Ad Widget

ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க வேண்டும்: வடக்கு மீனவர்கள்

இருநாட்டு மீனவர்களது, 4ஆம் கட்ட பேச்சுவார்த்தையை நடாத்துவதற்கு  முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தாங்கள் சந்திக்க வேண்டும் என்று வடபகுதி மீனவர்கள் கோரிக்ககையை விடுத்துள்ளனர்.

தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரம் வழங்குவது உள்ளிட்ட
வடபகுதி மீனவர்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் சம்பந்தமாகவே இவ்விருவருடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, வடப்பகுதி மீனவ கூட்டுறவு சங்க தலைவரும்  இலங்கை மீனவப்பிரதிநிதிகள் குழுவின் அங்கத்துவருமான வி.பொன்னம்பலம் இலங்கை-இந்திய மீனவ நலன்புரி அமைப்பின் ஆலோசகரும் மீன்பிடிதுறை அமைச்சின் விசேட செயலனி குழு அங்கத்தவருமான எஸ்.பி.அந்தோனிமுத்துவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்விடயம் சம்பந்தமாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கவனத்துக்குகொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ள அந்தோனிமுத்து, எதிர்வரும் புதன்கிழமைக்குள் உரிய பதில் கிடைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

Related Posts