உலக ஊடக சுதந்திர தினமான நேற்ற(3) யாழில் ஊடக தினம் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் ஏறப்பாட்டில் யாழ் நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு அருகில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.
சிரேஸ்ர ஊடகவியாளர் தயாபரன் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஷ் அணி) இன் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாண எதிர்கட்சி தலைவர் தவராசா, வடமாகணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் சட்டத்தரணி சுகாஸ், யாழ். பல்கலைக்கழக ஊடககற்கை, கலைப்பீட இணைப்பாளர் கலாநிதி எஸ்.ரகுராம், மற்றும்அரசியல் பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், சட்த்தரணிகள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் இவர்கள் யாழ். மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் கவனீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினார் இதில் வட மாகாண அவைத்தலைவர் சிவஞானம், மூத்த ஊடகவியாளர் வித்தியாதரன் என பல்ர் கலந்து கொண்டு கொல்லப்பட்ட காணாமல் போன ஊடகவியாளர்களுக்கு நீதிவேண்டி குரல் கொடுத்தனர்.
