Ad Widget

குப்பிளானில் விடுதலைப் புலிகளின் வெடிகுண்டுகள்!

விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாக கருதப்படும் இரு வெடிகுண்டுகள், யாழ். குப்பிளான் பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

குப்பிளான் வடக்குச் சமாதி கோவிலடிக்கு அருகாமையில், வீட்டுடன் இணைந்த தோட்டக் காணியொன்றில் இருந்து நேற்று (புதன்கிழமை) இவ் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பிரதேசம் கடந்த 2015ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டது. குறித்த காணியின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வருகின்றமையினால், குப்பிளான் வடக்கைச் சேர்ந்த ஒருவர் அதனை பராமரித்து வருகின்றார்.

இந்நிலையில், விவசாயச் செய்கை மேற்கொள்வதற்காக காணியை துப்பரவு செய்தபோதே குறித்த இரு வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வெடிகுண்டின் மீது உழவு இயந்திரம் ஏறிய போதிலும் தெய்வாதீனமாக அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இதனைத் தொடர்ந்து காணி பராமரிப்பாளரால் சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு விரைந்த பொலிஸாரும் அதிரடிப்படையினரும் குண்டுகளை மீட்டுள்ளதோடு, அதனை செயலிழக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts