பிரபாகரன் தெய்வமாக போற்றப்படுகின்றார் : கோட்டா

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் தெய்வமாக போற்றப்படுவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரபாகரனுக்கு எதிராக கருத்து வெளியிடுவோரை சமூக வலைத்தளங்களில் இதுவரை பார்க்க முடியவில்லை எனவும் அது குறித்து கவலை அடைவதாகவும் அவர் கூறியுள்ளார். பிரபாகரன் தெய்வம் போல் நடத்தப்படுகின்ற போதிலும் மஹிந்த ராஜபக்ச, ஆட்கொலை புரிந்தவர் எனவும் திருடர்...

வவுனியாவில் இடம்பெற்றது கூட்டமல்ல நாடகம்

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், ஜெனிவா கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அங்கு சென்று இரகசியமாக ஒத்துக் கொண்ட தீர்மானத்தை, ஐனநாயகத் தீர்மானமாக மக்கள் மத்தியில் காட்டுவதற்கான நாடகமாகத் தான், வவுனியாவில் இடம்பெற்ற கூட்டம் அமைந்துள்ளது” என, குற்றஞ்சாட்டியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி, இந்த நாடகத்தை முதலமைச்சரும் ஏற்கெனவே அம்பலப்படுத்தியிருப்பதாக கூட்டிக்காட்டியுள்ளது. சம்மந்தன், சுமந்திரன்...
Ad Widget

பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள எமக்கு தீர்வு வேண்டும் : நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள்

“நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் தொழிலை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்” என, நெடுந்தீவு கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சமாசத்தலைவர் கி.அருள்ஜீவன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பல்வேறு வழிகளிலும் பின்தங்கிய நிலையில் காணப்படும் நெடுந்தீவு பகுதியில் வாழ்ந்து வரும் மீனவர்கள், தமது தொழில் நடவடிக்கைகளை கைவிட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். கச்சதீவுக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடைப்பட்ட பகுதி என்பதால், இந்திய...

சீனி, கோழி இறைச்சிக்கான கட்டுப்பாட்டு விலைய நீக்க முடிவு

வெள்ளைச் சீனி மற்றும் புரொய்லர் கோழி இறைச்சி ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலைகளை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வௌியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதின் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கைச் செலவு குழுவில் குறித்த இரண்டு பொருட்கள் தொடர்பிலும் நுகர்வோரின் தேவைப்பாடு, இறக்குமதி விலை மற்றும் சந்தை விலை போன்றவற்றை கருத்தில் கொண்டு...

மக்களே அவதானம் : மாலை வேளையில் இடியுடன்கூடிய மழை

பருவப்பெயர்ச்சி காலநிலை ஆரம்பித்துள்ளதால் எதிர்வரும் நாட்களில் மாலை வேளையில் நாட்டின் பல பாகங்களிலும் மழைபெய்யக்கூடிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் எதிர்வுகூறியுள்ளது. குறித்த காலநிலை ஏப்ரல் மாதம் வரையில் தொடரவுள்ளது. எனவே பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை மற்றும் இடியுடன்கூடிய மழை பெய்யவுள்ளது. மத்திய, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலேயே அதிகளான மழைவீழ்ச்சி பதிவாகவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது....

நாளை கிளிநொச்சியில் பாரிய ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக நாளைய தினம் காலை 10 மணிக்கு பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்தக்கோரியும், பறிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் சமவுரிமை மக்கள் இயக்கத்தால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. யாழ்.ஊடக மையத்தில்...

சொகுசு கார்களில் பயணிக்கும் அரசியல்வாதிகளுக்கு மக்களின் நிலை தெரிவதில்லை: பன்னங்கண்டி மக்கள்

மழைக்கும் வெயிலுக்கும் ஈடுகொடுக்க முடியாத தகரக் கொட்டில்களில் வாழும் தமது நிலை, அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லையென கிளிநொச்சி பன்னங்கண்டி மக்கள் தெரிவித்துள்ளனர். காணி உறுதியற்ற நிலையில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் இப்பிரதேசத்தில் எவ்வித வசதிகளும் இன்றி வாழ்ந்துவரும் பன்னங்கண்டி மக்கள், கடந்த 10 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயொருவரே...

தமிழ் அரசியல்வாதிகள் நல்லாட்சிக்கு வலுசேர்க்கின்றனர்: காணாமல் போனோரின் உறவுகள் குற்றச்சாட்டு

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்ட தமது உறவுகளை கடந்த எட்டு வருட காலமாக கையளிக்க முடியாத இந்த அரசாங்கம், இன்னும் இரண்டு வருட காலத்தில் எதனை சாதிக்கப்போகின்றது என்ற நம்பிக்கையில் கால அவகாசம் வழங்குவதற்கு தமிழ் தலைமைகள் உடன்பட்டுள்ளனர் என்ற விடயம் தெரியவில்லையென காணாமல் போனோரின் உறவுகள் அங்காலாய்க்கின்றனர். காணாமல் போன தமது உறவுகளை கையளிக்குமாறு கோரி...

வடக்கு மாகாணத்தில் 549 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கிவைக்கப்பட்டுள்ளது

வடக்கு மாகாணத்தில் பட்டதாரிகள் 549 பேருக்கும், 480 ஆசிரியர் கலாசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண ஆசிரியர் சேவையில் பட்டதாரிகளையும், ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களையும் வடமாகாண ஆசிரியர் சேவையில் உள்ளீர்ப்பு செய்வதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று காலை யாழ். இந்து மகளீர் கல்லூரியில் நடைபெற்றது. இதன்போது 549 பட்டதாரிகளுக்கும் 480 ஆசிரியர் கலாசாலை...

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கு சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 20ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம் றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரு சந்தேகநபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையை தொடர்ந்து...

ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த காணியில் கால்பதித்தனர் உரிமையாளர்கள்

கடந்த 20 வருடங்களாக வடக்கிற்கும் தெற்கிற்கும் செல்லும் பயணிகள் மற்றும் வாகனங்களை சோதனையிடும் பலமான சோதனைச்சாவடியாக காணப்பட்ட வவுனியா ஓமந்தை சோதனைச் சாவடி அமைந்திருந்த காணியை, அதன் உரிமையாளர்கள் இன்று (திங்கட்கிழமை) அடையாளப்படுத்தினர். 18 குடும்பங்களுக்குரிய 41 ஏக்கர் காணியை அபகரித்து இச் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மஹிந்த ஆட்சிக்காலத்தில் இக்காணிகளை சுவீகரிப்பதற்கான நோட்டீஸ்...

ஸ்ரீலங்கா படைகள் தொடர்ந்தும் கேட்பாரின்றி செயற்படுகின்றன; யஸ்மின் சூகா

ஸ்ரீலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளை கடந்த போதிலும், ஸ்ரீ லங்கா படையினர் கேட்பாரின்றி தொடர்ந்து செயற்படுவதாக, அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார். அனைத்துலக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். போர் நடந்த பகுதிகளில் தமிழ் மக்கள் இராணுவ மயப்படுத்தப்பட்ட, கண்காணிப்பு...

புதுடில்லியில் நாளை ஆரம்பமாகவுள்ள தீவிரவாத எதிர்ப்பு கருத்தரங்கில் சம்பந்தன் உரை!

நாளை புதுடில்லியில் நடைபெறவுள்ள தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கில் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றவுள்ளார். NIA எனப்படும், இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரமைப்பு, இந்தியா பவுண்டேசன், ஹரியானா சுவர்ண உற்சவ் ஆகியன இணைந்து தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு-2017 என்ற கருத்தரங்கை ஒழுங்கு செய்துள்ளன. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தீவிரவாதம் என்ற தொனிப்பொருளில், இந்தக் கருத்தரங்கு நாளை...

சுமந்திரன் கொலை முயற்சி; 6ஆவது சந்தேக நபருக்கு பிடியாணை

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட 6 ஆவது சந்தேக நபருக்கு சர்வதேச பிடியாணை பிறப்பித்து, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, இன்று உத்தரவிட்டார். அத்துடன், சந்தேக நபர்கள் ஐவரின் விளக்கமறியலை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிப்பதாகவும் நீதவான் கூறினார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்ட சந்தேகத்தில்,...

பலாலி விமானநிலையத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களை பதியுமாறு அழைப்பு!

பலாலி விமான நிலையத்திற்காக அரசினால் 1952 மற்றும் 1983 ஆகிய காலப்பகுதிகளில் அரசினால் சுவீகரிக்கப்பட்டிருந்த 956 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்களையும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவகர்களிடம் பதியுமாறும் கோரப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையம் மற்றும் இராணுவ முகாமிற்காக 1952 மற்றும் 1983ம் ஆண்டுகளில் அரசினால் சுவீகரிக்கப்பட்ட நிலங்களிற்கான நட்ட ஈடு இன்றுவரை அரசினால்...

சமுகத்தில் புறக்கணிக்கப்படும் முன்னாள் பெண் போராளிகளிகள்

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண்கள் போராளிகளிகள் இன்று சமுகத்தினால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். யுத்ததிற்கு முன்னர் பெண் போராளிகளுக்கு காணப்பட்ட மரியாதை யுத்ததின் பின்னர் மழுங்கடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்றைய தினம் சர்வதேச...

இராணுவத்தினரின் போர்க்குற்ற அறிக்கை கோட்டாபயவிடம் கையளிக்கப்படும்

போர்க் குற்றங்களில் இலங்கை இராணுவம் ஈடுபடவில்லை எனும் வாக்குமூலங்கள் அடங்கிய 200 பக்கங்களைக் கொண்ட அறிக்கை, இன்று (திங்கட்கிழமை) முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு தும்முல்லையில் அமைந்துள்ள பௌத்த விகாரையில் வைத்து மேற்படி அறிக்கை கையளிக்கப்படவுள்ளது. லெப்டினன் ஜெனரல் தயா ரத்னாநயக்க, ரியல் அட்மிரல் எச்.ஆர். அமரவீர, ரியல் அட்மிரல்...

மாணவர் ஒன்றியம் கலைக்கப்பட்டது

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக பதிவாளர், பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவித்துள்ளார். பல்கலைக்கழகச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தமை மற்றும் பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறி, கலைப்பீட பீடாதிபதி மற்றும் பல்கலைக்கழக சிரேஷ்ட மாணவர் ஆலோசகர் ஆகியோரின் எழுத்துமூல மற்றும் வாய்மொழிமூலமாக வழங்கப்பட்ட பணிப்புரைகளை மீறியமை ஆகியவற்றுக்காக,...

‘அனுமதி கிடைத்தால் வீடும் கிடைக்கும்’

“கீரிமலையில் அமைக்கப்பட்ட நல்லிணக்கபுர வீடமைப்புகளைப் போன்று, அதன் தெற்குப் பக்கத்தில் 225 வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்” என, யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்தார். ‘நல்லிணக்கபுரத்தில் 33 மேலதிக வீடுகளைக் கட்டிக்கொடுத்திருக்கிறோம். 'அதனை, கடந்த 9ஆம் திகதி பயனாளர்களிடம் கையளித்தோம். அதேபோன்று, மாவன்கல்லடியில் 225 வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு,...

மறு அறிவித்தல் வரை மாணவர்கள் பல்கலைக்கழக வாளாகத்திற்குள் பிரவேசிக்ககூடாது!

யாழ். பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை மற்றும் இராமநாதன் நுண்கலைத் துறை தவிர்ந்த ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் முறைகேடான நடவடிக்கையின் காரணமாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். அதற்கமைய, விடுமுறை வழங்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts