Ad Widget

இலங்கையில் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் முச்சக்கர வண்டி ஓட்டத்தடை

இளைஞர்கள் மத்தியில் தொழில் திறனை ஊக்குவிக்கும் வகையில் புதிய சட்டம் ஏற்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் 35 வயதிற்கு குறைவான நபர்களுக்கு முச்சக்கரவண்டி அனுமதி பத்திரம் வழங்குவது தடை செய்யும் வகையில் குறித்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

புதிய சட்டத்திற்கான வரபுகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் விரைவில் நாடாளுமன்றத்தில் குறித்த சட்டமூலம் கொண்டுவரப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கொதாகொட தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், இளைஞர்கள் அதிகமாக முச்சக்கரவண்டி ஓட்டும் தொழிலுக்கு வருவதனை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிசிர கொதாகொட குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் அதிகமான பயணிகள் தங்கள் போக்குவரத்திற்கு அதிகமாக முச்சக்கரவண்டிகளையே பயன்படுத்திவருகின்றனர். இலங்கையில் 8 இலட்சத்திற்கும் அதிகமாக முச்சக்கரவண்டிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts