மன்னாரில் கடத்தப்பட்ட குடும்பஸ்தருக்கு சித்திரவதை

மன்னார் – பள்ளிமுனை மேற்கு பிரதேசத்தில் புலனாய்வு பிரிவினரால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் 38 வயதுடைய அன்ரன் டெனி என்ற குடும்பஸ்தர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் மன்னார் உயிலங்குளம் அருட்தந்தையின் பாதுகாப்பில் இருந்த நிலையில் கடத்தப்பட்டதாக அவரது மனைவி மதுவந்தி நேற்று வியாழக்கிழமை மன்னார்...

அமெரிக்காவின் கண்காணிப்பு பட்டியலில் இலங்கை!

வெளிநாடுகளுக்கு மனித கடத்தலை மேற்கொள்ளும் நாடுகள் தொடர்பான அமெரிக்காவின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இலங்கையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொழிலாளர்களாக பலவந்தமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வேலை செய்விக்கப்படுகின்றனர். அத்துடன் பாலியல் கடத்தல்களும் இடம்பெறுகின்றன. இலங்கையின் ஆண்கள்...
Ad Widget

போருக்குப் பின்னர் முல்லைத்தீவில் முளைத்துள்ள 9 விகாரைகள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் போருக்கு முன்னர் எந்த பௌத்த விகாரையும் இருந்திருக்காத நிலையில் தற்போது, 9 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். மாவட்டத்திலுள்ள அரச காணிகள் மற்றும் அடாத்தாகப் பிடித்துள்ள தனியார் காணிகளிலேயே இந்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாங்குளம், வட்டுவாகல், ஒட்டுசுட்டான், கொக்கிளாய், மண்ணாகண்டல், சமளம்குளம், புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் மற்றும் கோப்பாபுலவு...

சிதம்பரபுர முகாமுக்கு முற்றுப்புள்ளி!

வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் கடந்த 24 வருடங்களாக வசித்து வந்த மக்களுக்கு அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் காணிகள் வழங்கப்பட்டு அதற்கான உறுதிப்பத்திரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. வடக்கில் யுத்தம் நடைபெற்றவேளையில் சொந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து இந்தியா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெயர்ந்திருந்த மக்கள், 1992 ஆம் ஆண்டு சிதம்பர முகாமில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களில் 193...

புலிகளின் முகாமில் ஆயுதங்கள் இல்லாமையால் அகழ்வுப் பணி தோல்வி

கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் ஆயுதங்களைத் தேடி, நேற்று வியாழக்கிழமை (30) காலை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியானது எவ்வித பலனுமும் இன்றி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. கிளிநொச்சி பொலிஸார், அப்பகுதி கிராம அலுவலர், சமாதான நீதிவான் ஆகியோர் முன்னிலையில், அப்பகுதியிலுள்ள இரண்டு இடங்களில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன....

யாழ் பாதுகாப்புப்படை தலைமையகம் 20 ஆவது வருடப் பூர்த்தி!

யாழ் பாதுகாப்பு படை தலைமையகம் அதன் 20 ஆவது வருடப் பூர்த்தியை மிக விமரிசையாக கொண்டாடியது. இதனையொட்டி ஜுன் மாதம் 19 ஆம் திகதி முதல் அங்கு பல்வேறு ஞாபகார்த்த நிகழ்வுகள் இடம்பெற்றன. ஞாபகார்த்த நிகழ்வுகள் யாவும் விஷேட போதி பூசையினை தொடர்ந்து இடம்பெற்றன. அத்துடன் இந்நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படை தலைமையகத்தில் சேவையாற்றும் படைவீரர்கள்...

இனிமேல் எனது அரசியல் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே

இனிமேல் எனது அரசியல் தலைவர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே என்று அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளும் நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது. இந்த நிகழ்விலேயே அமைச்சர் சரத் பொன்சேகா இவ்வாறு கூறினார்....

பாதாள உலகக்கோஷ்டி தலைவரின் இறுதி அஞ்சலிக்கு மலர்தூவிய கெலி!

பிரபல பாதாள உலகத் தலைவர் ஒருவரின் இறுதிக்கிரியையின்போது உலங்குவானூர்தி யிலிருந்து மலர்கள் தூவப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்னர் குறித்த பாதாள உலகக் குழுத் தலைவரின் உடல் இரத்மனாலையிலிருந்து மயானத்துக்கு எடுத்துச்செல்கையில் உலங்குவானூர்தியிலிருந்து பூக்கள் தூவப்பட்டுக்கொண்டிருந்தது. அண்மையில் இனந்தெரியாத நபர்களினால் மஹர நீதிமன்றத்துக்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரும் பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவருமான...

தற்கொலை அச்சுறுத்தல் விடுத்த பாலித தேவப்பெரும!

பிரதி அமைச்சர் பாலித தேவப்பெரும மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைசெய்ய முயற்சித்தவேளை காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கழுத்துறையில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை ஏற்றுக்கொள்வதில் ஏற்பட்டிருந்த பிரச்சனை காரணமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரதி அமைச்சர் பின்னர் உண்ணாவிரதப் போராட்டமாகத் தொடர்ந்தார். இந்நிலையில், அவரது கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காமையால் மின்விசிறியில் கழுத்தைக் கட்டிக்கொண்டு தற்கொலை...

ஆண் விபசாரிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு!! வைத்தியர்கள் அதிர்ச்சி தகவல்

நாட்டில் உயர் அந்தஸ்துள்ள அதாவது பணம் படைத்தவர்கள் ஆண் விபசாரிகளை நாடுவதாகவும் இதனால் ஆண்களுக்கு எயிட் நோய் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர். சமூதாயத்தில் உயர் அந்தஸ்த்திலுள்ள பலர் ஓரின சேர்க்கையாளர்களின் சேவையை பெற்றுகொள்கின்றனர். இந்நிலைமை தற்போது நகர்புறங்களில் அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் ஆண் விபசாரிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதுடன் எயிட்ஸ் நோயாளர்களினும்...

கூட்டுறவுக் கிராமிய வங்கிகளின் சேமிப்பு மாதமாக யூலை மாதம் பிரகடனம்

வடமாகாண கூட்டுறவுக் கிராமிய வங்கிகளின் சேமிப்பு மாதமாக வடமாகாண கூட்டுறவு அமைச்சால் யூலை மாதம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வடமாகாண கூட்டுறவு அமைச்சால் கூட்டுறவுத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கோடு மே மாதம் 15ஆம் திகதியில் இருந்து 100 நாள் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நூறு நாள் வேலைத்திட்டத்தின் ஒரு திட்டமாகவே, கூட்டுறவாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக, யூலை 1 தொடங்கி...

மல்லாவியிலும் மாணவி துஷ்பிரயோகம்

முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விகற்று வருகின்ற மாணவியை, அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்ததாக குறித்த மாணவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி மாணவியை அச்சுறுத்தி கடந்த 04 மாதங்களாக ஆசிரியர் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கி வந்துள்ளார். இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (26) மாணவிக்கு துன்புறுத்தல் கொடுத்த நிலையில், மாணவி எழுத்து...

வலி.வடக்கில் மக்களை மீளக்குடியேற்றியதாக போலியான படம் காட்டுகிறது அரசு! சுரேஸ் பிரேமச்சந்திரன்

வலிகாமம் வடக்கு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றியுள்ளதாக அரசாங்கம் போலியான படத்தை சர்வதேசத்திற்கு காட்டுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். வலிகாமம் வடக்கு பகுதியில் ஒரு தொகுதி மக்களின் காணிகள் கடந்த வாரம் விடுவிக்கப்பட்டது. அத்துடன் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணிகளில் நலன்புரி முகாம்களிலுள்ள மக்களை குடியமர்த்துவதற்கு...

சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி ; யாழ்ப்பாணத்தில் பேரணி

சித்திரவதைக்கு முற்றுப்புள்ளி எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விழிப்புணர்வு பேரணி ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பேரணி இன்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னால் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னால் ஆரம்பமாகியுள்ள இந்த பேரணி இறுதியாக யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நிறைவடையவுள்ளது. இந்த பேரணியில் மாணவர்கள், பொது...

குடும்பஸ்தரை காணவில்லை! பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கடத்திச் சென்றனரா??

மன்னார் – பள்ளிமுனை மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய அன்ரன் டெனி என்ற குடும்பஸ்தர் நேற்று நள்ளிரவு முதல் காணாமல் போயுள்ளார். இவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினரே கடத்திச் சென்றுள்ளதாக அவரது மனைவி மதுவந்தி தெரிவித்தார். பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தனது கணவருக்கு தொடர்ச்சியாக விடுத்துவந்த அச்சறுத்தல் காரணமாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில்...

உருமறைப்புச் சோதனைச்சாவடிகளை அமைத்து கண்காணிப்பில் ஈடுபடும் இராணுவம்!

அண்மையில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் காங்கேசன்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடி அகற்றப்பட்டபோதும் அங்கிருந்து இராணுவத்தினர் அகற்றப்படாது அச்சோதனைச்சாவடியை மறைமுகமான ஓர் இடத்தில் அமைத்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உருமறைப்புச் செய்யப்பட்ட சோதனைச்சாவடியில் இராணுவத்தினர் ஆயுதங்களுடன் கண்காணிப்பில் ஈடுபடுவதுடன், அவ்வீதியால் பயணிக்கும் மக்களைக் கண்காணிப்பதுடன், அவ்வீதியால்...

சம்பந்தனுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஆடம்பரவீடு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா சம்பந்தனுக்காக வீடுகளைத் தேடிக்கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை இரா.சம்பந்தனுக்கு அனைத்து வசதிகளுடனும்கூடிய 3 வீடுகள் காண்பிக்கப்பட்ட போதிலும் அவை எதுவும் தனக்குப் பொருத்தமானதாக அமையவில்லையென மறுத்துவிட்டார். ஆனால், இரா.சம்பந்தனின் வயதினைக் கருத்திற்கொண்டு அவருக்கு நிலத்துடன் அமைந்துள்ள வீடொன்றைப் பார்த்துவருவதாகவும், அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகையால்...

மாணவன் பலி: வானின் கதவைத்திறந்த சாரதி கைது

யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கருகில் வானின் கதவைத் திறந்தமையால் விபத்துக்குள்ளாகிய மாணவன் உயிரிழந்தமை தொடர்பில், வேனின் கதவைத் திறந்த வானின் சாரதியை, நேற்று புதன்கிழமை (29) கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் பகுதியைச் சேர்ந்த மேற்படி நபரை, சி.சி.டி.வி கமெராவின் உதவியுடன் குறித்த சாரதியை கைது செய்ததாக பொலிஸார் கூறினர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...

புனர்வாழ்வு பெற்ற ஐந்து பேர் விடுதலை

வவுனியா புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வந்த ஐந்து முன்னாள் போராளிகள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இந்நிகழ்வு, வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் பணிப்பாளர் கேணல் எம்.ஏ.ஆர்.கமிடோன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அதிதியாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜெ.ஏ.ரத்நாயக்கா கலந்துகொண்டார். இதன்போது, வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற பயிலுனர்கள் தனது...

சர்வதேச நீதித்துறையின் பங்களிப்புக்கு இலங்கையில் இடமேயில்லை! ஐ.நா. ஆணையாளரின் அறிக்கைக்கு அரசு பதில்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பை நிராகரிக்கும் அரசு, உள்நாட்டு நீதிக் கட்டமைப்பின் அடிப்படையிலேயே விசாரணைகளை முன்னெடுக்கும் என்றும், இது தொடர்பான தமது முன்னைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் உறுதியாகக் குறிப்பிட்டது. இலங்கை மீது குற்றச்சாட்டுக்களைச் முன்வைக்கலாம். ஆனால், இலங்கையின் நீதித்துறையை சவாலுக்குட்படுத்தும் சட்டரீதியான முறைமை சர்வதேசத்திற்கு இல்லை என்றும் அரசு...
Loading posts...

All posts loaded

No more posts