Ad Widget

வடமாகாண சபையை முற்றுகையிட்டு போராட்டம்

வடமாகாண கடற்பகுதியில் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்தக் கோரி வடமாகாணசபையை முற்றுகையிட்டு மாகாண கடற்றொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இன்றைய தினம் காலை 9.00 மணிக்கு வடமாகாணத்தின் 4 மாவட்டங்களிலும் இருந்து வந்த கடற்றொழிலாளர்கள் வடமாகாணசபை மற்றும் வடமாகாண முதலமைச்சர் அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்தக் கோரியும், இலங்கை நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட இந்திய இழுவை படகுகளை கட்டுப்படுத்தும் சட்டமூலத்திற்கு மாகண சபை உரிய அங்கீகாரம் வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய மீனவர்களை இலங்கை கடற்பகுதிக்குள் இரு தினங்கள் அனுமதிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த முற்றுகை போராட்டம்

நடைபெற்றது.

இதன்போது மாகாணசபை முதலமைச்சர் அலுவலகம் ஆகியவற்றை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.

சுமார் 10.30 மணி வரையில் இந்த போராட்டம் நடைபெற்றநிலையில்,

 மாகாணசபை அமைச்சர்கள் உறுப்பினர்கள் இணைந்து மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இதன்போது வடமாகாண மீனவர்களின் போராட்டங்களுக்கு மாகாணசபை உறுதுணையாக இருக்கும் எனவும், இந்திய மீனவர்களை இரு நாள் அல்ல இரு நிமிடங்கள் கூட அனுமதிக்க மாட்டோம் என உறுதியளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Related Posts