Ad Widget

கிளிநொச்சி சந்தையில் புதிய கட்டடத் தொகுதிகள் வடக்கு முதல்வரால் திறப்பு

கிளிநொச்சி பொதுச்சந்தைப் பகுதியில் நெல்சீப் திட்டத்தின் கீழ் 22 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கடைத் தொகுதிகள் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பொதுச் சந்தையானது கடந்த 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டு கனகபுரம் பகுதியில் இயங்கி வந்தது.

தொடர்ந்து குறித்த சந்தை 2013 ஆம் ஆண்டு ஏற்கனவே சந்தைக்கு என ஒதுக்கப்பட்ட காணியில் இயங்க ஆரம்பித்தது.

இந்த நிலையில் கடந்த வருடம் தீ விபத்தினால் அழிவடைந்த கடைகளுக்குப் பதிலாக தற்போது நெல்சிப் திட்டத்தின் 22 மில்லியன் ரூபா செலவில் புதிதாக கடைத்தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதிதாக அமைக்கப்பட்ட கடைத்தொகுதிகளில் வெற்றிலை, தேங்காய், மட்பாண்டம், மருந்துப்பொருட்கள், புத்தகசாலை, பால் உற்பத்தி விற்பனைகள் என்பவற்றுக்காக 64 புதிய கடைத்தொகுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் நிகழ்வின்போது பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்குமாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, தவனாதன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபா் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts