இலங்கை வருகிறார் பான் கீ மூன்!

ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஜெனிவாவில் நேற்று நடந்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 32 ஆவது கூட்டத் தொடரின் பின்னரே இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்போதே ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் இந்த வருட இறுதிக்குள் இலங்கைக்கு வருகை...

பாலியல் வதை புரியும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை – நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை!

மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது சட்டரீதியாக பாரதூரமான குற்றமாகும். அதிலும், ஆசிரியர்களே மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது மேலும் மோசமான குற்றமாகும். எனவே, பாடசாலை மாணவிகள் மீது பாலியல் இம்சை புரியும் ஆசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ்.மேல்...
Ad Widget

அனைத்து பீடைக்கொல்லிகளினதும் இறக்குமதி, விற்பனையை தடைசெய்யவும்!

சகல வகைகளையும் சேர்ந்த முழுமையான பீடைக்கொல்லிகளை நாட்டுக்கு இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் பயன்படுத்தலை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தடைசெய்யுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். நச்சுத்தன்மையற்ற உணவுகளைப் பெற்றுக்கொடுத்து நாட்டு மக்களை சுகதேகிகளாக ஆக்குவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் அரசாங்கம் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. பீடைக்கொல்லி, கிருமிநாசினி...

இலங்கையில் இருப்பது சட்டத்தின் ஆட்சி; இனிமேல் மனித உரிமை மீறல்கள் இடம்பெறாது

இலங்கை அரசு நல்லிணக்கத்தை எட்டுவதில் போர்க்காலத்தில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதிலும் உறுதியுடன் இருக்கிறது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர கூறியிருக்கிறார். இலங்கை போரின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் விஷயத்தில் ஐநா மனித உரிமை கவுன்சிலின் கடந்த ஆண்டு தீர்மானத்தை...

யாழில் இராணுவத்தின் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி

யாழ் பாதுகாப்பு படைத் தலைமயகத்தின் ஏற்பாட்டில் புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி இன்று (29) காலை 9 மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

. பனங்காட்டில் புத்தி கூர்மை எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இப் ´புதிய கண்டுபிடிப்பு கண்காட்சி´ இன்றும் நாளையும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த...

வித்தியா படுகொலை வழக்கு; மேலும் ஒரு சாட்சியாளரை மன்றில் ஆஜர்படுத்த முடிவு

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவத்தில் மேலும் முக்கிய சாட்சி ஒருவர் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பெருங்குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.பி நிசாந்த சில்வா மன்றிற்கு தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக அறிந்த மக்கள் தற்போது நடைபெறும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தகவல்களை தந்துதவுமாறு மன்று கேட்டுள்ளது. மாணவி வித்தியா படுகொலை...

கைபேசியினால் ஏற்படும் பாரிய பாதிப்புகள்!!

புதிய ஆய்வுகளின் மூலம் கைபேசியினால் ஏற்படும் பாரிய பாதிப்புகள் தொடர்பில் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகியுள்ளது.கைபேசி மூலம் நமக்கெல்லாம் வரும் பாரிய 'ஒரு பாதிப்பை' பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் நீங்கள் உங்கள் கைபேசியை ஒதுக்கித்தள்ள ஆரம்பித்து விடுவீர்கள் என்றே கூறலாம். அதென்ன பாதிப்பு..? கைபேசியினால் வரும் பாரிய பாதிப்புகள் இவைகள் தான்..உறங்கும்போது கைபேசியை உடன் வைத்துக் கொண்டு உறங்கும் பழக்கம் கொண்ட இரண்டு...

‘வந்தேறு குடிகளுக்கு வர்தகமையமா?’ கலவரங்களை தூண்டும்வகையில் துண்டுபிரசும்!!

வவுனியா சந்தைப்பகுதியில் இன்று அதிகாலை துண்டுப்பிரசுரம் ஒன்று சகல கடைகளிலும் ஒட்டப்பட்டும் சில பகுதிகளில் வீசப்பட்டும் காணப்படுகிறது இதில் வந்தேறு குடிகளுக்கு வர்தகமையமா?என்ற தலையங்கத்திலேய அச்சிடப்பட்டுள்ளது பொருளாதார வர்த்தக மையம் அமைவது தொடர்பில் வவுனியாவில் கடும் சர்ச்சைகள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது இதை மையமாக கொண்டு கலவரத்தையும் சாதி பிரச்சினையையும் தூண்டும் விதமாக விஷமிகளால் இவ்வாறான...

விடுவிக்கப்பட்ட காணிகளின் எல்லை நிர்ணயத்துக்கு உதவுமாறு கோரிக்கை

மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ள 201.3 ஏக்கர் காணிகளின் எல்லை நிர்ணயத்துக்கும் அக்காணிகளைத் துப்புரவு செய்வதற்கும் உதவுமாறு, மேற்படி காணிகளின் உரிமையாளர்கள், நேற்று திங்கட்கிழமை கோரிக்கை விடுத்தனர். வலிகாமம் வடக்கில் கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து, கடந்த சனிக்கிழமை (25) விடுவிக்கப்பட்ட 201.3 ஏக்கர் காணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோர்,...

பொது இடத்தில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்

பொதுவிடத்தில் புகை பிடித்தவர்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அறுவருக்கு நீதிமன்றத்தால் அபராதமும் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பொதுவிடத்தில் புகை பிடித்தவர்கள் மற்றும் சுகாதார அறிவுறுத்தலின்றி சுருட்டு விற்பனை செய்தமை போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அறுவருக்குத் தலா-250 ரூபா வீதம் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட மேலதிக நீதவான் ரி. கருணாகரன் நேற்று தீர்ப்பளித்து...

நாங்கள் மாகாணசபையைக் குழப்பவில்லை: நான்கு உறுப்பினர்கள் சம்பந்தனுக்கு தன்னிலை விளக்கக் கடிதம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கிடையில் கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஒரு சில மாகாணசபை உறுப்பினர்கள் சபையினைக் குழப்பும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அதில் ஒரு உறுப்பினரை நீக்குமாறும் வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் குறித்த உறுப்பினர் அல்லாத நான்கு உறுப்பினர்களினால் கை ஒப்பம் இடப்பட்ட தன்னிலை விளக்கக் கடிதம் ஒன்று...

விண்­ணப்பம் கோரல் :சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சு

இலங்கை சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்சில் நிறை­வுகாண் தொழில்­வல்­லுனர் சேவைகள் மற்றும் துணை­ம­ருத்­துவ சேவை­களின் பயிற்­சிக்­காக பயி­லு­னர்­களை ஆட்­சேர்க்க விண்­ணப்பம் கோரப்­பட்­டுள்­ளது. சுகா­தாரம், போசணை மற்றும் சுதேச வைத்­திய அமைச்­சு­விண்­ணப்­பங்­களை கடந்த 24ஆம் திகதி அரச வர்த்­த­மா­னியூடா­க கோரி­யுள்­ளது. பொதுச்­சு­கா­தார பரி­சோ­தகர் பயிற்­சி­யைத்­த­விர ஏனைய 12 தொழிற்­ப­யிற்­சி­களும் ஆங்­கி­ல­மொ­ழி­மூ­லத்தில் நடத்­தப்­படும். மருத்­துவ ஆய்­வு­கூட...

மக்கள் போராட்டத்தில் இருந்து அகற்றப்பட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நேற்று முன் தினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்புறப்படுத்தமை ஒரு எச்சரிக்கை நடவடிக்கையாக கணிப்பிடப்பட்டுள்ளது. வழமை போன்றே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா மற்றும் சரவணபவன், சிறீதரன் போன்றோர் தமது சொகுசு வாகனங்களில் வந்திறங்கி கைகளில் எடுத்து வந்த பேனர்களை பிடித்தவாறு மக்கள் போராட்டத்தினை வழிநடத்த...

பணத்திற்கு காணியை வழங்காவிட்டால் இரண்டையும் இழக்கும் நிலை உருவாகும்: கடற்படை!

அண்மைக்காலங்களில் வடக்குக் கிழக்கிலுள்ள காணிகளை இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் பலவந்தமாகக் கையகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இம்முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் தற்போது அம்மக்களுக்கு பணத்தாசை காட்டி காணியைக் கைப்பற்றும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனர். அதன்படி, அண்மையில் மன்னார் – வங்காலைக் கிராமத்தின் கடற்கரையோரப் பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் காணியை கடந்த 5...

மாணவனைத் தாக்கியதில் செவிப்பறை பாதிப்பு!!! 3 ஆசிரியர்கள் விளக்கமறியலில்!

சாவகச்சேரியில் அமைந்துள்ள தேசிய பாடசாலை ஆசிரியர் ஒருவர் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரைத் தாக்கியதால் மாணவனின் செவிப்பறை பாதிப்படைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 3 ஆசிரியர்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் உயர்தரத்தில் கல்விகற்கும் குறித்த மாணவனை அப்பாடசாலையின் உடற்பயிற்சி ஆசிரியர் அடித்ததில் மாணவனது செவிப்பறை பாதிப்படைந்து...

பொருளாதார மையம்: உண்ணாவிரத போராட்டம் நிறைவு

வவுனியாவில் நிர்மாணிக்கப்படவுள்ள பொருளாதார மையத்தினை, தாண்டிக்களத்தில் அமைக்கக் கோரி, வவுனியா மாவட்ட உள்ளூர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம், முதல் நாளிலேயே முடிவுக்கு வந்துள்ளது. வட மாகாண சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தியும் அதன் பிரகாரம், தாண்டிக்குளத்திலேயே பொருளாதார மையம் அமையவேண்டும் எனவும் கோரி, வவுனியா மாவட்ட உள்ளூர்...

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் ‘உதவிப்பாலம்’

மக்கள் மனமுவந்து தரும் கொடைகளை தேவையுள்ள மக்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கான 'உதவிப்பாலம்' என்ற கொடை அலகை உருவாக்கி நடத்துவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் மணிமேகலை உணவுக்கூடத்தை, நேற்று செவ்வாய்க்கிழமை (28) திறந்து வைத்து உரையாற்றும் போதே, முதலமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறியதாவது, 'தமிழ்...

பொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும்! விக்னேஸ்வரனே முடிவை எடுப்பார்!!

வடக்கு மாகாணத்தின் பொருளாதார மையம் எங்கே அமைய வேண்டும் என்பதை முதலமைச்சர் விக்னேஸ்வரனே முடிவு எடுக்க வேண்டும். இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் எந்த முரண்பாடும் கிடையாது என கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் வவுனியாவில் பொருளாதார மையம் அமைக்க 20 கோடி ரூபாவை...

வேக்ககட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு!

புத்தூர் - வேம்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை 3.45 மணியளவில் இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள்களை ஏற்றிச் சென்ற வாகனம் வேக்ககட்டுப்பாட்டை இழுந்து வீதியில் நின்றவர்கள் மோதிக் கொண்டு வீதியோர மதில் சுவரையும் உடைத்துக் கொண்டு உட்சென்றது. இதில் வீதியில் நின்ற ஒருவர் உயிரிழந்தார். மற்றையவர் படுகாயமடைந்தார். இச்சம்பவத்தில் மட்டுவில்...

மஹிந்தவும் டக்ளஸுமே படுகொலைகளுக்குக் காரணம்! அமைச்சர் விஜயகலா

எனது கணவர் மகேஸ்வரன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டமைக்கும், முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து 50ஆயிரம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கும் கடந்த அரசும் (மஹிந்த அரசு), ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுமே காரணம் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது:- "கடந்த அரசு செங்கோலை வைத்து கொடுங்கோல் ஆட்சி புரிந்தது....
Loading posts...

All posts loaded

No more posts