Ad Widget

20,000 பட்டதாரிகளுக்கு 2018இற்குள் அரச நியமனம்!!

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் 20 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை 2018ஆம் ஆண்டுக்குள் முன்னெடுக்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி முதல் மே மாதம் 5ஆம் திகதி வரை 25 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்றன. அதில் சுமார் 57 ஆயிரம் பட்டதாரிகள் சமுகமளித்தனர்.

கோரப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் 20 ஆயிரம் பட்டதாரிகளை அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் இணைத்துக் கொள்ள தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்தது. எனினும் பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்ட புள்ளித்திட்டத்தில் குறைபாடுகள் உள்ளதனால் வடக்கு மாகாண மாவட்டங்கள் உள்பட நாட்டின் பல பல மாவட்டங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இதனால் பட்டதாரிகள் நியமனம் அமைச்சரவையால் இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்குள் 20 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை 2018ஆம் ஆண்டுக்குள் முன்னெடுக்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சுக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

Related Posts