Ad Widget

சிதம்பரபுர முகாமுக்கு முற்றுப்புள்ளி!

வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் கடந்த 24 வருடங்களாக வசித்து வந்த மக்களுக்கு அவர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் காணிகள் வழங்கப்பட்டு அதற்கான உறுதிப்பத்திரம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

vavuniya

வடக்கில் யுத்தம் நடைபெற்றவேளையில் சொந்த இடத்தை விட்டு இடம்பெயர்ந்து இந்தியா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெயர்ந்திருந்த மக்கள், 1992 ஆம் ஆண்டு சிதம்பர முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

இவர்களில் 193 குடும்பத்தினர் தொடர்ச்சியாக முகாமில் வசித்து வந்ததுடன் தமக்கு அப்பிரதேசத்தில் காணிவழங்குமாறு கோரி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து காணிகளை அதேயிடத்தில் வழங்குவதற்கும் அதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கும் வடமாகாண சபையால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் குடும்பமொன்றுக்கு 6 பரப்புக் காணி வழங்கப்பட்டுள்ளதுடன் நேற்றய தினம் அதற்கான உறுதிப்பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், மத்திய மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன், வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வட மாகாணசபை உறுப்பினர்காளன ஆர்.இந்திரராசா, எம்.தியாகராசா, ஏ.ஜயதிலக, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகண புஸ்பகுமார, வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா உட்பட பலர்க லந்துகொண்டிருந்தனர்.

Related Posts