Ad Widget

சென். பீற்றர் தேவாலய படுகொலை நினைவேந்தல்

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயப் படுகொலையின் 22ஆவது ஆண்டு நேற்று நினைவு கூரப்பட்டது. உயிரிழந்தவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் சுடரேற்றி உணர்வு பூர்மாக அஞ்சலி செலுத்தினர்.

1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் அரச போர் வானூர்திகள் சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீது தாக்குதல் நடத்தின. அந்தச் சமயம் முன்னேறிப் பாய்ச்சல் எனும் அரச படைகளின் இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தேவாலயத்திலும், நவாலி சிறி கதிர்காம முருகன் ஆலய சூழலிலும் தங்கியிருந்தனர்.

அரச போர் வானூர்திகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 147 அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறடிக்கட்டுக் கொல்லப்பட்டனர். 360க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts