- Tuesday
- June 16th, 2026
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 27 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவின் தென்கிழக்கு கடற்பகுதியில் வைத்து நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது இராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மீன்பிடி உபகரணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்...
யாழ். போதனா வைத்தியசாலை நீங்கலாக யாழ்.மாவட்ட சுகாதார சேவைகள் பிராந்தியத்திற்குட்பட்ட அனைத்து வைத்தியசாலைகளிலும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் தெல்லிப்பளை வைத்தியசாலையின் புற்றுநோய்ப்பிரிவு சேவையாற்றி வருகின்றது. குறித்த வைத்தியசாலையில் தேவையான 18 வைத்தியர்களில் 9 வைத்தியர்கள் மட்டும் கடமையாற்றுகிறார்கள். அங்கு...
முத்தமிழ் பேரறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாண சபையில் 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 129ஆவது அமர்வு இன்று காலை ஆரம்பமானது. இதில் அறிஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு வடமாகாணசபை இரங்கல் தெரிவித்து, 2 நிமிட மெளன அஞ்சலியினை செலுத்துமாறு அவைத் தலைவர் சீ.வி. கே.சிவஞானம் அறிவித்தார். இதனையடுத்து அனைவரும் எழுந்து நின்று 2...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேநேரம், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது குறிப்பிட்ட மட்டத்துக்கு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும்...
முகமாலை தெற்கு கோவானம் காட்டுப்பகுதியில் மர்ம பொருள் ஒன்று வெடித்ததில் மாணவன் ஒருவன் கையை இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. காட்டுப்பகுதிக்குள் வேலி அமைப்பதற்காக கட்டை தறிக்கச் சென்ற எழுதுமட்டுவாளை சேர்ந்த ஜெயபாலன் நிதர்சன் 18 வயது மாணவனே இதன்போது படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது குறித்த மாணவனின் இடது கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்டுள்ளதாக...
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏழு குற்றவாளிகளினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பிலான மனு ஈவா வனசுந்தர, நலின் பெரேரா, பிரசன்ன ஜயவர்தன ஆகிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை)...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தமை தொடர்பான வழக்கு தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த...
முல்லைத்தீவில் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது, தப்பிச்சென்ற நான்கு கைதிகளில் இருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நால்வர் நேற்று முன்தினம்(செவ்வாய்கிழமை) மாலை 3 மணியளவில் நீதிமன்ற மலசலகூடத்தை உடைத்து தப்பிச்சென்றிருந்தனர். இந்தநிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஏனைய இரண்டு கைதிகளையும் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் விசாரணை என்ற பெயரில் ஒருவரை அழைத்துச்சென்று, கொலை செய்த குற்றத்திற்காக இரண்டு இராணுவத்தினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று(புதன்கிழமை) திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலியில் கடந்த...
தமிழகத்தின் முன்னாள் தலைவரும் தி.மு.க. தலைவருமான கலைஞர் மறைவுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அஞ்சலி செலுத்தினார். “தமது வாழ்வை தமிழர் வரலாற்றின் அத்தியங்களாக பதிவு செய்தவர் கலைஞர். இலங்கை தமிழர்களுக்காக எத்தனையோ போராட்டங்களை கலைஞர் நடத்தியுள்ளார்” என அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் காலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஈரானின் மீதான...
ரயில் பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பைத் தொடர்ந்து, இலங்கை இராணுவத்தின் பேருந்துகள் இன்று (வியாழக்கிழமை) சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு, அவசர சேவையாக இச்சேவை இடம்பெறுமென அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ரயில்வே பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை பத்திரத்திற்கு இவ்வார அமைச்சரவையில் அனுமதி வழங்கப்படவில்லை. இதனையடுத்து நேற்று மாலை...
யாழ்ப்பாணத்தில் அண்மைய காலமாக அதிகரித்து வரும் குள்ள மனிதர்களின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் வகையில், இளைஞர்கள் பத்து பேர் வீதம் உள்ளடக்கி அவர்களோடு மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இணைத்து குழுக்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுக்கள் இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக யாழ்.பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ உயரதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள், அரச...
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் 20 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை 2018ஆம் ஆண்டுக்குள் முன்னெடுக்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி முதல் மே மாதம் 5ஆம் திகதி வரை 25 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்றன. அதில் சுமார் 57...
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இயங்கிய கேக் விற்பனை நிலையம் நேற்று (7) செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப்பட்டது. அங்கு முன்னெடுக்கப்பட்ட தேடுதலில் 3 கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டது. அதனை விற்பனைக்காக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார்” இவ்வாறு யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். “யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்கள் உள்பட இளைஞர்களுக்கு மாவா போதைப்...
தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியருக்கு பிணை வழங்குவதா இல்லையா? என்ற கட்டளை வழங்குவதை மல்லாகம் நீதிவான் நீதிமன்று ஒத்திவைத்தது. அதனால் ஆசிரியரின் விளக்கமறியல் வரும் 14ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்ட மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, அன்று பிணை விண்ணப்பம் மீதான...
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் மைதானத்தில் கால்பந்தாட்ட கோல் கம்பம் சரிந்ததில் சிக்குண்டு கிளிநொச்சி மத்திய கல்லூரி மாணவன் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தை சேர்ந்த கிளிநொச்சி மத்திய கல்லூரியில் 2020 உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் மோகனதாஸ் மதியமுதன் என்ற மாணவனே உயிரிழந்தார். “தனியார் கல்வி நிலையத்திற்கு...
வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவர், க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதுகின்றனர். தென்மராட்சிப் பிரதேசத்தில் அண்மைக்காலமாக வன்முறைக் கும்பலின் அடாவடிகள் அதிகரித்திருந்தன. அதற்கு சாவகச்சேரி பொலிஸாரும் உடந்தை என குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த 4ஆம் திகதி சனிக்கிழமை மானிப்பாய் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, சாவகச்சேரி, சரசாலை, மறவன்புலோ பகுதியைச் சேர்ந்த 10...
யாழ்ப்பாணம் சுழிபுரம், காட்டுப்புலத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவின் வழக்குநேற்று மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சிறுமியின் உறவினரான பெண் ஒருவரும், றெஜினாவுடன் சம்பவ தினத்தன்று பாடசாலையில் இருந்து சேர்ந்து வந்த நண்பியிடமும் சாட்சியங்கள் பெறப்பட்டன. வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி சிறுமி றெஜினா கிணறு...
அமைச்சரவையில் அங்கம் வகித்துக்கொண்டு அரசாங்கத்தின் பங்காளியாக உள்ள ஒரு கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமக்கு வழங்குமாறு மஹிந்த அணியினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் கடுமையாக வாதிட்டுள்ளனர். இதன்போது குறுக்கிட்டு பதிலளித்த சுமந்திரன், ஐக்கிய மக்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
