Ad Widget

வடமாகாண கல்வி அமைச்சர் மீது சுகிர்தன் குற்றச்சாட்டு!

கல்வி அமைச்சர் மீது காசு விடையத்தில் ஒரு ரூபாய் கூட ஊழல் சொல்ல முடியாது. ஆனால் நிர்வாக ரீதியிலே பல பிரச்சினைகள் உள்ளது என வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த 09.03.2017 அன்று நடைபெற்ற மாகாணசபை அமர்வில் முன்வைக்கப்பட்ட கவனஈர்ப்பு ஒன்று தொடர்பில் தனது கருத்தினை முன்வைக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவரது உரையில் தெரிவித்ததாவது,

கடந்த காலங்களைப் போல நாங்கள் தொடர்ச்சியாகத் தவறுவிட்டுக்கொண்டிருக்க முடியாது. பாடசாலை பழையமணவர் சங்கம் அபிவிருத்திச் சங்கம் உள்ளிட்டவை இவர்தான் அதிபரா வரவேண்டும் எனக் கேட்டால் அவ்வாறுதான் நீங்கள் நியமனம் வழங்கப்போகின்றீர்கள் என்றால் தயவுசெய்து அவற்றை பத்திரிகை மூலம் கோல் பண்ணவேண்டாம். மற்றவர்களை அப்பிளிகேசன் போட வைக்கவேண்டாம் மற்றவர்களை நாங்கள் முட்டாள்கள் ஆக்கக்கூடாது. நாங்கள் விரும்பியவருக்குக் கொடுப்பதாயின் கல்வி அமைச்சரிற்கு அதற்கான வீட்டோ பவர் இருந்தால் அதைப் பயன்படுத்தி நியமனங்களை வழங்கவும்.

எமது கல்வி அமைச்சர் மீது காசு விடையத்தில் ஒரு ரூபாய் கூட ஊழல் சொல்ல முடியாது. ஆனால் நிர்வாக ரீதியிலே பல பிரச்சினைகள் உள்ளது. அமைச்சர் இதில் தலையிட வேண்டும். நீங்கள் உங்களது பெயரைக் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் நீங்கள் யார் யாருக்காகவோ அல்லது யார் யாரோ கேட்டுவிட்டார்கள் என்பதற்காக செய்யவெளிக்கிட்டு ஒட்டுமொத்தப் பிரச்சினையும் நாங்கள் உங்களிற்கு எதிராகக் கதைக்கக்கூடிய சூழ்நிலையை நீங்கள் உருவாக்கிவருகின்றீர்கள். நாங்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றோம். அந்த நம்பிக்கையை தயவுசெய்து உடைத்துவிடாதீர்கள் எனி வரும் காலத்தில் சரியானதை துணிந்து செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts