புலிகளின் யோசனையை ஏற்றிருந்தால் ரணில் ஜனாதிபதியாகியிருப்பார்!

விடுதலைப்புலிகளின் இடைக்கால அரசு யோசனையை ஏற்றிருந்தால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2005 ஆம் ஆண்டே ஜனாதிபதியாகியிருப்பார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பிரதமருக்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடந்து உரையாற்றிய அவர், ‘1977 இல்...

அம்­மாச்சி உணவகத்திற்கு சிங்களப் பெயர் வைக்குமாறு அழுத்தம்!

வடக்கில் உள்ள அம்­மாச்சி உணவகங்களுக்கு சிங்களத்தில் பெயர் சூட்டுமாறு மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண விவசாய அமைச்சினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அம்மாச்சி உணவகம் என்ற பெயரில் பாரம்பரிய உணவகங்கள் திறக்கப்பட்டு, மிகப் பிரபலமாகியுள்ளன. இந்த நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரிலும் இதுபோன்ற உணவகங்களைத் திறப்பதற்கு...
Ad Widget

யாழில் தொடரும் கைதுகள்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்ப்பாண கிளையில் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் தமது பிள்ளைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். ஆவா குழு உறுப்பினர்கள் என போலியாக தமது பிள்ளைகளை பொலிஸார்...

மக்களின் நலனுக்காக ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்பட வேண்டும்: சம்பந்தன்

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் தொடர்ந்தும் இணைந்து செயற்படவேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார். ‘சிரேஷ்ட அரசியல்வாதியான ரணில் விக்கிரசிங்க நான்காவது தடவையாகவும்...

சீனாவின் மிதக்கும் மருத்துவமனை இலங்கை வருகிறது!

சீன கடற்படையின் மிக நவீனமான மருத்துவமனைக் கப்பலான, ஆர்க் பீ்ஸ் நல்லெண்ணப் பயணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) இலங்கை வரவுள்ளது. இந்தக் கப்பல் எதிர்வரும் 9ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் என்று சீன தூதரகம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 8ஆம் நாள், இந்த மிதக்கும் மருத்துவமனையில் இலங்கையர்களுக்கு இலவச மருத்துவ உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது....

பேதங்களற்ற வகையில் அரசியல் தீர்வு: பிரதமர்

எந்தவொரு நாட்டு பிரஜைக்கும் துளியளவேனும் பாகுபாடு காட்டாத வகையிலான அரசியல் தீர்வொன்றை இந்த நாடாளுமன்றத்துக்குள் அடைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) அரசியல் வாழ்வில் 40 வருடங்களை நிறைவு செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. இந்தப் பிரேரணைக்கு நன்றி தெரிவித்து...

பொலிஸ் சேவையில் பெண்கள் இணைய வேண்டும் : அனந்தி சசிதரன்

வடமாகாணத்தில் இடம்பெற்று வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த வடமாகாணத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் பொலிஸ் சேவையில் இணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண மகளிர் விவகார புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றம் கூட்டுறவுத்துறை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் இடம்பெற்ற துணியிலான பைகளைப் துணியிலான பைகளைத் தயாரிப்பதற்கான அறிமுக விழா விழாவில் கலந்துகொண்டு...

காரை மோதியது ரயில் : யாழ். இந்து மகளிர் கல்லூரி அருகில் விபத்து!

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள தொடருந்துக் கடவையில் நேற்று பிற்பகல் விபத்து நடந்துள்ளது. தொடருந்துக் கடவையைக் கடக்க முயன்ற காரை தொடருந்து மோதியதியுள்ளது. மருத்துவர் ஒருவரின் காரே விபத்துக்குள்ளாகியுள்ளது. கார் பலத்த சேதமடைந்துள்ள நிலையில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த புகையிரத கேற் விபத்தொன்றினால் பழுதடைந்து பூட்டமுடியாத நிலையில் இருந்தபோது இது குறித்து...

இரா சம்பந்தன் அவர்களுக்கு வடமாகாணசபை அங்கத்தவர் நியமனம் தொடர்பில் மாவை கடிதம்!

வடமாகாண சபையில் மேலதிக ஆசனத்திற்கு உறுப்பினர் நியமித்தமை தொடர்பில் மாவை சேனாதிராஜா அவர்கள் சம்பந்தன் அவர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதம்

அவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

அவுஸ்திரேலியாவிலிருந்து 15 இலங்கையர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்து புகலிடம் கோரிய பதினைந்து இலங்கையர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்ட நிலையில் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். நாடு கடத்தப்பட்ட அனைவரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவுஸ்திரேலியாவின் ஸ்கை ட்ரேடர்ஸ்...

வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இருவர் கைது

சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் இரு இளைஞசர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் குறித்த சந்தேக நபர்களுக்கு தொடர்புள்ளதாக சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை இரு இளைஞர்களையும் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இரு இளைஞசர்கள் கொக்குவில் மற்றும் நல்லூர் ஆகிய...

நல்லூர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸாரின் மனைவி மீண்டும் பொலிஸ் சேவையில்

நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மனைவியை மீண்டும் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. பொலிஸ் அதிகாரியின் மனைவியான கெ.ஜீ.பி குமுதுனி முன்னாள் கொலிஸ் உத்தியோகத்தர் என்பதுடன், இற்றைக்கு 05 ஆண்டுகளுக்கு முன்னர் பொலிஸ் சேவையிலிருந்து விலகியிருந்ததாக கூறப்பட்டுள்ளது. எவ்வாறாயினும்...

வடக்கு, கிழக்கு இணையாவிட்டால் தமிழர்களின் தனித்துவம் போய்விடும்: வடக்கு முதல்வர்

வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்படாவிட்டால, இன்னும் 20 வருடங்களில் தமிழர்களின் தனித்துவம் இல்லாமல் போய்விடுமென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 1949ஆம் ஆண்டை விட தற்போது அங்கு வாழும் சிங்கள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதென முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்....

ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் வழங்கப்படும்: ஜனாதிபதி

ஆசிரியர்கள் நல்ல மனநிலையுடன் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அரசாங்கத்தினால் வழங்கக்கூடிய அனைத்து வசதிகளையும் நிறைவுசெய்வதாக ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுராதபுரம் வலிசிங்க சரத்சந்ர மகா வித்தியாலயத்தில் புதிய கட்டிட தொகுதியை இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் திறந்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கி அவர்களது அறிவை மேம்படுத்துவதற்காக அதிபர்,...

வடக்கு முதல்வரின் கருத்து ஆச்சரியத்தை மட்டுமல்ல, அதிர்ச்சியையும் அளிக்கின்றது : ஸ்ரீகாந்தா

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் எமக்கு நம்பிக்கை உண்டு. உடனடியாகத் தேவைப்படுவது எல்லாம், பொதுமக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் ஒத்துழைப்பையும் பொலீசார் பெற்றுக்கொள்வதே ஆகும். என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோவின்) செயலாளர் ந. ஸ்ரீகாந்தா குறிப்பிட்டு உள்ளார். ஊடகங்களுக்கு இன்றைய தினம் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

இலங்கையில் சந்திரக் கிரகணம்

எதிர்வரும் 07ஆம் திகதி திங்கட்கிழமை பகுதியளவு சந்திரக் கிரகணம் ஏற்படவுள்ளது. இதனை, இலங்கை நேரப்படி திங்கட்கிழமை இரவு 10:53 மணி முதல் செவ்வாய்க்கிழமை மு.ப. 12:48 மணி வரையான காலப்பகுதியில் கொழும்பில் பார்க்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் வறட்சியால் 30 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியினால் 30,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவின் வறட்சி தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 136 கிராம அலுவலர் பிரிவுகளிலும் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், வறட்சியால் பாதிக்கப்பட்ட 10,000 குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்....

தனியார் சொகுசு பேருந்து விபத்து சாரதி உட்பட ஆறுபேர் வைத்தியசாலையில்

இன்று அதிகாலை 3.20 மணிக்கு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிசென்ற தனியார் சொகுசு பேருந்து கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் அறையுக்குள் மின்சார கம்பங்களையும் அருகில் இருந்த கடைத்தொகுதியையும் உடைத்துக்கொண்டு விபத்துக்குள்ளானது. சாரதி உட்ப்பட ஆறு பேர் காயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளமையால் இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது என...

பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக இன்று மூடப்படுகின்றன. மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் அடுத்த மாதம் 6ஆம் திகதி திறக்கப்பட இருக்கின்றன. இதேவேளை நாடு பூராகவும் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் 18ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக மூடப்பட்டு இம்மாதம் 28ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன.

அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் தொடர்புகொள்ள வலியுறுத்தல்

ஜீசிஈ உயர்தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜீசிஈ உயர்தர பரீட்சை எதிர்வரும் எட்டாம் திகதி தொடக்கம் நாடெங்கிலும் இரண்டாயிரத்து 230 நிலையங்களில் பரீட்சை இடம்பெறும். இது வரை காலமும் பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் உடனடியாக பரீட்சை திணைக்களத்தை தொடர்பு கொள்ள வேண்டும். தொலைதூரத்தில் உள்ள பரீட்சார்த்திகள்...
Loading posts...

All posts loaded

No more posts