முதலமைச்சர் தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை: சிவாஜிலிங்கம்

வடக்கு மாகாண சபை தொடர்பாகவோ, முதலமைச்சர் தொடர்பாகவோ இறுதி தீர்மானம் எதனையும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் எடுக்கவில்லையென வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தொரிவித்தார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“தேசிய மாநாடு தொடர்பாக கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய ஒகஸ்ட் மாதம் 10ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பினுடைய ஒருங்கினைப்புக்குழு கூட்டம் எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

ஆகையால் குறித்த கூட்டத்தில் கலந்துரையாட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள அங்கத்துவ கட்சிகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்வதற்கும் இணக்கம் காணப்பட்டிருந்தது.

இந்தவகையில் இனப்பிரச்சனைக்குரிய தீர்வுகள் மற்றும் வடக்கு கிழக்கின் தேர்தல்கள் தொடர்பாகவும் இதன்போது ஆராய்ந்திருக்கிறோம்” என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Related Posts