Ad Widget

நியாய விலையில் மணலை வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

வீட்டுத்திட்டம் உள்ளிட்ட மக்களின் அவசியத் தேவைகளுக்கு நியாயமான விலையில் மணல் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டச் செயலயகம் முன் இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நியாய விலையில் மணலைத்தா, நியாய விலையில் மணல் வேண்டும், மணலுக்கு விலையா? மலைக்கு விலையா? எங்கள் மண் எங்களுக்கு இல்லையா?, தருவதோ ஜந்தரை இலட்சம், மணலுக்கோ இரண்டு இலட்சம், சட்டவிரோத மணல் அகழ்வை தடு, நியாய விலையில் மணலை வழங்கு, மணலுக்கு இலஞ்சமா எங்களுக்கு வஞ்சமா, உள்ளுர் வளம் உள்ளுர் மக்களுக்கே முன்னுரிமை, எமது மணல் எமக்கே முன்னுரிமையாக வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் குறுகிய கால இடைவெளியில் தமக்கு நியாய விலையில் மணலைக் கிடைக்கச் செய்வதற்கான நிர்வாகப் பொறிமுறையை உருவாக்கி அமூல்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கிளிநொச்சி மாவட்ட செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.

இந்தப் போராட்டத்தில் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார், மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Posts