தனியார் பேரூந்தின் மீது பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல்!

வவுனியாவில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற தனியார் பேரூந்தின் மீது பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதல் மேற்கொண்டதில் பேரூந்தில் பயணித்த சிலர் காயமடைந்துள்ளதாக பேரூந்தின் உரிமையாளர் தெரிவித்தார்.

வவுனியாவில் இருந்து மாலை 5.30 மணியளவில் செட்டிகுளம் நோக்கி பயணித்த பேரூந்தில் இரு பல்கலைக்கழக மாணவர்கள் ஏறியுள்ளதுடன், சிறிது தூர பயணத்தின் பின்னர் அவர்கள் இருவரும் பேரூந்தின் நடத்துனருடன் சச்சரவில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து பேரூந்து பம்பைமடு வவுனியா வளாகத்திற்கு முன்பாக சென்றபோது வழிமறித்த சுமார் 40 பல்கலைக்கழக மாணவர்கள் பேரூந்தை தாக்கியதில் பேரூந்தில் பயணித்த சிலர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் சாதுரியமாக செயற்பட்ட பேரூந்தின் சாரதி பேரூந்தை பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன், பொலிஸிலும் முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts