ஆணின் சடலம் மீட்பு

அச்சுவேலி வடக்கு, வல்லை பகுதியிலுள்ள வளவு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (03) காலை மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியினை சேர்ந்த அச்சுவேலி தனியார் பஸ் ஒன்றில் நடத்துனராக கடமையாற்றும் குடும்பிநாதன் விஜயநாதன் (வயது 27) என பொலிஸார் கூறினர்.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைக்பெற்ற தகவலின் அடிப்படையில், குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் சடலத்தினை மீட்டனர்.

மேற்படி இளைஞன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளுக்காக சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Posts