மாணவர்களுக்கு முடிவெட்டுவதில் கட்டுப்பாடுகள் அவசியம்!!!

பாடசாலைகளில் ஒழுங்கு, கட்டுப்பாடுகளை மேற்கொள்வது என்பது மாணவர்கள் அணிகின்ற சீருடைகளின் தன்மை, அவர்களது தலை முடிவெட்டு என்பவற்றிலேயே தங்கியுள்ளன. அதனால் மாணவர்கள் அநாகரிகமான தோற்றத்தில் பாடசாலைக்குச் சமூகம் அளிப்பது தடுக்கப்பட வேண்டும். இவ்வாறான பண்பாட்டு விழுமியங்களை வெளிப்படுத்தக்கூடிய தோற்றத் தில் மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருவதில் பெற்றோர்கள் அக்கறை காட்டுவதுடன் அழகக அலங்கரிப்பாளர்களும் கவனம் செலுத்த வேண்டும்”...

முல்லைத்தீவில் சிறுவனை நரபலி கொடுத்து புதையல் தோண்டப்பட்டதா?

முல்லைத்தீவு மல்லாவி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தென்னியன்குளத்தை அண்மித்த காட்டுப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளம் இடப்பட்ட இடத்தில் புதையல் தோண்டியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலிருந்து சிறுவனொருவரின் பாடசாலை பாதணி ஜோடியொன்றும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், புதையல் தோண்டுவதற்காக சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என கிராம மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறித்த காட்டுப் பகுதியில் 8 அடி ஆழமான குழியொன்று...
Ad Widget

பொலிஸாரின் விடுமுறைகள் காலவரையின்றி இரத்து

வன்முறையில் ஈடுபடும் குழுக்களை கைதுசெய்யும் வரை பொலிஸாருக்கு காலவறையறையற்ற விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்ணான்டோ அறிவித்துள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான விடுமுறையே இவ்வாறு காலவறையற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் ஆவா குழு...

ஊடகவியலாளர் நிலக்சனின் 11 ஆம் ஆண்டு நினைவு தினம்!

சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவனும் ஊடகவியலாளருமான சகாதேவன் நிலக்சனின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த அஞ்சலி நிகழ்வானது இந்துக் கல்லூரியில் நேற்று(புதன்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. மேலும், இதன் போது யாழ். நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் உள்ள ஊடகவியலாளர் நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தபட்டது. கடந்த...

குடும்ப பெண் மீது துஸ்பிரயோக முயற்சி: இருவர் கைது

வவுனியா பறன்நட்டகல் பகுதியில் குடும்ப பெண் மீது பாலியல் துஸ்பிரயோக முயற்சியில் ஈடுபட்ட இருவரை வவுனியா ஒமந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பறன்நட்டகல்லில் நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) இரவு 28 வயதுடைய குடும்ப பெண் குளித்துக்கொண்டு இருக்கும் போது, குறித்த பெண்ணை இரண்டு இளைஞர்கள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு...

பிரபாகரனின் உருவப்படத்துடன் புதுவருட வாழ்த்து தெரிவித்த இருவருக்கு விளக்கமறியல்!!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படம் மற்றும் விடுதலைப் புலிகளின் இலட்சனையை பயன்படுத்திய இருவரை 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் மற்றும் விடுதலைப்புலிகளின் இலச்சினை ஊடாக முகநூலில் புதுவருட வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில் இரத்தினபுரியை சேர்ந்த தினேஸ்குமார் மற்றும் விதுஸன் என்ற இருவரும் பயங்கரவாத...

யாழ். வன்முறைகளை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் படையணி!

யாழில் அதிகரித்துவரும் வன்முறைகளை கட்டுப்படுத்தும் வகையில் விசேட மோட்டார் சைக்கிள் படையணி களமிறங்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார். யாழ். பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதனை நிகழ்வு இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவித்த அவர், யாழ். குடாநாட்டில் இனந்தெரியாதோரால்...

வட்டுக்கோட்டையை பதறவைத்த குள்ள மனிதர்கள்!- பீதியில் மக்கள்

வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டகாசத்திற்கு மத்தியில், தற்போது அரங்கேறிவரும் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தல்களால் யாழ். மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர். யாழ். அராலி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திய குள்ள மனிதர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு வட்டுக்கோட்டையிலும் பொதுமக்களை அச்சுறுத்தி பெரும் அட்டகாசம் புரிந்துள்ளனர். இதனால் வட்டுக்கோட்டை பிரதேசத்தில் நேற்று கடும் பதற்றம் நிலவியதுடன், மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளதாக...

யாழில் தொடரும் வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டாசகம்!

யாழில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வாள்வெட்டுக் கும்பல்களின் அட்டாசகம் நேற்று இரவும் அரங்கேறியுள்ளது. தென்மராட்சி- சரசாலை தெற்குப் பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர் கொண்ட குழுவினர் வாள்களுடன் குறித்த பகுதியின் வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி, வீட்டையும், அங்கிருந்த உடமைகளையும் சேதப்படுத்தியுள்ளனர். கனடா...

யாழ். கோட்டை இராணுவத்திற்கு சொந்தமானது!- இராணுவ தளபதி

யாழ். ஒல்லாந்தர் கோட்டை இராணுவத்திற்கு சொந்தமானது. கோட்டைக்குள் இருந்து இராணுவத்தை எவராலும் வெளியேற்ற முடியாது என இராணுவ கட்டளை தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்திற்கு இன்று (புதன்கிழமை) விஜயம் செய்த இராணுவத் தளபதி, யாழ் கோட்டையை நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது, கோட்டைப் பகுதியில்...

சாவகச்சேரியில் பற்றைக்குள் இருந்து இரு துவிச்சக்கர வண்டிகள் மீட்பு!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இரு துவிச்சக்கர வணடிகள் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளன. இந்த துவிச்சக்கர வண்டிகள் நேற்று நள்ளிரவு மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் தலா ஒவ்வொரு துவிச்சக்கர வண்டிகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. துவிச்சக்கர வண்டிகளில் வந்தவர்கள் காதலர்களா என்பதோடு அவர்களுக்கு ஏதேனும் விபரீதங்கள் இடம்பெற்றிருக்குமா என்பது...

மோட்டார் சைக்கிள் சைலன்சரை அதிக ஒலியுடன் மாற்றியமைத்தவருக்கு ரூபா 50 ஆயிரம் தண்டம்!!

மோட்டார் சைக்கிள் சைலன்சரை அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றியமைத்து வீதியில் செலுத்திச் சென்ற நபருக்கு 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் மேலதிக நீதிவான் வி.இராமகமலன் நேற்று உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் நகரில் ஒரு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசமின்றி பயணித்த இருவரை பின் தொடர்ந்த பொலிஸார், அவர்களது வீடுவரை சென்று வீதி விதிமீறல்...

வவுனியாவில் அடுத்தடுத்து விசம் வைக்­கப்­பட்­ட 6 பசுக்­கள் சாவு!! சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் சிங்­கள பெண் கைது

வவு­னியா தட்­டாங்­கு­ளம் பகு­தி­யில் விசம் கலந்த நீரை பரு­கி­ய­தால் நான்கு பசு­மா­டு­கள் நேற்­று­முன்­தி­னம் இறந்­தி­ருந்த நிலை­யில் நேற்­றும் இரு மாடு­கள் இறந்­துள்­ளன என்று தெரி­விக்­கப்­பட்­டது. இந்த மாடு­கள் நேற்று வீடு திரும்­பாத நிலை­யில் உரி­மை­யா­ளர்­கள் தேடி­யுள்­ள­னர். அவை காட்­டுப் பகு­தி­யில் இறந்த நிலை­யில் மீட்­கப்­பட்­டன என்று தெரி­விக்­கப்­பட்­டது. வாழ்­வாதா­ரத்­துக்கு வழங்­கப்­பட்ட பசு­மா­டு­கள் விசம் வைக்­கப்­பட்­டுக் கொல்­லப்­பட்­டுள்­ளன...

25 மருந்து வகைகளின் விலைகள் குறைப்பு: ராஜித சேனாரத்ன

உடன் அமுலுக்கு வரும் வகையில் 25 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்தன தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் பிரதித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் ராஜித்த சேனாரத்தனவை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(செவ்வாய்கிழமை) கொழும்பு தாமரை தடாக அரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் ராஜித்த சேனாரத்தன...

விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் கயிறு இறுகி உயிரிழப்பு!!

கிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பகுதியில் 13 வயது சிறுவன் கயிறு இறுகி உயிரிழந்த சம்பவம் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் பாடசாலை முடித்து வீடு திரும்பி இரு தங்கைகளுடன் விளையாடிக்கொண்டிருக்கையில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். வழமையாக குறித்த பகுதியில் விளையாடுவதாகவும், அவ்வாறே இன்றும் விளையாடிக்கொண்டிருந்த போது அங்குள்ள மரம் ஒன்றில் விளையாட்டுவதற்காக கட்டப்பட்டிருந்த...

அனுமதி இல்லாத வைத்திய நிலையங்களிற்கு தடை: வடமாகாண சுகாதார அமைச்சர் நடவடிக்கை!

வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ஞா.குணசீலன் நேற்று(செவ்வாய்கிழமை) வவுனியாவிற்கு திடீர் விஐயம் ஒன்றை மேற்கொண்டதுடன் தனியார் மருந்தகங்கள் மற்றும் மருத்துவ நிலையங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்திருந்தார். இதற்கமைய உரிய அனுமதி இன்றி கதிர்வீச்சு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த இரு வைத்தியசாலைகளின் மீது நடவடிக்கை எடுத்திருந்தார். அத்துடன், ஆயுர்வேத மருத்துவம் பயின்று விட்டு ஆங்கில...

ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கைக்கான ஆதரவு தொடரும்: அமெரிக்கா உறுதி

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயாதீனமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை தொடர்ந்தும் ஆதரிக்க போவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. சிறுபான்மை தமிழ் சமூகத்தினருக்கான இந்த உறுதியை இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் றொபர்ட் ஹில்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார். மேலும்,...

யாழ் வன்முறைச் சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை: கட்டளைத் தளபதி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என இராணுவம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த வன்முறைச் சம்பவங்களுக்கும், இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக பலரும் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே யாழ் மாவட்ட இராணுவ...

கிராம அலுவலர்கள் பணிப்புறக்கணிப்பு!!

கிராம அலுவலர் அலுவலகத்தை தாக்கியதுடன் அவரையும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதை கண்டித்தும், தமது பாதுகாப்பினை உறுதிப் படுத்துமாறு கோரியும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர்கள் தமது அலுவலகங்களுக்குச் செல்லாது இன்று பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டனர். தமது பாதுகாப்பானது உறுதிப்படுத்தப்படும் வரையில் பிரதேச செயலகத்தில் இருந்தே கடமைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நல்லூர் பிரதேச...

வடமராட்சியில் மீனவ படகு தீக்கிரை: பெரும்பான்மை இனத்தவரை எதிர்த்ததன் எதிரொலியா?

வடமராட்சி கிழக்கு தாளையடி பிரதேசத்தில் மீனவ படகொன்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரமும் இனந்தெரியாதோரால் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது. தாளையடி பகுதியில் கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகொன்றே இவ்வாறு நேற்று (திங்கட்கிழமை) தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி கடலட்டை பிடித்து வருகின்ற நிலையில் அதற்கு உள்ளூர் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தென்னிலங்கை...
Loading posts...

All posts loaded

No more posts