நோயாளி பராமரிப்பின் தரத்தை மேம்படுத்துவதற்காக, துணை மருத்துவ சேவையின் (Paramedical) 8 தொழிற்துறைகளுக்கான பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
துணை மருத்துவ சேவையின் (Paramedical) புதிய பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பங்களைக் கோருவதற்கு சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, துணை மருத்துவ சேவையின் கீழ்வரும் 08 தொழிற்துறை பிரிவுகளுக்கான பயிற்சிப் பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன:
- பல் தொழில்நுட்பவியலாளர் (Dental Technician)
- பொது சுகாதார பரிசோதகர் (Public Health Inspector – PHI)
- செயற்கை உறுப்பு மற்றும் பொருத்துறுப்பு நிபுணர் (Prosthetist and Orthotist)
- சுகாதார பூச்சியியல் அதிகாரி (Health Entomology Officer)
- பாடசாலை பல் சிகிச்சை நிபுணர் (School Dental Therapist)
- மின்விசையலைவரைவு தொழில்நுட்பவியலாளர் (Electro Cardiographer – ECG)
- மருந்து தயாரிப்பாளர் / மருந்தாளர் (Dispenser)
- மின்மூளை வரைவு தொழில்நுட்பவியலாளர் (Electro Encephalographer – EEG)
மேலும், 2026 ஓகஸ்ட் 07 ஆம் திகதியிடப்பட்ட 2501 ஆம் இலக்க அரசாங்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் A/L பரீட்சையில் விஞ்ஞானம் அல்லது கணிதப் பாடத்துறைகளில் சித்தியடைந்த மாணவர்களிடமிருந்து இப்பயிற்சிப் பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
இப்பயிற்சிப் பாடநெறிகளுக்காக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2026 ஓகஸ்ட் 31 ஆகும்.