சம்பந்தனுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஆடம்பரவீடு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா சம்பந்தனுக்காக வீடுகளைத் தேடிக்கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரை இரா.சம்பந்தனுக்கு அனைத்து வசதிகளுடனும்கூடிய 3 வீடுகள் காண்பிக்கப்பட்ட போதிலும் அவை எதுவும் தனக்குப் பொருத்தமானதாக அமையவில்லையென மறுத்துவிட்டார்.

ஆனால், இரா.சம்பந்தனின் வயதினைக் கருத்திற்கொண்டு அவருக்கு நிலத்துடன் அமைந்துள்ள வீடொன்றைப் பார்த்துவருவதாகவும், அவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகையால் அவருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய வீடே வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் வாக்குகளால் பதவிக்கு வந்த இரா.சம்பந்தன் அவர்களுக்கு அனைத்து வசதிகளுடனும் கூடிய ஆடம்பரவீடு, அவருக்கு வாக்குப்போட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த தமிழ் மக்கள் இன்று வீடில்லாது வீதியில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கின்றனர். இரா. சம்பந்தன் அவர்கள் நாடாளுமன்றத்தில் யாருக்காக குரல்கொடுக்கிறார்? அரசாங்கத்துக்காகவா? அல்லது தமிழ் மக்களுக்காகவா? இவ்வாறு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Related Posts