குற்றச்செயல்களின் பின்னணியில் வடக்கு முதல்வர் என்கிறது மஹிந்த அணி!

இலங்கையில் இடம்பெறும் அனைத்து குற்றச்செயல்களின் பின்னணியிலும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்படுகிறாரா என சந்தேகிப்பதாக ஒன்றிணைந்த எதிரணி குறிப்பிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிரணியினர் கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) நடத்திய, நல்லாட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் பின்னர் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய...

இனப்பிரச்சனைக்கு தீர்வு காண சந்திரிக்கா ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மாவை

இனப்பிரச்சனைக்கு தீர்வினை காணப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணத்திற்குமான அலுவலகம் வடக்கில் முன்னெடுக்கும் செயற்திட்டங்கள் மற்றும் புதிய கடன் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று(வியாழக்கிழமை) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது....
Ad Widget

மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்க மணிவண்ணனுக்கு இடைக்காலத் தடை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ் மாநகர சபையின் உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை மாநகர சபை அமர்வுகளில் பங்கேற்பதற்கும், வாக்களிப்பதற்கும் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(வெள்ளிக்கிழமை) இடைக்காலத் தடை விதித்துள்ளது. யாழ் மாநகர சபைக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கலின் போது மாநகர சபை எல்லையில் வதிவிடம் கொண்டிருந்ததாக எதிர் மனுதாரரான யாழ்...

வவுனியாவில் மாணவிகள் கடத்தல்: தாய் முறைப்பாடு

வவுனியா பகுதியில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவிகள் இருவர் கடத்தப்பட்டதாக தாய் ஒருவர், வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாட்டில் அத்தாய் குறிப்பிட்டுள்ளதாவது, “நேற்று (வியாழக்கிழமை) காலை தனது மகளும், பெறாமகளும் நகர்ப்பகுதியிலுள்ள பாடசாலைக்கு சென்று மாலை 1.30 மணியளவில் பாடசாலை முடிந்ததும் நண்பியின் வீட்டிற்கு செல்ல முற்பட்டுள்ளனர். இதன்போது பெரியார்குளம்...

யாழ். தீவைப்பு சம்பவம்: குள்ள மனிதர்கள் மீது சந்தேகம்!

யாழ்ப்பாணம்- அராலி மேற்குப் பகுதியிலுள்ள வீடொன்றின் வேலிக்கு தீ மூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் இதனை குள்ள மனிதர்களே மேற்கொண்டிருப்பார்களென அப்பிரதேச மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) நள்ளிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்கே தீ மூட்டப்பட்டதுடன் அவரது தம்பியின் வீட்டு யன்னல்களும் தட்டப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும்...

யாழில் வாள்வெட்டு தாக்குதல்: இருவர் படுகாயம்

மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மிருசுவில் பகுதியை சேர்ந்த தம்பு ஜெயானந்தன் (வயது – 57) மற்றும் நமசிவாயம் மகேந்திரன் (வயது – 58) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர். குறித்த பகுதிக்கு காரொன்றில் சென்ற குழுவினர், வாள்வெட்டு...

யாழில் சுற்றுவளைப்புத் தேடுதல்களில் இதுவரையில் 11 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்புத் தேடுதல்களின் போது, இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட 4 உந்துருளிகளும் மீட்கப்பட்டுள்ளன. கைதானவர்கள், யாழ்ப்பாணம், மானிப்பாய், சுண்ணாகம் போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது....

நுண்நிதிக் கடன் வசூலிப்பில் ஆவாக் குழு! – அமைச்சர் மங்கள சமரவீர

வடக்கில் இயங்கிவரும் நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் அதிக வட்டிக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டிகளை அறவிடுவதற்காக ஆவா கும்பலை பயன்படுத்தியுள்ளன என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக மீண்டும் தீவிரமடைந்துள்ள வன்முறைகளுடன் தொடர்புடைய பிரதான குழுக்களில் ஒன்றான ஆவா கும்பலுடன், இராணுவம் உட்பட அரச புலனாய்வாளர்களுக்கு...

சதோசாவில் விற்பனையான சீனிக்குள் யூரியா கலப்பு – பொலிசார் அவசர அறிவிப்பு

வவுனியா நகரின் சந்தை பகுதியில் அமைந்துள்ள சதோச விற்பனை நிலையத்தில் நேற்றய தினம் (02.08.2018) காலை 9.00 மணி முதல் மதியம் 3.30 மணி வரை சீனி கொள்ளவனவு செய்த பொதுமக்களை அவற்றை பாவிக்க வேண்டாமேனவும் உடனடியாக திருப்பி வழங்குமாறு வவுனியா பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வவுனியா சதோச விற்பனை நிலையத்தில்...

சாரதி அனுமதிப்பத்திமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு சிறை!!

சாரதி அனுமதிப்பத்திமின்றி மதுபோதையில் சாரத்தியம் செய்த இரண்டு பேருக்கு இரண்டு வார கால சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் வி.இராமகமலன் தீர்ப்பளித்தார். மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 10 பேருக்கு எதிராக கோப்பாய் பொலிஸாரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவர்களில் இரண்டு பேருக்கு எதிராக சாரதி...

நிற­மூட்­டப்­பட்ட போலிப் பருப்பு சந்தைகளில் தாராளம்!! பொதுச் சுகா­தார பரி­சோ­த­கர்­க­ளுக்கு முறை­யி­டு­மாறு அறிவுறுத்தல்!!

நிற­மூட்­டப்­பட்ட தர­மில்­லாத பருப்பு வகை­கள் சந்­தை­யில் விற்­பனை செய்­யப்­ப­டு­வது தெரி­ய­வந்­துள்­ளது என்று பொதுச் சுகா­தார பரி­சோ­த­கர்­கள் சங்­கம் தெரி­வித்­துள்­ளது. இவ்­வா­றான பருப்பு வகை­கள் இரத்­தி­ன­புரி மாவட்­டத்­தில் விற்­பனை செய்­யப்­பட்­டது தற்­போது அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தப் பருப்பை கழு­வும் போது நீர் சிவப்பு நிற­மாக மாறு­வ­து­டன் வேக­வைக்க வழ­மை­யை­விட கூடு­த­லான நேரம் எடுக்­கும். இவ்­வா­றான பருப்பு வகை விற்­பனை...

எதிர்க்கட்சித் தலைவருக்கு வடக்கு முதலமைச்சர் பதிலடி!!

கூரை மேல் ஏறி குறை கூறிப் பிழை பிடிப்பவர் எப்பொழுதும் குதர்க்கமாகவே பேசுவார். நாம் எதுவும் செய்ய முடியாது. அவரது கட்சி அவரை எதிர்க் கட்சிப் பதவியில் இருந்து நீக்கும் அவர் தொடர்ந்தும் அந்தப் பதவியில் இருக்கின்றாரே அதைப் போன்றுதான் முடியாதது என்று எதுவும் இல்லை. இவ்வாறு வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்குப் பதிலடி...

இருதய நோய் காரணமாக நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் இருதய நோய் காரணமாக நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையில் இருதய நோய் காரணமாக 24 மணித்தியாலங்களுக்குள் 150 பேர் வரை உயிரிழக்கின்றனர். வருடத்திற்கு 48 ஆயிரம் பேர் மரணிக்கின்றனர். இவர்களில் 25 வீதமானவர்கள் இளைஞர்கள்....

முதலமைச்சரின் வாக்குறுதி நம்பகத்தன்மை அற்றது: தவராசா

ஐந்து வருடங்களாக அதிகாரங்களை சரிவரச் செயற்படுத்த முடியாத முதலமைச்சர், இரண்டு மாதங்களில் வடக்கு வன்முறையை அடக்குவார் என்பதை நம்ப முடியாது என வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ”பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் வடக்கில்...

முதலமைச்சர் தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை: சிவாஜிலிங்கம்

வடக்கு மாகாண சபை தொடர்பாகவோ, முதலமைச்சர் தொடர்பாகவோ இறுதி தீர்மானம் எதனையும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் எடுக்கவில்லையென வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தொரிவித்தார். நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து...

விஷ்ணுவின் அவதாரமே புத்தர்: யாழில் உபதிஸ்ஸ தேரர் தெரிவிப்பு!

புத்தரும் விஷ்ணுவின் அவதாரம் தான், எனவே வடக்கில் பௌத்த விகாரைகள் கட்டப்படுவதால், தமிழர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பணகல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு வந்த அவர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், இந்துக்களா? கிறீஸ்தவர்களா? பௌத்தர்களா?...

முல்லைத்தீவில் பதற்றம்: மாவட்ட கடற்தொழில் நீரியல்வள திணைக்களம் முற்றுகை

முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்துக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவிவருதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக் கோரி இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் திடீரென அத்துமீறி நீரியல்வள திணைக்களத்துக்குள் நுழைந்துள்ளனர். இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்களினால் நீரியல்வளத் திணைக்களத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் அடித்து உடைக்கப்பட்டுள்ளதாக...

முன்னாள் ஜனாதிபதியின் கடன் திட்டம் யாழில் அறிமுகம்!

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் அரசாங்க வட்டிச் சலுகை கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு யாழில் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதியும், நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் குறித்த நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினால் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற...

அமைச்சர்கள், எம்.பிக்களின் சம்பளம் 215 சதவீததத்தால் அதிகரிப்பு!!!

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைச் சம்பளம் 215 சதவீததத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் அடிப்படைச் சம்பளம் ஒரு இலட்சம் 40 ஆயிரம் ரூபாவாகவும் பிரதி அமைச்சர்களின் அடிப்படைச் சம்பளம் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படைச் சம்பளம் ஒரு இலட்சத்து 20 ஆயிரம்...

எமது மக்களை சுயகௌரவத்துடனும் தன்னம்பிக்கையுடனும் வாழ வழிவகுக்க வாழ்த்துகின்றேன் – முதலமைச்சர்

தொழில் முயற்சியாண்மையை ஆதரிப்பதை போன்று அரசியலிலும் எமது முயற்சியாண்மையை ஆதரிக்க முன்வாருங்கள் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் ‘இலங்கை முயற்சியாண்மை’ தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) யாழில் நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டப்பத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து...
Loading posts...

All posts loaded

No more posts