சக பொலிஸ் அதிகாரியின் பெறுமதியான கடிகாரத்தை திருடிய பொலிஸ் அதிகாரி

ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சக பொலிஸ் அதிகாரியின் 1 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான கைக்கடிகாரத்தை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் பரிசோதகர், வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணைக்காக யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்க நேற்று...

நான்கு பேர் இணைந்து சட்டம் இயற்ற முடியுமாயின் நாடாளுமன்றம் எதற்கு? : சுமந்திரன்

”நாட்டில் என்ன நடக்கவேண்டுமென நான்கு பேர் இணைந்து சட்டமியற்றக்கூடியதாக இருக்குமென்றால் இந்த நாடாளுமன்றம் எதற்கு?” என நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார். நாட்டிற்கு புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லையென்றும், பலவந்தமாக காணாமல்போகச் செய்வதிலிருந்து ஆட்களை பாதுகாக்கும் சர்வதேச சமவாய சட்டமூலம் அவசியமில்லை என்றும், அண்மையில் மகாநாயக்கர்கள் தெரிவித்திருந்தமை தொடர்பாகவே அவர் இவ்வாறு...
Ad Widget

வடக்கில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு: மின்சக்தி அமைச்சர்

மாற்று சக்தி மின் நிலையத்தில் வடக்கில் உள்ள 2000 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையின் மிகப்பெரிய மாற்று சக்தி மின் உற்பத்தி நிலையத்துக்கான வேலைத்திட்டம், கிளிநொச்சியில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் மிகப்பெரிய மாற்று...

நந்திக்கடலை அண்டிய பகுதிகளில் மீன்பிடி தொழில் பாதிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் வறட்சி காரணமாக நந்திக்கடலை அண்டிய பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 4 ஆயிரத்து 800 குடும்பங்களை சேர்ந்த மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களை விட இந்த வருடம் ஏற்பட்டுள்ள அதிக வறட்சி காரணமாக நந்திக்கடல் பகுதி அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன், நந்திக்கடலை...

பிரதமர் மோடியின் அனுபவ குறிப்புடன் முதல்வர் விக்கியை சந்தித்தார் தமிழிசை

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முதல்வர் விக்னேஸ்வரனை சந்தித்ததுடன் பிரதமர் மோடியின் அனுபவ குறிப்பு ஒன்றினையும் வழங்கியுள்ளார். யாழ்பாணத்திற்கான விஜயத்தினை நேற்று (வியாழக்கிழமை) மேற்கொண்டிருந்த தமிழிசை, வடக்கு முதலமைச்சரின் இல்லத்தில் அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதனையடுத்து, ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த தமிழிசை இச்சந்திப்பு சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றதாகவும் பிரதமர்...

குளிரூட்டப்பட் அறையில் உள்ளவர்கள் வனாந்தர வெளியில் வாழ்ந்து வரும் மக்களின் நிலையை பார்க்க வேண்டும்: ஸ்ரீதரன்

கொழும்பில் குளிரூட்டப்பட் அறையில் இருந்து தீர்மானம் எடுக்கும் அமைச்சர் வடக்கில் வனாந்தர வெளியில் வாழ்ந்து வரும் மக்களின் நிலையை பார்க்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். வடக்கில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) சபை ஒத்திவைப்பு வேளையில் கலந்து கொண்டு கருத்து...

பொருத்து வீடு குறித்து குற்றம் சுமத்துபவர்கள் கட்சி வீட்டை சரி செய்ய வேண்டும்: சுவாமிநாதன்

வடக்கில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள பொருத்து வீடு குறித்து குற்றம் சுமத்துகின்றவர்கள் முதலில் கட்சி வீட்டை சரி செய்ய வேண்டும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். குறித்த திட்டம் தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) சபை ஒத்திவைப்பு வேளையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...

வடக்கு- கிழக்கு இணைப்பிற்கு வாய்ப்பில்லை: அமைச்சர் மனோ

புதிய அரசியலமைப்பில் சமஷ்டி, வடக்கு- கிழக்கு இணைப்பு ஆகியவற்றிற்கு வாய்ப்பே இல்லை என தேசிய கலந்துரையாடல்கள், சமூக நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பையும் காணாமல் போனோர் அலுவலகத்தையும் உடனடியாக கைவிடுமாறு மகாநாயக்க தேரர்கள் தெரிவித்திருந்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்வதனைத் தவிர வேறு மாற்று வழி கிடையாது!

மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியை ரத்து செய்வதனைத் தவிர வேறும் மாற்று வழிகள் கிடையாது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இதனைத் தெரிவித்துள்ளார். தனியார் மருத்துவ கல்லூரியை மூடுவதே இந்தப் பிரச்சினைக்கான ஒரே தீர்வு என அவர் குறிப்பிட்டுள்ளார். மாலம்பே தனியார்...

ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளது

ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் புதிய சட்டமொன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக ஜே.வி.பி கட்சியின் பாரர்ளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். செய்தி மூலங்களை அறிவிக்க வேண்டும் என்ற வகையில் சட்டமொன்று அரசாங்கம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் ஊடகங்களை ஒடுக்கும் நோக்கில் இவ்வாறு புதிய சட்டம் அறிமுகம்...

புத்துயிர் பெறும் மாவீரர் துயிலும் இல்லங்கள்

மட்டக்களப்பிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் பல அண்மைய காலமாக துப்பரவு செய்யப்பட்டு வருகின்ற நிலையில், படுவான்கரை மாவடிமுன்மாரியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லம் இன்றைய தினம் (வியாழக்கிழமை) துப்பரவு செய்யப்பட்டது. பற்றைக் காடாய் கிடந்த குறித்த மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்த மக்கள், உயிர்நீத்தவர்களின் நினைவாக பொதுச்சுடரேற்றி மௌன அஞ்சலியும் செலுத்தினர். இச் சிரமதானப்...

கணிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் பணிப்புறக்கணிப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுடனும் கலந்துரையாட வாய்ப்பு கிடைக்காதமையினால் அனைத்து தொழிற்சங்கங்களும் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் இணைந்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்வதற்கான தினம் தொடர்பில் தீர்மானிக்கவுள்ளதாக கணிய எண்ணெய் தொழிற்சங்க ஒன்றியம் கூறியுள்ளது. திருகோணமலை எண்ணெய் குதங்கள் உள்ளிட்ட 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பு கிடைக்காததால்...

உவர் நீரால் வடக்கு கிராமங்கள் அழிவடையும் அபாயம்

வடக்கின் பல கிராமங்களுக்குள் உவர் நீர் உட்புகுவதால், அக் கிராமங்கள் அழிவடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றைய (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கிளிநொச்சி பூநகரி பகுதியிலுள்ள பல கிராமங்களுக்குள் உவர் நீர் உட்புகுந்துள்ளதோடு, வன்னேரிக்குளம் மற்றும் ஆணைவிழுந்தான் ஆகிய...

விக்னேஸ்வரனின் கருத்திற்கு சஞ்சலமடைய மாட்டோம்: ராணுவ தளபதி

வடக்கிலுள்ள ராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டுமெனவும், ராணுவத்தினர் மீளப் பெறப்பட வேண்டுமெனவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறும் கருத்துக்களுக்கு ராணுவத்தினர் சஞ்சலமடையமாட்டார்கள் என புதிய ராணுவ தளபதி மகேஸ் சேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார். தமது கடமைகளை நேற்று (புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியல்வாதிகள் எவ்வாறான கருத்துக்களை குறிப்பிட்டாலும், வடக்கின்...

பணியாளர்களின் தங்க நகைகளை அடகு வைத்து மதுவரித் திணைக்களத்திற்கு உற்பத்தி வரி செலுத்தப்பட்டுள்ளது

கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அனுமதி வழங்காததால் பணியாளர்களின் தங்க நகைகளை அடகு வைத்து மதுவரித் திணைக்களத்திற்கு உற்பத்தி வரி செலுத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கோணாவில் போத்தல் கள் அடைப்பு நிலையத்தில், இந்த வருடம் 5 இலட்சம் போத்தல் கள் அடைக்கப்பட்டு 15 மில்லியனுக்குமேல் உற்பத்தி வரியாக மதுவரித் திணைக்களத்திற்கு...

மகாத்மாக்களின் மொழியைப் பேரினவாதிகள் புரிந்து கொள்ளாததாலேயே கிட்டுகள் வேறு மொழியில் பேசத் தொடங்கினார்கள் : பொ.ஐங்கரநேசன்

மகாத்மா காந்தி அகிம்சை மொழியில் பேசினார். அதனை இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்கள் புரிந்து கொண்டார்கள். அவரைப் பின்பற்றி, ஈழத்துக் காந்தி செல்வநாயகமும் சிங்கள ஆட்சியாளர்களுடன் அகிம்சை மொழியிலேயே பேசினார். ஆனால், மகாத்மாக்களின் மொழியைப் சிங்களப் பேரினவாதிகள் புரிந்து கொள்ளவில்லை. புரிந்த கொள்ள மறுத்தார்கள். இதனால்தான் ஆயுதப் போராட்டம் கருக் கொண்டது. கிட்டுகள் தோன்றி வேறுமொழியில் பேசத்...

தமிழ் மக்களுக்கும் அதிகாரம் அவசியம் தேவை

“இன்று தமிழ் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குவது காலத்தின் தேவையாக உள்ளது. அதற்காக அரசியலமைப்பில் திருத்தத்தை கொண்டு வரவேண்டியது காலத்தின் தேவையாகும்” என, அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், தனது ஆட்சியையும் அதிகாரத்தையும் தக்கவைப்பதற்காக கடந்த ஆட்சிக் காலங்களில் மனிதப் படுகொலைகள் இடம்பெற்றன. இந்தப்பாவம் அனைத்தும், அன்றைய ஆட்சியாளர்களையும் ஊடகவியலாளர்களையுமே சேரும்...

உயர் தரப் பரீட்சை ஆகஸ்ட் 08ம் திகதி முதல்

இம்முறை கபொத உயர்தரப் தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி முதல் செப்டம்பர் 02ம் திகதி வரை நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது. நாடு பூராகவும் 2230 நிலையங்களில் பரீட்சைகள் நடைபெற உள்ளதாக இன்று வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பரீட்சைக்காக 315227 பரீட்சார்த்திகள் தோற்ற உள்ளனர். இதேவேளை தரம் 05...

வவுனியாவில் பிடிக்கப்பட்ட அரியவகை உயிரினம் உயிரிழப்பு!

வவுனியா – ஶ்ரீராமபுரம் திருஞான சம்பந்தர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இருந்து மீட்கப்பட்ட நீர் நாய் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறித்த நீர் நாய் நேற்றைய தினம் பாடசாலை வளாகத்தில் இருந்து வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதி கிராம அலுவலர் மூலம் பாடசாலை வளாகத்தில் நீர் நாய் ஒன்று நிற்பதாக வழங்கப்பட்ட தகவலையடுத்து அதனை...

குப்பிளானில் விடுதலைப் புலிகளின் வெடிகுண்டுகள்!

விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக கருதப்படும் இரு வெடிகுண்டுகள், யாழ். குப்பிளான் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. குப்பிளான் வடக்குச் சமாதி கோவிலடிக்கு அருகாமையில், வீட்டுடன் இணைந்த தோட்டக் காணியொன்றில் இருந்து நேற்று (புதன்கிழமை) இவ் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன. இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பிரதேசம் கடந்த 2015ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டது. குறித்த காணியின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வருகின்றமையினால்,...
Loading posts...

All posts loaded

No more posts