- Saturday
- June 13th, 2026
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேவிபுரம் – நடனமிட்டான் குளப்பகுதி மற்றும் ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், குளப்பகுதி அகழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம்.ஷம்சுதீன் முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) இவ் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. எனினும் குறித்த பகுதியிருந்து வெடிபொருட்கள் எவையும் மீட்கப்படாததால், அகழ்வுப் பணி கைவிடப்பட்டது. அகழ்வு...
வடக்கு கிழக்கிற்கு வரும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்கி கறுப்பு கொடி போராட்டத்தில் ஈடுபடுவர் என வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வலி. வடக்கு விடுவிக்கப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்த...
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவாலி பகுதியில் வியாபார நிலையமொன்றின் மீது நடத்தப்பட்ட வாள் வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றுமுன்தினம் இரவு மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவாலி சிந்தாமணி பகுதியில் உள்ள வியாபார நிலையமொன்றின்...
உலக ஊடக சுதந்திர தினமான நேற்ற(3) யாழில் ஊடக தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் ஏறப்பாட்டில் யாழ் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது. சிரேஸ்ர ஊடகவியாளர் தயாபரன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஷ் அணி)...
வடமாகாணத்தில் என்ன அபிவிருத்தி நடந்திருக்கிறது? என கேள்வி எழுப்பியிருக்கும் வடமாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா வடமாகாணசபை அபிவிருத்திக்கு கிடைத்த சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தவறவிட்டிருக்கின்றது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். வடமாகாணசபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும்...
மலையகத்தில் கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு நாம் பல முயற்சிகளை எடுத்தாலும் அதற்கு பல முட்டுக்கட்டைகள் வருகின்றது. மேலும் எங்களிடமும் கணித விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் இல்லை. எனவே இதற்கு ஒரு தீர்வாக இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வருவதற்கு தற்பொழுது இந்திய தூதரகத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக...
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக எதிர்வரும் ஐந்தாம் திகதி போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. ‘பேருந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகளினால், வைத்தியர்களை உருவாக்கமுடியாது’ என அமைச்சரொருவர் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் இலங்கை போக்குவரத்து சபையின் பொதுச்செயலாளர் சேபால லியனகே...
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நிலவிவரும் கடுமையான வறட்சியினால் சுமார் 3 இலட்சம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 9 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், வடக்கில் சுமார் 4 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 33 ஆயிரத்து 359 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு...
காங்கேசன்துறையில் மீட்கப்பட்ட மியன்மார் நாட்டவர்களை மிரிஹான முகாமுக்கு மாற்றுமாறு நிதிமன்றம் உத்தரவு
காங்கேசன்துறை கடற்பகுதியில் வைத்து மீட்கப்பட்ட 32 மியன்மார் நாட்டவர்களை மிரிஹான தடுப்பு முகாமுக்கு மாற்றுமாறு யாழ்.மல்லாகம் நீதிவான் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், 32 பேரில் 30 பேர் தவிர்ந்த ஒரு படகு ஓட்டிகளான இரு இந்தியர்களையும் சட்டமா அதிபரின் ஒப்புதல் பெறும்வரையில் தடுத்து வைக்கும் படியும் மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். யாழ்.காங்கேசன்துறையிலிருந்து 12 கடல்மைல்...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு திங்கட்கிழமை (01.05.2017) பி.ப 3.00 மணியளவில் கைதடிச் சந்தியில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணியுடன் ஆரம்பமாகியது. மேற்படி மோட்டார் சைக்கிள் பேரணியானது, ஏ9 வீதி வழியாக சாவகச்சேரி பஸ் நிலையத்தை அடைந்ததும், அங்கு கூடியிருந்த பல நூற்றுக்கணக்கான பொது மக்களுடன் இணைந்து சாவகச்சேரி வார்வனநாதர் சிவன்...
சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் மத்திய மாகாண பிரபல நடன ஆசிரியர்களின் நெறியாள்கையில் உருவான நடன அளிக்கைகளின் தொகுப்பான '' ஆடல் அரங்கம் '' நடன நிகழ்வு (29.04.2017) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. பொம்மலாட்டக் குழுவினரின் மான் ஆட்டம் , மயில் ஆட்டம் ,...
சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் இன்று மே மாதம் 3ஆம் திகதி புதன் கிழமை கொண்டாடப்படுகின்றது. பத்திரிகை நிறுவனங்கள், அல்லது ஊடக நிறுவனங்கள் செய்திகளை, கருத்துக்களை சுதந்திரமாக எவ்வித அச்சுறுத்தல்களும் தடைகளுமின்றி மக்களுக்கு வெளியிடுவதை பத்திரிகை சுதந்திரம் என்று வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. இத்தினம் பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் ‘மனித உரிமைகள் சாசனம்’ பகுதி 19 இல்...
வடமாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய பல இயற்கைச் சுற்றுலா மையங்கள் அமைந்துள்ள போதும் அவை முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் நகரசபை பிரிவுக்குட்பட்ட கீரி கடற்கரைப் பகுதியில், சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ‘கீரி சுற்றுலா கடற்கரை’ யினை நேறறு (செவ்வாய்க்கிழமை) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்....
ஆண்டுகாலமாக தீர்வின்றி போராடிவரும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். குறித்த சந்திப்பு எதிர்வரும் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்படி சந்திப்பின் போது, குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழ் மக்களின் காணி அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு...
நாற்பது வருட அரசியல் அனுபவம் கொண்ட திரு சம்பந்தன் அவர்கள் திட்டமிட்டே காய்நகர்த்தல்களை செய்துவருவதாகவும் அதற்கு முதல்வர் விக்கி உட்பட மாகாணசபை உறுப்பினர் அனந்தி உட்பட பலர் பயன்படுத்தப்படுவதாகவும் பகிரங்கமாக குற்றசாட்டியுள்ளார் கஜேந்திரகுமார். கொழும்பு தொலைக்காட்சி ஒன்றில் பங்குகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி தலைவர் கஜேந்திரகுமார் இதனை தெரிவித்தார். காலஅவகாசம் வழங்கவேண்டாம்...
தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆகிய இருவரையும் அதேபோன்று தமிழரசுக் கட்சியினையும் தொடர்ந்தும் அவதூறு பரப்பும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் செயல்பாடு தொடர்பில் ஆராய்ந்து கூட்டணி உயர் பீடத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க தமிழரசுக் கட்சியில் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் மத்திய செயல்குழுக் கூட்டம் நேற்றைய தினம்(2) மட்டக்களப்பில் இடம்பெற்றது. இக்...
சயிட்டம் நிறுவனம் தொடர்பான பிரச்சினையை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் 5ஆம் திகதி இலங்கை ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கையில் சுகாதார, கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற துறைகளிலுள்ள தொழிற்சங்கங்களும் இணைந்துகொள்ளவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
“புத்தூர், கிழக்கு பகுதியில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள், 18½ பவுண் நகைகளை திருடி சென்றுள்ளதாக நேற்று முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது” என, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் அனைவரும் தூக்கத்திலிருந்த நேரம் உள்ளே சென்ற திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 18½ பவுண் தங்க நகையை அபகரித்துச் சென்றுள்ளனர். திருடப்பட்ட நகையின் பெறுமதி 7 இலட்சத்து 20...
மன்னார் நகரசபை பிரிவிற்குட்பட்ட கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட ‘கீரி சுற்றுலா கடற்கரை’, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இன்று வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டது. மன்னார் நகரசபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் மன்னார் நகரசபையின் உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், வடக்கு...
கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு யாழில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் படுகொலை நினைவுதினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், யாழில் அமைந்துள்ள பிரபல ஊடக நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் யாழில் இன்று (செவ்வாய்க்கிழமை) இவ் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. இவ் அஞ்சலி நிகழ்வில் ஊடகவியலாளர்களின் உறவினர்கள் சுடரேற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தியதுடன், பொதுச் சுடரினை...
Loading posts...
All posts loaded
No more posts
