உடன் அமுலுக்கு வரும் வகையில் 25 மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்தன தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் பிரதித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அமைச்சர் ராஜித்த சேனாரத்தனவை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(செவ்வாய்கிழமை) கொழும்பு தாமரை தடாக அரங்கில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் ராஜித்த சேனாரத்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
புற்று நோய்க்கான 10 வகையான மருந்துகள் மற்றும் 15 வகையான விலை உயர்ந்த மருந்துகளுக்கான விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஆண்டிபயடிக், நீரிழிவுக்கான மருந்து வகை மற்றும் அதற்கான உபகரணங்கள், ஆஸ்துமா, வலி நிவாரணி உள்ளிட்ட சில விலை உயர்ந்த மருந்துகளுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.