Ad Widget

சக பொலிஸ் அதிகாரியின் பெறுமதியான கடிகாரத்தை திருடிய பொலிஸ் அதிகாரி

ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சக பொலிஸ் அதிகாரியின் 1 இலட்சத்து 50 ஆயிரம் பெறுமதியான கைக்கடிகாரத்தை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் பரிசோதகர், வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணைக்காக யாழ்.மேல் நீதிமன்றில் சாட்சியமளிக்க நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சிறுகுற்றப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தரின் கடிகாரத்தை இவர் திருடிக்கொண்டு வந்துள்ளார்.

அப்போது, பொலிஸ் அதிகாரி தொலைபேசியில் இவரிடம் தனது கடிகாரம் பற்றி கேட்டபோது, தான் காணவில்லை என்றும் அதைப்பற்றி தனக்கு தெரியாது என்றும் பதிலளித்துள்ளார்.

இருந்தும் ஏற்பட்ட சந்தேகத்தல், குறித்த பொலிஸ் பரிசோதகர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தனது பையை வைத்துவிட்டு யாழ்ப்பாணம் நீதிமன்றிற்கு சென்ற பின்னர், பொலிஸ் அதிகாரி பையை பரிசோதனை செய்து பார்த்த போது அந்த கடிகாரம் இருந்துள்ளது.

பின்னர் குறித்த பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றில் இருந்து மாலை பொலிஸ் நிலையத்திற்கு வந்த போது, பொலிஸ் தலைமைப் பொறுப்பதிகாரிக்கு முன்னிலையில் குறித்த கைக்கடிகாரம் வெளிநாட்டில் உள்ள தனது உறவினர்கள் அன்பளிக்காக வழங்கியதாகவும், அந்த கடிகாரத்தை கண்டீர்களா என கேட்டபோது, தான் எடுக்கவில்லை என்றும் தனது பையை பரிசோதனை செய்து பார்க்குமாறும், அவ்வாறு இருந்தால் தனக்கெதிராக நடவடிக்கை எடுக்குமாறும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அவரின் உடுப்பு பையினுள் கடிகாரம் இருந்துள்ளதனால் திருடிய பொலிஸ் அதிகாரிக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Posts