- Wednesday
- June 17th, 2026
யாழ்ப்பாணம் இருபாலை கிழக்கு குடிநீர் விநியோகத்துக்கு நீர்தாங்கி அமைக்கப்பட்டு பரீட்சார்த்த அடிப்படையில் எட்டு இடங்களில் நீர்விநியோகம் இடம்பெற்று வருகின்றது. இதற்கான ஏற்பாடுகளை வலி கிழக்கு பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது. இந்த நீர்த்தாங்கி அமைப்பதற்காக 72 இலட்சம் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. விரைவில் இப்பிரதேசங்களில் குழாய் இணைப்புக்கள் மூலம் நீர்வழங்கப்படவுள்ளது
அதிகாலை வேளை கூரிய ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த 10 பேர் கொண்ட கும்பலொன்று வீட்டிலிருந்தவர்களைத் தாக்கி பாரிய கொள்ளைச் சம்பவமொன்றில் ஈடுபட்டது. இச்சம்பவம் கடந்த புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் வசாவிளான் கிழக்கு கன்னியர்மட வீதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் தம்பதியர்களான தம்பு மகாதேவன் (வயது 65), மகாதேவன் இராஜேஸ்வரி (வயது 61) ஆகிய...
தமது பூர்வீக நிலத்தை கையளிக்குமாறு கோரி கடந்த 8 நாட்களாக இரவு பகலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களை 24 மணிநேரமும் ராணுவம் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகத்துக்கு முன்னால் இம் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், ராணுவ முகாமுக்கு முன்னால் சீ.சீ.ரி.வி. கமராவை பொருத்தி...
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் 231 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி மீசாலை மேற்கு வயல் பகுதி ஒன்றிலிருந்து குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதியின் பெறுமதி இரண்டு கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை தொடர்ந்து 7.30 மணியளவில் குறித்த கஞ்சா பொதிகள்...
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கணவன் மீது அசிட் வீசிய மனைவியை யாழ்ப்பாணக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். குருநகர் பகுதியை வசிப்பிடமாக கொண்ட இந்த பெண் கணவருடன் ஏற்பட்ட தகராறினை தொடர்ந்து மேற்படி செயலில் ஈடுபட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட தகராறினால் கணவன் மனைவி மீது அசிட் தாக்குதல் நடாத்த முயற்சித்தவேளையில் மனைவி அசிட் போத்தலைப்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் அவசரமாகக் கூடும் கூட்டம் நாளை வவுனியாவில் நடைபெறவுள்ளது. வவுனியாவில் உள்ள விடுதி ஒன்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாளை காலை 9.30 மணியளவில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சிறீலங்காவுக்கு கால அவகாசம் வழங்குவது...
“மீள்குடியேற்றம் நடைபெறும். இராணுவம் வெளியேறும். காணாமல் போகச்செய்யப்பட்டோர் கண்டுபிடிக்கப்படுவர். அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர். வடக்கு-கிழக்கு இணைக்கப்படும். சமஷ்டி அரசியலமைப்பு உருவாகும். தமிழ் மக்கள் கௌரவமாக வாழும் சூழல் ஏற்படும் என்று நீங்களும் மக்களிடம் நம்பிக்கையூட்டினீர்கள். எமது மக்களும் பலமான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். கடந்த இரண்டு வருடங்களாக, அந்த நம்பிக்கைகளுக்கு சாவுமணி அடிக்கப்பட்டதே தவிர, அவர்களது கோரிக்கைகள்...
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 10 மீனவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நாகை அருகே ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினர் இந்த 10 மீனவர்களையும் கைதுசெய்திருந்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களுள் சிங்கள மற்றும் தமிழ் மீனவர்கள்...
முல்லைத்தீவு முறுகண்டிப் பகுதியில் நேற்று காலை 11.30 மணியளவில் புகையிரதமும் வேன் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் வேன் சாரதி அதிஸ்டவசமாக காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினார். ஸ்கந்தபுரம் பகுதியில் இருந்து கிளிநொச்சியை நோக்கி வந்துகொண்டிருந்த ஹயஸ் வேன் முறுகண்டிப்பகுதியில் உள்ள ரயில் கடவையை கடக்க முயன்றபொழுது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கடவையில் இருந்த சமிக்ஞை விளக்கு சரியாக வேலை...
எமது நாட்டில் தனியார்த்துறை மருத்துவக் கல்லூரி விடயம் தொடர்பான தீர்மானங்கள், இலங்கை மருத்துவ சபையின் பங்களிப்புகளுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். நேற்றய தினம் நாடாளுமன்றத்தில் தெற்காசிய மருத்துவ மற்றும் தொழில்நுட்ப நிறுவகம் பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....
தமிழ் சிவில் அமைப்புகள் , தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியற் கட்சிகள் இணைந்து ஐநா மனித உரிமை பேரவைக்கு இன்று அனுப்பிவைத்துள்ள கூட்டு மனுவின் தமிழ் வடிவம்.. இலங்கை ஐ.நா மனித உரிமைப் பேரவையின் நம்பகத்தன்மைக்கு சவால் விடுக்கின்றது. ஐ.நா மனித உரிமைப் பேரவை உறுதியாகப் பதிலிறுப்பது அவசியம். தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற் சங்கங்களின்,...
பிரான்ஸில் இருந்து இலங்கை திரும்பிய மட்டக்களப்பை சேர்ந்த தந்தையும் மகளும் நேற்று (புதன்கிழமை) மாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு 4, ஆரையம்பதியைச் சேர்ந்த அலையப்போடி தியாகராசா அவரது மகள் தியாகராசா ஜனனி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் மட்டக்களப்பிலிருந்து...
வேலை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகளால் வடமாகாண சபை அமர்வு 2.30 மணி நேர தாமதத்திற்கு பின்னரே ஆரம்பமாகின. வடமாகாண சபையின் 87 ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அமர்வு ஆரம்பமாக முன்னதாக வடமாகாண பட்டதாரிகள் வேலை கோரி மாகாண சபை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடுத்து...
அண்மையில் போலிஸ் துப்பாக்கி சூடு காரணமாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கை வட கிழக்கு மாகாணங்களுக்கு அப்பால் அமைந்துள்ள நீதிமன்றமொன்றுக்கு மாற்றுமாறு அதன் சந்தேக நபர்கள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு சட்ட மா அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட வழக்கின் சந்தேக நபர்களாக நிறுத்தப்பட்டுள்ள ஐந்து போலிஸ் உறுப்பினர்கள் இந்த மனுக்களை...
நிலத்தடி நீர் மாசுபடும் வகையில் யாழ்ப்பாணம் குடாநாட்டில் அனுமதியின்றி அமைக்கப்படும் குழாய்க் கிணறுகளைத் தடைசெய்ய வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நீர்வள முகாமைத்துவக் கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குடாநாட்டின் நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு குழாய்க் கிணறுகளும் ஓர் காரணமாக அமைகின்றது. வீடுகள், பொதுக்கட்டிடங்கள், அமைக்கும் போது அதற்கான அனுமதியில் குழாய்க் கிணறுகள்...
வடக்குமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கடந்த ஒரு வாரகாலமாக கவனயீர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் நிலையில் அதன் ஒரு கட்டமாக இன்று வடக்கு மாகாணசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்துகின்றனர். இன்று வடக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், தமது கோரிக்கையை குறித்து கவனஞ்செலுத்த வேண்டுமென வலியுறுத்தி இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வடக்கு மாகாண வேலையற்ற...
வடமாகாண அமைச்சுக்களில் நிலவும் வெற்றிடங்களின் முழு விபரத்தையும் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு வடமாகாண சபையின் அவைத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். வடமாகாண சபையின் அவைத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அமைச்சுக்களின் செயலாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 27 ஆம் திகதி முதல் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள...
இலங்கை மற்றும் இந்திய அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலை அடுத்து, பரஸ்பரம் இருநாட்டு மீனவர்களையும் விடுவிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. தமிழக மீனவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து கொழும்பில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கமைய, இலங்கை சார்பில் 85 மீனவர்களும் இந்தியா சார்பில் 19 மீனவர்களும் விடுவிக்கப்படவுள்ளனர். தற்போதுள்ள பதற்றத்தை தணிக்கும்...
இவ் வருடத்தில் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும் தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள், இவ் வருடம் மார்ச் 28ம் திகதியும், இம்முறை இடம்பெறவுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் டிசம்பர் 27ம் திகதியும் வௌியிடப்படவுள்ளன. அத்துடன், ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை...
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேக நபர்களுக்கு மீண்டும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது 12 சந்தேக நபர்களும் மன்றில் முன்னிலை படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து சந்தேக நபர்களை...
Loading posts...
All posts loaded
No more posts
