இந்திய மீனவர்களின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை: கடற்படைத் தளபதி

கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இந்திய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தன தெரிவித்தார். நேற்றையதினம் கச்சதீவில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே மேற்படி குறிப்பிட்டுள்ளார். மேலும் கடலில் ரோந்து செல்லும் கடற்படையினர் துப்பாக்கியைப் பயன்படுத்துவதாயின் அதற்காக கடற்படைத் தலைமையிடம் அனுமதி கோரப்பட வேண்டும். அவ்வாறான...

கவனிப்பாரின்றி தொடரும் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் இன்று ஆறாவது நாளாக இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்க முன்பாக குறித்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தாம் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தபோதும், இதுவரை தமக்கு எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படாத நிலையில் தாம் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் தமது போராட்டம் கவனிப்பாரற்று...
Ad Widget

விரைவில் தீர்வை தாருங்கள்; கேப்பாபுலவு மக்கள் கோரிக்கை

கேப்பாபுலவு சொந்த நிலத்தை பெற்றுக்கொள்வற்காக மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று பதின்மூன்றாவது நாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதேவேளை சாகும் வரையான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமது சொந்த நிலத்தை விடுவிக்குமாறு புலவுக்குடியிருப்பு மக்கள் முன்னெடுத்த போராட்டம் கடந்த முதலாம் திகதி முடிவுக்கு வந்தநிலையில் கேப்பாபுலவு பூர்வீக நிலத்தை கோரி மக்கள்...

தென்மராட்சியில் டெங்குத் தாக்கம் அதிகரிப்பு!

தென்மராட்சியில் டெங்குத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்று சாவகச்சேரி சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். அண்மைக்காலமாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலை வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 9 நாள்களில் மட்டும் டெங்குத் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டியிருந்தது. அதையடுத்து சுகாதாரப் பிரிவினரால் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த டெங்கு பரிசோதனையின் போது நுளம்பு...

கச்சதீவில் சிறிய தீ விபத்து!

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்றிரவு திடீரென மெழுகுவர்த்தி ஏற்றும் இடத்தில் தீப் பற்றியதில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. நேற்று சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மெழுகுதிரி ஏற்றும் இடத்தில் திடீரென தீப்பற்றியது. இதனால் சிறிது நேரம் அப்பகுதி புகைமூட்டமாக காணப்பட்டது. எனினும் தெய்வாதீனமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. தமிழக மீனவர்கள் கச்ச தீவு திருவிழாவைப்...

கிளிநொச்சியில் கடும் மழை

கிளிநொச்சியில் நேற்று கடும் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். காலபோக நெற் செய்கையின் அறுவடை தற்போது முழுமையாக நிறைவு பெறாத நிலையில் கடும் மழையின் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்

மாங்குளம் நகர்கிறது மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம்

வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு உட்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனை மாங்குளத்தில் அமையவுள்ளது. இதற்கான பணிமனைக் கட்டிடத்துக்கான அடிக்கல் மாங்குளத்தில் நாட்டப்பட்டுள்ளது. வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்று முன்தினம் சனிக்கிழமை (11.03.2017) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாக அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார். இரண்டு மாடிகளைக் கொண்டதாக அமையவுள்ள இக்கட்டிடத்தை...

கூட்டமைப்பின் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை!

வவுனியாவில் நடைபெற்று வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அவசர கலந்துரையாடலில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கலந்து கொள்ளவில்லை. ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க ஆதரவு வழங்குவதா- இல்லையா, தற்போதைய மக்கள் போராட்டங்கள், தற்போதைய அரசியல் சூழ்நிலை, அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக கூட்டமைப்பின் கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. இதில்...

மீண்டும் பரபரப்பாகும் அப்ப விவகாரம்: கூட்டமைப்பின் கூட்டத்திற்கு அப்பம் சாப்பிட்டுவிட்டு வந்த சம்மந்தன்

வவுனியாவில் இன்று நடைபெறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்திற்கு வரும் போது நான் அப்பம் சாப்பிட்டு விட்டே வந்தேன் என கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார். கூட்டம் ஆரம்பமாக தயாரான நிலையில் மண்டபத்தில் அமர்ந்திருந்த எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன், தனக்கு அருகில் இருந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற...

வடமாகாண கல்வி அமைச்சர் மீது சுகிர்தன் குற்றச்சாட்டு!

கல்வி அமைச்சர் மீது காசு விடையத்தில் ஒரு ரூபாய் கூட ஊழல் சொல்ல முடியாது. ஆனால் நிர்வாக ரீதியிலே பல பிரச்சினைகள் உள்ளது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்துள்ளார். கடந்த 09.03.2017 அன்று நடைபெற்ற மாகாணசபை அமர்வில் முன்வைக்கப்பட்ட கவனஈர்ப்பு ஒன்று தொடர்பில் தனது கருத்தினை முன்வைக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

சவுதியிலிருந்து திரும்பியவர் சடலமாக மீட்பு

சவுதி அரேபியாவில் இருந்த கடந்த 7ஆம் திகதி இலங்கைக்குத் திரும்பியவர், கொழும்பு கோட்டைப் பகுதியிலுள்ள விடுதியொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். கதிரமலை மகேந்திரராஜா (வயது 34) எனும் இந்நபர், அரேபியாவில் இருந்த இலங்கைக்கு வந்துள்ளார். இதன்போது, விமான நிலையத்துக்குச் சென்ற மனைவியிடம் தனது பயணப் பொதிகளை வழங்கி, அவரை யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் உள்ள...

தமிழ் தேசியக் கூட்டமைப்பே எனது கட்சி உருவாக்கத்திற்கு காரணம் : கருணா

தமிழ் மக்களுக்கான சிறந்த தொரு அரசியல் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை எதிர்பார்த்திருந்த போதிலும் கூட்டமைப்பு தமது கடமைகளை சரிவர நிறைவேற்றவில்லையென முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கான கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றியிருந்தால் தனது தலைமையில் தமிழர் ஐக்கிய சுதந்திர...

சாகும் வரையான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த மக்கள்

கேப்பாபுலவு நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இருவர் சாகும் வரையான உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று காலை குறித்த இருவரும் இராணுவ முகாமிற்கு முன்பாக சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமது சொந்த காணிகளில் மீள்குடியேற்றுமாறு தெரிவித்த மக்கள் கெடந்த முதலாம் திகதி முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த நிலையில் கேப்பாபுலவு...

சிறுவன் ஒருவன் சடலமாக மீட்பு

தூக்கில் தொங்கி இறந்ததாக தெரிவித்து சிறுவன் ஒருவனது சடலம் நேற்று மதியம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். துன்னாலை வடக்கைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் வீட்டில் யாரும் இல்லாத போது சுருக்கிட்டு கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன் தயான் விசாரணைகளை...

திரையரங்கில் குழு மோதல்; காவலாளி, பொலிஸ் படுகாயம்

யாழ் நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் நேற்றையதினம் இடம் பெற்ற குழு மோதலில் பொலிஸார் மற்றும் காவலாளி ஆகியோர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்.நகரில் உள்ள திரையரங்குக்கு நேற்றைய தினம் 3 பேர் அடங்கிய குழுவினர் திரைப்படம் பார்ப்பதற்கு வந்துள்ளனர். அப்போது திரைப்படம் பார்ப்பதற்கான நுழைவுச்சீட்டுகள் பெறுவதற்கு வந்தவேளை, திரைப்படம் ஆரம்பித்து விட்டதாகவும்...

பிரிட்டனில் அகதி அந்தஸ்த்து பெற்றவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி

பிரிட்டனில் அகதி அந்தஸ்துப் பெற்றுப் பின்னர் நிரந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்களை மீண்டும் உத்தியோகபூர்வ மீள்பரிசீலனைக்கு உட்படுத்தும் புதிய கொள்கை அல்லது நடைமுறை ஒன்றினை உள்துறை அலுவலகம் வெளியிட்டிருக்கிறது. பிரித்தானிய உள்துறை அலுவலகத்தினால் நேற்றையதினம் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புதிய கொள்கை அல்லது நடைமுறையின் பிரகாரம் பிரித்தானியாவில் முதன் முதலாக அகதி அந்தஸ்துப்பெற்று ஐந்து வருடங்களின்...

காணி விடுவிப்பு தொடர்பில் சம்பந்தன் அவர்கள் பாராளுமன்றில் ஆற்றி உரையின் முழு வடிவம்

கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்களே, நான் பின்வரும் ஒத்திவைப்புப் பிரேரணயை சமர்ப்பித்து பின்னர் அது தொடர்பாக உரையாற்றுகிறேன்: “2009 அம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்தபோது, தனிப்பட்ட பிரசைகளுக்குச் சொந்தமான பொருந்தொகைக் காணிகளில் இராணுவத்தினர் தங்கியிருந்தமையினால்: இக்காணிகளுள் பெரும்பாலானவை பாதுகாப்புக் காரணங்களுக்காக குடிமக்களிடமிருந்து இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டன. உதாரணமாக, ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கு...

மக்கள் போராடும் முன் ; வலி வடக்கு காணிகளை விடுவியுங்கள்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகளை ஒரு மாதகாலத்திற்குள் விடுவிக்குமாறு காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையின் தொழிற்சங்க தலைவரும் யாழ்பாண பிரஜைகள் குழுவின் தலைவருமான விஜயரட்ணம் ரெட்ணராஜா கேட்டுக்கொண்டுள்ளார். வலிகாமம் வடக்கு பகுதி மக்கள் காணிகளை விடுவிக்குமாறு கோரி சத்தியாக்கிர போராட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்னர் அவற்றை விடுவிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். காங்கேசன்துறை,...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நம்பிக்கை தன்மை கேள்விக்குறி

ஐ.நா தீர்மானத்தின் உள்ளடங்களை நிறைவேற்ற மாட்டோம் என வெளிப்படையாக கூறும் அரசாங்கத்திற்கு மேலதிக கால அவகாசம் வழக்கும் நடவடிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தும் செயற்பாடு என சிவில் சமூக அமையம் குற்றஞ்சாட்டியுள்ளது. யாழ் ஊடக மையத்தில் நேற்றய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய சிவில் சமூக ஊடக...

வேலையற்ற பட்டதாரிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் சந்திப்பு!

வடக்கு மாகாணத்தின் வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகளுக்கு சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் நேற்றைய தினம் அலரிமாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஒழுங்குபடுத்தியுள்ளார். இச்சந்திப்பில் வடமாகாண பட்டதாரிகள் சமூகத்தின் பிரதிநிதிகள் ஆறு பேர் கொண்ட குழுவும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்களான சுகிர்தன், அஸ்வின்...
Loading posts...

All posts loaded

No more posts