Ad Widget

விபத்தின்போது உயிரிழக்கும் முச்சக்கரவண்டிச் சாரதியின் குடும்பத்தினருக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடு

முச்சக்கர வண்டி விபத்தின்போது உயிரிழக்கும் முச்சக்கரவண்டிச் சாரதியின் குடும்பத்தினருக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடும் அதில் பயணிக்கும் பயணிகளின் குடும்பத்திற்கு தலா 1 இலட்சம் ரூபாவும் இழப்பீடாக வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து பிரதி காவல்துறை மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார்.

இவ்வருடத்தின் ஆரம்பத்திலிருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் முச்சக்கர வண்டி விபத்தின்போது 67பேர் உயிரிழந்துள்ளதாகவும் முச்சக்கர வண்டிச் சாரதிகளை விட அதில் பயணிப்பவர்களே அதிகமாக உயிரிழந்து வருவதாகவும் தெரிவித்த அவர், முதற்கட்டமாக மேல் மாகாணசபையுடன் இணைந்து இத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து தற்போது மேல்மாகாணத்தில் முச்சக்கர வண்டிப் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.

இதனடிப்படையில், பதிவு செய்யப்பட்ட முச்சக்கர வண்டிச் சாரதிகள் விபத்தில் உயிரிழந்தால் 5 இலட்சம் ரூபாவும் முச்சக்கரவண்டியில் பயணிக்கும் பயணிகள் உயிரிழந்தால் 3 பயணிகளுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாவும் வழங்கப்படும்.

இத்திட்டம் அடுத்த மாத்திலிருந்து நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

Related Posts