சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மாணவனும் ஊடகவியலாளருமான சகாதேவன் நிலக்சனின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த அஞ்சலி நிகழ்வானது இந்துக் கல்லூரியில் நேற்று(புதன்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது.
மேலும், இதன் போது யாழ். நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் உள்ள ஊடகவியலாளர் நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தபட்டது.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி கொக்குவில் பகுதியில் உள்ள அவரது அவரது இல்லத்தில் வைத்து இனம்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடக வள நிலையத்தின் மாணவரான சகாதேவன் நிலக்சன், யாழ். மாணவர் பேரவையின் முன்னாள் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.