இந்து சமய அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் பேரணி

தேசிய இந்து அறநெறிக்கல்வி விழிப்புணர்வு வாரம் மற்றும் இந்து சமய அறநெறிக்கல்வி கொடி தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.சத்தியசீலன் தலைமையில் கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மாவட்ட செயலகம் ஊடாக கிளிநொச்சி கிருஸ்ணர் கோவில் வரை பேரணியாக சென்று அனுஸ்டிக்கப்பட்டது. இந்து கலாச்சார...

எட்டு மாவட்டங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம்!

நாட்டில் எட்டு மாவட்டங்களில் டெங்கு நோய் பரவலுக்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுவதாக சுகாதார சேவை குடம்பிகள் ஆய்வு தொடர்பான உதவியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, குருநாகல், களுத்துறை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் அதிகரிப்புக்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்துள்ளார். இந்த...
Ad Widget

கிளிநொச்சி சந்தையில் புதிய கட்டடத் தொகுதிகள் வடக்கு முதல்வரால் திறப்பு

கிளிநொச்சி பொதுச்சந்தைப் பகுதியில் நெல்சீப் திட்டத்தின் கீழ் 22 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடைத் தொகுதிகள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பொதுச் சந்தையானது கடந்த 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டு கனகபுரம் பகுதியில் இயங்கி வந்தது. தொடர்ந்து குறித்த சந்தை 2013...

புங்குடுதீவு மாணவி படுகொலை தீர்ப்பாயம் கூடியுள்ளது

புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கு மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பாயத்தின் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று (12) திங்கட்கிழமை அழைக்கப்பட்டது. வழக்குத் தொடுநர் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி மன்றாடியார் நாயகம் எஸ்.குமாரரத்தினம் தீர்பாயத்தில் முன்னிலையாகி 9 சந்தேக நபர்களுக்கும் எதிரான குற்றப் பத்திரிகையை தீர்பாயத்தில்...

நியாய விலையில் மணலை வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

வீட்டுத்திட்டம் உள்ளிட்ட மக்களின் அவசியத் தேவைகளுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலயகம் முன் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நியாய விலையில் மணலைத்தா, நியாய விலையில் மணல் வேண்டும், மணலுக்கு விலையா? மலைக்கு விலையா?...

தபால் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பு

தபால் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது. இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது. நிர்வாக ரீதியாக தாம் முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு இதுவரையில் உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணி...

அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை : வடக்கு மாகாண சபையின் அடுத்த நடவடிக்கை என்ன?

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பில் டான் தொலைக்காட்சியில் நேற்றய தினம் ஒளிபரப்பாகிய அச்சமில்லை அச்சமில்லை நிகழ்ச்சி

யாழில் பெண்ணைத் தாக்கி பாரிய கொள்ளை

அச்சுவேலி தெற்கு வைத்தியசாலை வீதியில் உள்ள வீட்டுக்குள், வெள்ளிக்கிழமை (09) மாலை புகுந்த கொள்ளையர்கள், தனிமையில் இருந்த பெண்ணைத் தாக்கி, 52 பவுண் தங்க நகை மற்றும் 16 இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்றமை தொடர்பில், விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார், தெரிவித்தனர். தாக்குதலுக்கு இலக்கான ஸ்ரீமதி நடேசமூர்த்தி (வயது 59) என்ற...

காலையில் திறக்கப்பட்ட கதவு பகல்வேளையில் மூடப்பட்டது

வரலாற்றுச்சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம், இன்றுத் திங்கட்கிழமை (12) நடைபெறவுள்ளது. வருடாந்த பொங்கல் உற்சவம் வழமைபோன்று இம்முறையும் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நாட்டின் பல பாகங்களிலிருந்தும், வருகைதரும் பக்தர்களுக்குரிய போக்குவரத்துச்சேவைகள் உரிய முறையில் ஒழுங்குபடுத்த ப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன....

ஆயுத முனையில் அதிகாலை கொள்ளை

கிளிநொச்சி, கல்லாறு பகுதியில் ஆயுத முனையில் நாற்பது பவுண் தங்க நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபாய் பணம் என்பன, கொள்ளையிடப்பட்டுள்ளன இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் தனியார் வர்த்தக நிலையம் ஒன்றை உடைத்து கொண்டு, நேற்று (11) அதிகாலை உட்புகுந்த, இனந்தெரியாத குழுவொன்று, அங்கிருந்த கடை உரிமையாளர் மற்றும் அங்கு...

வடக்கு அமைச்சர்களின் விவகாரம் : தலையிடப்போவதில்லையென சம்பந்தன் அறிவிப்பு!

வட மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டு விவகாரத்தில் தான் தலையிடப்போவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைர் இரா.சம்பந்தன் அறிவித்துள்ளார். வடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் நியமிக்கப்பட்ட குழுவானது விசாரணையின் அடிப்படையில் இரண்டு அமைச்சர்களை பதவி விலகுமாறு அல்லது பதவி விலக்குமாறு அறிக்கையிட்டிருந்தது. இந்நிலையில், இந்தப்...

தூர இடங்களில் சென்று கற்பிக்காதவர்களின் நியமனம் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்படும் : வடக்கு முதலமைச்சர்!

நியமனம் வழங்கப்பட்ட பட்டதாரிகள் அனைவரும் தூர இடங்களில் சென்று பணியாற்றவேண்டும். இல்லையேல் அவர்களது நிரந்தர நியமனம் மீள் பரிசீலனைக்குட்படுத்தப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கணித, விஞ்ஞான, தொழிநுட்ப பட்டதாரிகள் 212 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்.மத்திய கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய வட...

செல்ஃபி எடுக்க முயன்ற சகோதரர்கள் ரயில் மோதி உயிரிழப்பு!

பம்பலபிட்டி – கொள்ளுபிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில் செல்ஃபி எடுக்க முயன்ற சகோதரர்கள் இருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் 12 மற்றும் 25 வயது மதிக்கத்தக்கவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியாக ஆபத்தான இடங்களில் புகைப்படம்...

இன்று முதல் போக்குவரத்துச் சட்டம் கடுமையாக அமுல்ப்படுத்தப்படும்: போக்குவரத்துப் பொலிஸ்

சாரதிகள் உட்பட போக்குவரத்துத் தொடர்பான சட்டங்களை மீறுவேர் மீது இன்று (திங்கட்கிழமை) முதல் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கொழும்பு நகரப் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் சுமித் நிஸ்ஸங்க தெரிவித்துள்ளார். பாதைச் சட்டத்தை மீறுவோர்களில் அதிகமானவர்கள் முச்சக்கரவண்டி சாரதிகளும், மோட்டார் சைக்கிள் சாரதிகளுமே காணப்படுகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த பாதை ஒழுங்கு...

கிளிநொச்சியில் நீடிக்கும் வரட்சிநிலை: பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் வரட்சிநிலை காரணமாக பவுசர்கள் மூலம் குடிநீர் விநியோகம் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரதேச சபைகள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினூடாகவும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கரைச்சிப்பிரதேச செயலர்பிரிவின் கீழ் உள்ள பொன்னகர் கோணாவில், மாலையாளபுரம், சாந்தபுரம், ஆகிய பகுதிகளிலும், பூநகரி பிரதேச...

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை முழுமையாக!

வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை முழுமையாக இங்கே தரவிறக்கம் செய்யலாம் NPC_Inquiry_Report  

யாழில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் தொண்டமனாறு கடற்பரப்பில் வைத்து சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவினை காங்கேசன்துறை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் இக் கடத்தல் தொடர்பில் சந்தேகநபர்கள் இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று இரவு காங்கேசன்துறை கடற்படையினர் கடற்பரப்பிலும் கடற்கரையை அண்டிய பகுதிகளிலும் வழமையான ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது தொண்டமனாறு கடற்கரையை அண்டிய பகுதியில்...

யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

யுத்தம் காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், அவர்களை நினைவு கூறவும் வடக்கு,கிழக்கு மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக அஞ்சலி நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்த அருட்தந்தை எழில் ராஜேந்திரன் பல தடவைகள் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு...

பல அபிவிருத்தி திட்டங்களை திறந்து வைத்தார் வடக்கு முதல்வர்

வடக்கு முதல்வர் சி.வி.விக்ணேஸ்வரன் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு நகர், தண்நீரூற்று உள்ளிட்ட பகுதிகளில் பல அபிவிருத்தி திட்டங்களை மக்கள் பாவனைக்கு கையளித்துள்ளார். இதற்கிணங்க குறித்த பகுதிகளில் அமைக்கப்பட்ட நூல் நிலையம், பொதுச்சந்தைகள், குடி நீர்விநியோக திட்டம் உள்ளிட்டவைகளை வடமாகாண முதலமைச்சர் நேற்று(வெள்ளிக்கழமை) திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்கள் மாவட்ட அரச அதிபர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

நிவாரணங்களை தாங்கிய ரயில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பயணம்

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட தென்பகுதி மக்களுக்கு உதவும் நோக்குடன் மனிதாபிமான ரயில் பயணம் இன்று (சனிக்கிழமை) காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து காலை ஆறு மணிக்கு பயணத்தை ஆரம்பித்துள்ளது. இந்த விசேட ரயிலில் பொதிகளை ஏற்றுவதற்கான 5 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த ரயில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மதவாச்சி, அனுராதபுரம்,...
Loading posts...

All posts loaded

No more posts