Ad Widget

பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக தெளிவுபடுத்தினார் வடமாகாண முதலமைச்சர்!

வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைப்பதற்கு 2010ஆம் ஆண்டு காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படவிருக்கும் காணிகளை நேற்று முன்தினம்(சனிக்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதனையடுத்து வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமைப்பது பொருத்தம் என்பது தொடர்பாக நேற்று ஞாயிற்றிக்கிழமை வட மாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைப்பதற்கான காரணத்தை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மாவை சேனாதிராஜாவுக்கு தெளிவுபடுத்தினார்.

இதன்போது, 2010ஆம் ஆண்டு கைத்தொழில் மற்றும் வணிகத் துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமைத்துவத்தின் கீழ் ஓமந்தையில் வடக்கிற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணி தெரிவுசெய்யப்பட்டு, அனைத்து நிறுவனங்களினதும் ஒத்துழைப்பும் பெறப்பட்டதுடன் வரைபடம் தயாரிக்கும் பணியும் இடம்பெற்றது.

இதனால் எந்தவொரு பிரச்சனையுமின்றி ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணியைப் பெற்றுக்கொள்ளமுடியுமெனவும், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், வடமாகாண சபை உறுப்பினர்களதும் அனுமதியை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Posts