Ad Widget

முன்னாள் ஜனாதிபதியின் கடன் திட்டம் யாழில் அறிமுகம்!

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் அரசாங்க வட்டிச் சலுகை கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு யாழில் இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதியும், நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் குறித்த நிகழ்வு யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினால் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படுகின்ற செயற்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், இவ் அலுவலகத்தினூடாக யாழ். மாவட்டம் உள்ளிட்ட வட மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளது.

அத்துடன், அலுவலகம் அமைக்கப்பட்ட கடந்த மூன்று வருடங்களில் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பாகவும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவஞானம் சிறிதரன் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் அதிகாரிகள், அரச வங்கிகள் மற்றும் அரச அலுவலகங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்நு கொண்டனர்.

Related Posts