருந்து தப்பிக்க விழிப்படையுங்கள். மற்றவர்களையும் விழிப்படைய செய்யுங்கள்

யாழில் இளைஞர் யுவதிகளை குறிவைத்து மோசடி வியாபாரத்தில் ஒரு நிறுவனம் தனது மோசடிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த மோசடியானது இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் முறைமையை கொண்டதாகும். யார் அவர்கள் ? கொழும்பை தலைமையகமாக கொண்டு 2009ம் ஆண்டு அந்த நிறுவனம் ஸ்தாபிக்க ப்பட்டு உள்ளது. பின்னர் மட்டக்களப்பு , அனுராதபுரம் , கண்டி , மாத்தறை...

தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்க மாட்டேன்; சுவாமிநாதன்

தமிழ் மக்களுக்கு எதிராக தான் எதனையும் செய்யவில்லை என மீள்குடியேற்ற மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா - சிதம்பரபுர முகாமில் வாழ்ந்த மக்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றி அமைச்சர், தமிழ் மக்களுக்கு தான் துரோகம் இழைத்து வருவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என்றும்...
Loading posts...

All posts loaded

No more posts