நாட்டில் எட்டு மாவட்டங்களில் டெங்கு நோய் பரவலுக்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுவதாக சுகாதார சேவை குடம்பிகள் ஆய்வு தொடர்பான உதவியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, குருநாகல், களுத்துறை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் அதிகரிப்புக்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 150 இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதோடு, 60 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்காலத்தில், டெங்கு நோய் பரவல் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.