புலிகளின் முகாமில் ஆயுதங்கள் இல்லாமையால் அகழ்வுப் பணி தோல்வி

கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில் முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் இருந்த பகுதியில் ஆயுதங்களைத் தேடி, நேற்று வியாழக்கிழமை (30) காலை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியானது எவ்வித பலனுமும் இன்றி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

கிளிநொச்சி பொலிஸார், அப்பகுதி கிராம அலுவலர், சமாதான நீதிவான் ஆகியோர் முன்னிலையில், அப்பகுதியிலுள்ள இரண்டு இடங்களில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், அவ் இடங்களில் எவ்வித ஆயுதங்களும் கிடைக்காமையால் அகழ்வுப் பணிகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன.

Related Posts