Ad Widget

யாழ்ப்பாணத்தில் சர்வதேச நடன தின நிகழ்வு

சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு யாழ். இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் மத்திய மாகாண பிரபல நடன ஆசிரியர்களின் நெறியாள்கையில் உருவான நடன அளிக்கைகளின் தொகுப்பான ” ஆடல் அரங்கம் ” நடன நிகழ்வு (29.04.2017) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

பொம்மலாட்டக் குழுவினரின் மான் ஆட்டம் , மயில் ஆட்டம் , ஆகியவற்றுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. திருமதி சாந்தி நட்ராஜனின் மங்கள விளக்கேற்றலினைத் தொடர்ந்து ஈழத்து நடன அரங்கின் முன்னோடிகளும் விளக்கேற்றிக் கொண்டனர்.

ஷாந்தினி சிவநேசன் , கிருசாந்தி ரவீந்திரா ,பத்மினி செல்வேந்திர குமார், சிவந்தி ராமமூர்த்தி , உமா ஸ்ரீதரன் , யாழ். கல்வி வலய நடன ஆசிரியர்கள். யாழ்.இந்து மகளீர் கல்லூரி நடன ஆசிரியர்கள் மற்றும் நாகேஸ்வரன் ஆகியோரின் நெறியாள்கையில் நடன ஆற்றுகைகள் இடம் பெற்றன.

சாரி நடனம், கிராமிய நடனம் , குச்சுப்பிடி, நாட்டிய நாடகம் உட்பட மிகப் பிரமாண்டமான வித்தியாசமான தொழில் நுட்பப் பண்பாட்டுடன் கூடிய நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன . மண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் கலை ஆர்வலர்களின் மத்தியில் இந்நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை மிகையல்ல. மேலும் யாழ். இந்திய துணைத் தூதரகத்தினால் மதுரை மல்லி மாலையும் பெண்களுக்கு இலவசமாக வழங்கப் படடமையும் குறிப்பிடத்தக்கது. ​

Related Posts