Ad Widget

ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியினை கூட்டமைப்பில் இருந்து விலக்க நடவடிக்கை!

தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் ஆகிய இருவரையும் அதேபோன்று தமிழரசுக் கட்சியினையும் தொடர்ந்தும் அவதூறு பரப்பும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் செயல்பாடு தொடர்பில் ஆராய்ந்து கூட்டணி உயர் பீடத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க தமிழரசுக் கட்சியில் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் மத்திய செயல்குழுக் கூட்டம் நேற்றைய தினம்(2) மட்டக்களப்பில் இடம்பெற்றது. இக் கூட்டத்திலேயே மேற்படி குழுவினை நியமிக்கும் தீர்மானம் எட்டப்பட்டு மூவர் அடங்கிய குழுவும் நியமிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் குறித்த குழுவில் வட மாகாண பேரவையின் தவிசாளர் சீ.வி.கே.சிவஞானம் , திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெண்டாயுதபாணி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிகரன் ஆகியோர் உள்ளடங்கிய மூவரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நியமிக்கப்பட்ட குழுவினர் தமிழரசுக் கட்சி தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியினால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் ஆராய்ந்து அதுதொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்கவேண்டும். அதேபோன்று தமிழரசுக் கட்சியில் இருந்து இடை நிறுத்தப்பட்ட இரு உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் சிவகரன் போன்றோரின் நடவடிக்கைகள் தொடர்பிலும் இக் குழுவினர் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பர்.

இவ்வாறான ஆராய்வின் பின்னர் தயாரிக்கப்படும் அறிக்கையினை கட்சியின் தலைவரிடம் குறித்த குழுவினர் கையளிப்பர் எனவும் தமிழரசுக் கட்சியின் நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Related Posts