சிறைச்சாலையில் இருந்து கொலைக் குற்றவாளி உட்பட நான்கு கைதிகள் தப்பி ஓட்டம்!

முல்லைத்தீவு நீதிமன்ற சிறைச்சாலை கட்டத்தில் இருந்து நான்கு கைதிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) தப்பி ஓடியுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் 18 ஆம் திகதி செல்வபுரம் பகுதியில் இளைஞன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சுன்னாகத்தை சேர்ந்த கொலைக் குற்றவாளி உட்பட 4 பேர், இவ்வாறு தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன் கடந்த...

புலம்பெயர்ந்தோரை கண்டு அச்சமடையத் தேவையில்லை: இராணுவ தளபதி

புலம் பெயர்ந்தவர்களிடமிருந்து, நாட்டுக்குத் தேவையான நன்மைகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலேயே நாம் சிந்திக்க வேண்டும் என்றும், இவர்கள் தொடர்பில் அச்சமடையத் தேவையில்லை என்றும் இலங்கை இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில், நேற்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “டயஸ்போரா என்பது இலங்கைக்கு மட்டும் உரித்தானவர்கள் அல்ல. ஒவ்வொரு...
Ad Widget

சுவிட்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி, சம்பந்தன் சந்திப்பு!

சுவிட்சர்லாந்தின் முன்னாள் ஜனாதிபதியும், சமஷ்டி சபை உறுப்பினரும், பொலிஸ் மற்றும் நீதி திணைக்களத்தின் தலைவருமான சிமோனெடா சொமாருகா, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது அரசியல் தீர்வு, புதிய அரசியல் யாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன. இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்கப் பணிகளை ஆய்வு செய்யும்...

வடக்கின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார்? – சுமந்திரன்

வடக்கு மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக இன்னும் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த மாகாண சபைத் தேர்தலில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக மீளவும் சி.வி.விக்னேஸ்வரனையே முன்னிறுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வினவியபோது அடுத்த...

யாழ்ப்பாணக் கல்லூரியின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிராக பிரித்தானியாவில் போராட்டத்திற்கு அழைப்பு!

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் இடம்பெற்று வரும் அதிகார துஷ்பிரயோகங்களை நிறுத்துமாறு வலியுறுத்தியும், தர்மகர்த்தா சபையினரால் முன்மொழியப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த கோரியும் பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. கல்லூரி பழைய மாணவர்களின் பிரித்தானிய கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 12ஆம் திகதி Northolt Village Community Centre, Ealing Road, Northolt UB5 6AD பகுதியில் இந்த ஆர்ப்பாட்டம்...

பாதீனிய ஒழிப்பில் வலி.கிழக்கு பிரதேச சபையும், பல்கலைக்கழக மாணவர்களும் இணைவு

வலிகாமம் கிழக்கு பகுதியில் பாதீனிய ஒழிப்பு முயற்சிகளுக்காக பிரதேச சபையும், யாழ்ப்பாண பல்கலைக்கழக திட்டமிடல் சமூகமும் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளன. இதன் முதல்கட்ட முயற்சியாக நேற்று(திங்கட்கிழமை) புத்தூர் நிலாவரை பகுதியில் அதிகளவான பாதீனிய செடிகள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் எல்லைக்குள் அதிகளவான பொது இடங்களில் பாதீனிய செடியின் பரம்பல் அதிகரித்துக் காணப்படுகின்றது....

கலந்துரையாடலில் பங்கேற்கப்போவதில்லை என முல்லைத்தீவு மீனவர்கள் அறிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் நாளை(புதன்கிழமை) எதிர்கட்சித்தலைவர் மற்றும் அமைச்சர் மட்டத்தில் நடைபெறவுள்ள சந்திப்பில் மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் சார்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என முல்லைத்தீவு மீனவர்கள் சம்மேளனத்தின் பிரிதிநிதிகள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதியற்ற கடற்தொழிலினால் தமது வாழ்வாதாரத் தொழில் முழுமையாக பாதிக்கப்;படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு...

மடுமாதாவின் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

நானூறு வருடங்கள் பழைமையான வரலாற்று சிறப்புமிக்க மடுமாதா ஆலயத்தின் ஆவணி மாதத்திருவிழா நேற்று(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இந்தநிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள மடுமாதா திருவிழாவிற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவித்துள்ளார். ஆலய திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், ‘யுத்த காலத்தில் 35 ஆயிரம்...

யாழில் விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ள பாரிய வர்த்தக தொகுதி!

யாழ்ப்பாணம் – பழைய சத்திர சந்தை பகுதியில் புதிய வர்த்தக தொகுதி ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக யாழ் மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ் மாவட்டத்தில் புதிய வர்த்தக தொகுதி ஒன்றினை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தினால் ஆயிரம் மில்லியன்...

யாழ் குடாநாட்டில் 2 வாரங்களில் 22 பேர் கைது!

யாழ் குடாநாட்டில் கடந்த 2 வாரங்களாக இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களில் இதுவரை 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அத்துடன் நேற்று மட்டும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். யாழ் கச்சேரியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தின் போதே...

கூட்டுறவுத் திணைக்களத்தின் காணியை இராணுவம் திரும்ப ஒப்படைக்கவேண்டும்: முதலமைச்சர்

மன்னார் நகரத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள கூட்டுறவு திணைக்களத்தின் காணியை இராணுவம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மதியம் 1.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும்...

பலாலியில் இருந்து திருப்பதிக்கு விமானசேவை – வருட இறுதிக்குள் ஆரம்பம்!

யாழ். பலாலி விமான நிலையத்தினூடாக இந்தியாவின் திருப்பதிக்கான விமான சேவை இந்த ஆண்டிற்குள் ஆரம்பிப்பிதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைப்பதற்காக முதற்கட்டமாக இந்திய அரசாங்கத்தினால் 100 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்திய அதிகாரிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளையடுத்து இந்திய விமான சேவைகளை...

அரசியல்வாதிகளே நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றனர்: சுவாமிநாதன்

சுயநல அரசியல்வாதிகளினாலேயே நாட்டில் நல்லிணக்கம் சீர்குலைந்துள்ளதாக மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்து மத விவகாரம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். நேற்று(திங்கட்கிழமை) கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அமைச்சர், ‘நாட்டின் நல்லிணக்கம் வரலாற்று தொடக்கம் சீராக...

யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகளுக்கான அரச நியமனத்தில் பிக்கு ஒருவரும் தெரிவு!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படும் 334 பட்டதாரிகளில் பௌத்த பிக்கு ஒருவரும் தெரிவாகி உள்ளார். தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சால் பட்டாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்படுகிறது. பட்டதாரிகளுக்கான நியமனம் ஓகஸ்ட் 20ஆம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்கப்படுகிறார்கள் என பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டது. எனினும் அந்தப் பட்டியல் தற்போது அகற்றப்பட்டுள்ளது....

பொலிஸ் மா அதி­பர் பூஜித்த ஜய­சுந்­த­ரவை 100 தடவை பயிற்சி செய்­யு­மாறு பணித்த ஜனாதிபதி

பொலன்­ன­று­வை­யில் சில தினங்­க­ளுக்கு முன்­னர் உடற்­ப­யிற்சி, நடை­பாதை வளா­கத்தை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால திறந்து வைத்த பின்­னர் பொலிஸ் மா அதி­பர் பூஜித்த ஜய­சுந்­த­ரவை 100 தடவை பயிற்சி செய்­யு­மாறு மைத்­திரி பணித்த காணொலி சமூ­க­வ­லைத் தளங்­க­ளில் வேக­மா­கப் பரவி வரு­கின்­றது. பொலன்­ன­றுவை அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டத்­தின் கீழ் உடற் பயிற்சி வளா­க­மொன்றை மைத்­திரி திறந்­து­வைத்­தார். இந்த...

194 பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரி­யர் நிய­ம­னம்!

வடக்கு மாகாண தமிழ் மொழி மூலப் பாட­சா­லை­க­ளில் நில­வும் ஆசி­ரி­யர் சேவை­யின் 3ஆம் வகுப்பு 1 (அ) தரப் பதவி வெற்­றி­டங்­க­ளுக்­குத் தெரிவு செய்­யப்­பட்ட 194 பட்­ட­தா­ரி­க­ளுக்கு ஆசி­ரி­யர் நிய­ம­னம் நாளை ஞாயிற்­றுக் கிழமை வழங்­கப்­ப­ட­வுள்­ளது. யாழ்ப்­பா­ணம் பொது­நூ­ல­கத்­தில் பி.ப. 3 மணிக்கு இடம்­பெ­றும் நிகழ்­வில் நிய­ம­னக் கடி­தங்­கள் வழங்கி வைக்­கப்­ப­ட­வுள்­ளன. வடக்கு மாகா­ணக் கல்வி...

மன்னார் மனித புதைகுழி எச்சங்கள் 440 பைகளில் பொதியிடப்பட்டுள்ளதாக தகவல்!

மன்னார் ‘சதொச’ விற்பனை நிலைய கட்டுமான பணியின் போது மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) 47 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதுவரை மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 440 பைகளில் பொதியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய அகழ்வு பணியின் போது மையப்பகுதியை விடுத்து வளாகத்தின் நுழைவு பகுதியிலேயே அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக எமது...

வீதியில் மோதிக்கொண்ட பொலிஸார்: வைரலாகும் காணொளி!

இலங்கை நகர் பகுதி ஒன்றில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் வார்த்தைகளினால் மோதிக்கொள்ளும் காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வாகனங்கள் நிறுத்த தடைசெய்யப்பட்டுள்ள பகுதியில் வாகனத்தை நிறுத்தியதால், அங்கு கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் சாரதிக்கு எதிராக அபராதம் விதித்துள்ளனர். இதன்காரணமாக இரண்டு தரப்பிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாகனத்தில்...

யாழில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 7 பேருக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 7 பேரும் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 29ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். மானிப்பாய், உடுவில், சுன்னாகம், அளவெட்டி, ஆணைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களே...

திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டும்

திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், இந்துக்களின் புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டும். இதற்கான அமைச்சரவை பத்திரத்தை, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற, இந்து மத விவகார அமைச்சர் நண்பர் டி.எம். சுவாமிநாதன் அமைச்சரவையில் சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய முயற்சி சாத்தியமாக அவசியமான ஒத்துழைப்புகளை வழங்க நான் தயாராக உள்ளேன் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும...
Loading posts...

All posts loaded

No more posts