Ad Widget

உவர் நீரால் வடக்கு கிராமங்கள் அழிவடையும் அபாயம்

வடக்கின் பல கிராமங்களுக்குள் உவர் நீர் உட்புகுவதால், அக் கிராமங்கள் அழிவடையும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நேற்றைய (புதன்கிழமை) நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக கிளிநொச்சி பூநகரி பகுதியிலுள்ள பல கிராமங்களுக்குள் உவர் நீர் உட்புகுந்துள்ளதோடு, வன்னேரிக்குளம் மற்றும் ஆணைவிழுந்தான் ஆகிய கிராமங்கள் முழுமையாக உவர் நீர் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக டக்ளஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, யாழ். தீவக பகுதிகளிலும் பல கிராமங்கள் உவர் நீர் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள டக்ளஸ் தேவானந்தா, உவர் நீரை தடுப்பதற்கு தடுப்பணையை ஏற்படுத்தாவிட்டால் பல கிராமங்கள் அழைவடைவதை தடுக்க முடியாதென குறிப்பிட்டுள்ளார்.

Related Posts