Ad Widget

பொது இடத்தில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்

பொதுவிடத்தில் புகை பிடித்தவர்கள் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அறுவருக்கு நீதிமன்றத்தால் அபராதமும் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பொதுவிடத்தில் புகை பிடித்தவர்கள் மற்றும் சுகாதார அறிவுறுத்தலின்றி சுருட்டு விற்பனை செய்தமை போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அறுவருக்குத் தலா-250 ரூபா வீதம் அபராதம் விதித்து மல்லாகம் மாவட்ட மேலதிக நீதவான் ரி. கருணாகரன் நேற்று தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

சங்கானைப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கடந்த வாரம் சங்கானைப் பகுதியில் நடாத்திய திடீர் சுற்றி வளைப்பு நடவடிக்கையில், சந்தைக் கட்டத் தொகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் சுகாதார விதிமுறைகளுக்கு மாறாகப் பொதுவிடத்தில் புகைத்தவர்கள், புகையிலை விற்பனை மற்றும் சுருட்டு விற்பனையில் ஈடுபட்ட அறுவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்துக் கைது செய்யப்பட்ட அறுவரும் மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இதன் போது அறுவரையும் கடுமையாக எச்சரித்த நீதவான், ஒருவருக்குத் தலா-250 ரூபா வீதம் அறுவருக்கும் தலா 1500 ரூபாவை அபராதமாக விதித்தும் உத்தரவிட்டார்.

Related Posts