மன்னாரில் மனித எச்சங்கள்: நீதவான் முன்னிலையில் அகழ்வு!

மன்னாரில் மனித மனித எச்சங்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (புதன்கிழமை) பிற்பகல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன. தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள கைத்தொழில் பேட்டைக்கு அருகிலுள்ள கழிவு நீர் செல்லும் மதகிலிருந்து குறித்த மண்டையோடு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...

வித்தியாவின் உயிரிழப்புக்கு மூன்று காரணங்கள்: சட்ட வைத்திய அதிகாரி

வித்தியாவின் உயிரிழப்பு மூன்று வழிகளில் நிகழ்ந்திருக்கலாம் என யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி நீதாய தீர்ப்பாயத்தில் ஆஜராகி சாட்சியமளித்துள்ளார். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கூட்டுவன்புணர்வு படுகொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளை கொண்ட நீதாய தீர்ப்பாயத்தில் கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் நேற்றய தினம் (05.07.2017) ஆம் திகதி வரை...
Ad Widget

பொய்க்கடிதங்களை வழங்கிய அதிபர், வலயப்பணிப்பாளர்கள் மீது விசாரணை!

வடக்கு மாகா­ணத்­தில் தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கக் கட­மை­யாற்­றா­த­வர்­களை, தொண்­டர் ஆசி­ரி­யர்­க­ளா­கக் கட­மை­யாற்­று­கின்­ற­னர் என்று போலி­யான உறு­திப்­பத்­தி­ரங்­களை வழங்­கிய பாட­சா­லை­க­ளின் அதி­பர்­க­ளும், அதனை உறு­திப்­ப­டுத்­தி­ய­வ­ல­யக் கல்­விப் பணிப்­பா­ளர்­க­ளும் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­னர். விரை­வில் இந்த விசா­ரணை நடத்­தப்­ப­டும் என்று வடக்கு மாகாண க் கல்வி அமைச்­சின் செய­லா­ளர் இ.இர­வீந்­தி­ரன் தெரி­வித்­தார். தகு­தி­யற்ற தொண்­டர்­க­ளுக்கு உறு­திப்­ப­டுத்­தல் கடி­தம் வழங்­கிய அதி­பர்­க­ளுக்­கும் அதனை...

சம்பந்தனும் சுமந்திரனும் பகிரங்க விவாத்திற்கு தயாரா ? சவால் விடும் கஜேந்திரகுமார்

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைகளான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய இருவரையும் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்துள்ளார் . யாழப்பாணத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்ட அவர், நாம் தொடர்ந்து மக்கள் சந்திப்புக்களினை நடத்திவருகின்றோம்.மக்களது கேள்விகளிற்கு பதிலளிக்கின்றோம். பலரும் மாகாணசபை விவகாரம், அரசியல்...

மணித்தியாலயத்துக்கு 40 கிலோ மீற்றர் வேகக் கட்டுபாடு

இனி வரும் காலங்களில் முச்சக்கரவண்டி தொடர்பில் அதிகபட்ச வேகம், மணித்தியாலயத்துக்கு 40 கிலோமீற்றராக இருக்க வேண்டும் என, வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார். இதன் வர்த்தமானி அறிவித்தலை, அடுத்த வாரம் வெளியிட இருப்பதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

போர்க்குற்றங்களில் இராணுவம் ஈடுபடவில்லை : புதிய இ​ராணுவ தளபதி

இலங்கை இராணுவம், எந்த​வொரு விசாரணைக்கும் தயாராக உள்ளது. அது, போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை” என, புதிய இ​ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க இன்று (5) தெரிவித்தார். இலங்கையின் 22ஆவது இராணுவத் தளபதியாக, இராணுவத் தலைமையகத்தில் பொறுப்பேற்ற போதே, அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கை இராணுவத்துக்கு தண்டனைச் சட்டம், இராணுவச் சட்டம்...

பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பான உடைகளை அணியலாம்

நாட்டில் டெங்கு நோய் மிகவும் தீவிரமாக பரவி வரும் நிலையில், பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பான உடைகளை அணிந்து பாடசாலைக்குச் செல்லலாம் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கல்வியமைச்சு இன்று (புதன்கிழமை) விசேட சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டு இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளது. டெங்கு நுளம்புகள் தம்மை தாக்காதவாறு உடம்பை முழுமையாக மறைக்கும் அல்லது பாதுகாப்பான ஆடைகளை அணியுமாறு...

யாழில் இளைஞன் ஒருவரை காணவில்லை!

முழங்காவில் பகுதியில் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கிறேசியன் பிரேமிளன் (வயது – 18) என்ற இளைஞனை, கடந்த ஒரு வார காலமாக காணவில்லையென யாழ். பொலிஸ் நிலையத்தில் அவரது தாயார் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நாவாந்துறையில் மேசன் வேலைக்காக சென்ற குறித்த இளைஞன், மாலை...

புங்குடுதீவு மாணவி கொலை: சந்தேகநபர்களை காக்க கடும் பிரயத்தனம்!! பொலிஸாருக்கு நீதிபதிகள் கடும் எச்சரிக்கை!!

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு, நீதாய விளக்கம் முன்பான (ட்ரயல் அட் பார்) ஐந்தாம் நாள் சாட்சிப் பதிவுகள், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04), யாழ். நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில், மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது....

கிளிநொச்சில் இரண்டு கனரக வாகனங்கள் விபத்து; இருவர் வைத்தியசாலையில்

கிளிநொச்சி கண்டாவளை வெளிக்கண்டல் பாலத்திற்கு அருகில் இரண்டு கனரக வாகனங்கள் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த இருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு பதினொன்று முப்பது மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. பரந்தன் பகுதியில் இருந்து புதுக்குடியிருப்பு பக்கமாக சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனமும்,...

பிரபாகரனின் பெரியப்பாவாக மாற வடக்கு மாகாண முதலமைச்சர் முயல்கிறார்!

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனி ஈழம் ஒன்றை அமைக்கும் கனவில் இருக்கின்றார் என்பதுடன் தமிழ் மக்களிடையே பிரபலமாகி தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெரியப்பாவாக முயற்சி செய்கின்றார் எனவும் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கொழும்பின் பார்வையானது தீர்வுக்கு உதவாது என செவ்வியொன்றின்போது தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்...

மாகாண சபை விவகாரத்தில் சம்மந்தரின் அரசியல் முதிா்ச்சி வெளிப்படுத்தப்பட்டது: எஸ். தவராசா

வடக்கு மாகாண சபை விவகாரத்தில் எதிா்க் கட்சித் தலைவா் இரா. சம்மந்தரின் அரசியல் முதிா்ச்சி வெளிப்பட்டிருந்ததாகவும் அவருக்குப் பின்னர் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கக் கூடிய ஆளுமைமிக்க தலைவா் யாரும் தற்போது நம்மத்தியில் இல்லை எனவும் வடக்கு மாகாண சபையின் எதிா்க் கட்சித் தலைவா் எஸ். தவராசா தெரிவித்துள்ளாா். அண்மைக் காலமாக வடக்கு மாகாண சபையில்...

வடக்கில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்: அமைச்சர் விஜயகலா

வடக்கில் முழுமையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார பதில் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...

புனர்வாழ்வு பெற்ற பின்னரே சம்பந்தன் வெற்றிவாய்ப்பை பெற்றார்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

விடுதலைப் புலிகளிடம் புனர்வாழ்வு பெற்ற பின்னரே எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வெற்றிவாய்ப்பை பெற்றதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்படி தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில், தமிழ்தேசிய மக்கள் முன்னணி...

வட.மாகாண சபை விவகாரம் குறித்து கூட்டமைப்பு இன்று கலந்துரையாடல்

வட. மாகாண சபையின் எதிர்கால நிலைமைகள் குறித்து ஆராயும் வகையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவசரமாக இந்த கூட்டத்தை ஒழுங்கமைத்துள்ளதாக கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. குறித்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்தும் வட.மாகாண சபை குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போராட்டத்தை பிற்போடத் தீர்மானம்

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை ஆரம்பிக்க இருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒருவார காலம் ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவில் உயிரிழக்கும் குதிரைகள்! பிரதேச சபைமீது மக்கள் விசனம்!!

யாழ்.நெடுந்தீவு பகுதியில் வறட்சி காரணமாகவும் உரிய பராமரிப்பு இன்றியும் குதிரைகள் உயிரிழந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நீடிக்கும் வறட்சி காரணமாக, குடிப்பதற்கு நீர் இன்றி இதுவரை சுமார் 10 குதிரைகள் உயிரிழந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குதிரைகளின் உயிரிழப்பு தொடர்பில் நெடுந்தீவு பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், எவ்வித...

அதிரடியாக முக்கிய புதிய நியமனங்கள்

பாதுகாப்புச் செயலர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் புதிய இராணுவத் தளபதியென அதிரடியாக புதிய நியமனங்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலாளராக ஒஸ்டின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை, கபில வைத்தியாரத்ன பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, லெப்டினென் ஜெனரல் மகேஷ் செனாநாயக்க புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். லெப்டினன் ஜெனரல் மகேஷ் செனநாயக்க 22 ஆவது இராணுவத்...

100 வயதைத் தாண்டியோர் பற்றிய தகவலைத் தரவும்!

இம்முறை, முதியோர் தினத்தை சிறந்த முறையில் கொண்டாடுவதற்கு, தேசிய முதியோர் செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, நூறு வயதைத் தாண்டியவர்களையும்,15 பிள்ளைகளைக் கொண்ட 75 வயதைத் தாண்டிய பெற்றோர்களையும் கௌரவிப்பதற்காக, அவர்கள் தொடர்பில் தகவல்களைத் தங்களுக்கு வழங்குமாறு அச்செயலகம் அறிவித்துள்ளது. இந்தத் தகவல்களை, பிரதேச செயலகத்தில், இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழக்குமாறு, அச்செயலகம்,...

வித்தியா கொலை விவகாரம்: மரபணு அறிக்கை தாக்கல்

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பான மரபணு அறிக்கை, யாழ். மேல் நீதிமன்ற சிறப்பு அமர்வில் பாரப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் முன்னிலையில் நடைபெற்று வரும் குறித்த சாட்சியப் பதிவின் நான்காவது நாளான நேற்றைய தினம், மொறட்டுவ பல்கலைக்கழக கணினி விஞ்ஞான பீடத்தால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மரபணு அறிக்கை உட்பட வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் யாவும்...
Loading posts...

All posts loaded

No more posts